செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

எல்லோரும் தண்ணி அடிக்கனும்

எல்லோரும் நல்லா தண்ணி அடிக்கனும்னே.

ஆம்பளை பொம்பளை பெரியவுக சின்னவுக பேதமில்லாம எல்லோரும் தண்ணி அடிக்கனும்.

காலையிலயே தண்ணி அடிக்கணும்னே அதுதான் ரொம்ப நல்லது.

தண்ணி எவ்வளவுக்கு எவ்வளவு அடிக்கிறிங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

நீங்க தண்ணி அடிச்சா உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் நல்லது.

என்னடா இப்புடி சொல்லுறானே நான் யாருன்னு பாக்கனுமானே.....




நாந்தான்னே நீங்க கட்டிக்கிட்டிருக்கிற வீடு


CURING தண்ணி அடிச்சாத்தான்னே

நீங்க கட்டுற வீட்டுக்கு நல்லது.காங்கீரிட் பூச்சு செங்கல் கட்டுமானம் இப்படி சிமிட்டி கலந்து செய்யுற எந்த வேலையானாலும் வேலை முடிந்த மறுநாள் கண்டிப்பா அது மேல தண்ணி அடிங்க. அப்பத்தான் சிமிட்டி வேதியியல் வினை (HYDRATION) மூலமா மணல் மற்றும் ஜல்லியோட பின்னிப்பினைஞ்சு வலிமையா மாறும்.விரிசல் வெடிப்பு ஏதும் கட்டிடத்தில் வராது.

காங்கீரிட்டா இருந்தா குறைஞ்சது 14 நாளும் மற்ற வேலைகளுக்கு குறைந்தது 1வாரமும் தண்ணி அடிங்க.உத்திரம்(beam),தூண்(column) போன்ற கட்டுமானத்தில் கோனிச்சாக்கை சுத்தி வைச்சு அதுமேல தண்ணி அடிங்க.

அப்புறம் நீங்க எதிர்பார்த்து வந்தது எதுவும் இல்லைன்னு எம்மேல கோச்சுக்காதிங்கன்னே.என்னை ஏதாவது பண்ணும்னு நினைச்சா கீழே தமிழிஷில்ல ஒரு குத்து குத்திட்டு போங்கன்னே.


3 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

//ஏதாவது சொல்லிட்டு போங்க//


எத்தினி வாட்டி சொல்லணுமுங்க? ஒரு ஏழுவாட்டி சொல்லிட்டுப் போறன் இப்ப...

ஏதாவது
ஏதாவது
ஏதாவது
ஏதாவது
ஏதாவது
ஏதாவது
ஏதாவது

துபாய் ராஜா சொன்னது…

நல்லாத்தான் யோசிக்கறீங்க...

படங்களும் பொருத்தமாதான் போட்டிருக்கீங்க...

நான் நிறைய (வீட்டுக்கு) தண்ணி அடிச்சிருக்கேன் தங்கராசண்ணே.... :))

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி அன்பின் ராஜா
நன்றி பழமை பேசி அவர்களே
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க