சனி, 31 அக்டோபர், 2009

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?


ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. சில So called தமிழ் காவலர்கள் இதை பின்பற்றாமல் இரண்டு மூன்று என மனைவியர் வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான தமிழர்கள் ஒன்றே போதும்!!!! என தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றி வருகின்றனர்.


சில பேர் என்னிடம் கேட்டதுண்டு "தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும் என்னால் முடிந்தவரை அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் சொல்லுகிறேன்.அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் சிறீ சதானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.


"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்


பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.


சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்


சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன. இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்


1.நெற்றி (பிரம்மந்திரா)


2.தொண்டைக் குழி (ஆங்ஞை)


3.மார்புக்குழி (விசுத்தி)


4.தொப்புள் குழி (மனிப்புரம்)


5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)


6.மலக்குழி (மூலாதாரம்)


இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர்.மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.


முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.


மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.


இதைத்தான் கந்தகுருகவசத்தில் சதானந்த சுவாமிகள் சொல்லுகிறார்


"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்


இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.


ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான்.


இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்


"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்


தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி


எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம்.


ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.


இறுதியாக ஒன்று


கடவுள் ஒருவரே


அவர் எவராலும் பெறப்படவும் இல்லை


அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.


எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு


மனைவியர் இரண்டு என்பது


இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர


வேறொன்றும் இல்லை.வெள்ளி, 16 அக்டோபர், 2009

தீபாவளி தமிழர் பண்டிகைதானா?

நாளை தீபாவளி
எப்போதும் ஐப்பசியில் வரும் தீபாவளி இந்த வருடம் மட்டும் அதிசயமாய் புரட்டாசியிலேயே வருகிறது.

நீண்ட நாட்களாகவே எனக்கு தீபாவளி தமிழர் பண்டிகைதானா என ஐயம் ஒன்று உண்டு. மற்ற எந்த பண்டிகையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தீபாவளிக்கு இருக்கும் சிறப்பு,முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காலம் காலமாக நமக்கு சொல்லப் பட்ட கதையின் படி கிருஷ்ன பகவான் நரகாசுரனை கொண்று மக்களுக்கு சுபிட்சம் கொடுத்ததாகவும் அதனை கொண்டாடவே மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி புத்தாடை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்கிறார்கள் என நம்புகிறோம்.

கிருஷ்னர் தமிழர்களின் கடவுள் கிடையாது. கொல்லப்பட்ட நரகாசுரன் தமிழ்நாட்டிலும் வசிக்கவில்லை. அதனால் தமிழர்களுக்கு அவன் தொல்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை.பின் எப்படி தமிழ்நாட்டில் தீபாவளி பிரதான பண்டிகையாயிற்று.

தீபாவளி மதத்தின் பேரால் வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பண்டிகை என்பதே சரி.

தீபாவளி மட்டுமல்ல தமிழர்களுக்கு அந்நியமான விநாயகர் விஜர்சன் ஊர்வலம், சரஸ்வதி பூஜா, மாகாவீரர் ஜெயந்தி இப்படி பல இறக்குமதி செய்யப்பட்ட திருநாள்கள் தமிழ்நாட்டில் கலந்துள்ளன.

இவற்றுக்கான மூல காரணம் யார் எனப் பார்த்தால் அவர் அண்டைமாநிலமான கேரளாவின் காலாடியில் பிறந்த ஆதிசங்கரர் என்னும் முதல் சங்கராச்சாரியே ஆவார். அவரே தமிழகத்தில் கௌமாரம் என்றும் (முருக கடவுள் வழிபாடு) இந்தியாவின் வடபகுதிகளில் சைவம் (சிவ வழிபாடு) வைணவம் (விஷ்னு வழிபாடு) எனவும் மகாராட்டிரத்தில் கானபத்தியம் (கணபதி வழிபாடு) எனவும் மேற்கு வங்காளத்தில் சாக்தம் (சக்தி வழிபாடு) எனவும் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு(அக்னி வருணன் சூரியன் பாம்பு போன்றவை)எனவும் இருந்த பல்வேறு தெய்வ வழிபாடுகளை இந்துமதமாக கடவுள்களுக்குள் ஒரு உறவு முறையைக் கற்பித்து ஒன்று சேர்த்தார்.

தமிழர்களாகிய நாம் விஷ்னு சிவன் பார்வதி லெட்சுமி கணபதி துர்க்கை ராகு கேது என கணக்கில்லாத இந்து கடவுள்களை கும்பிட்டும் அவர்களது முக்கிய வழிபாட்டுத் தினங்களுக்கு அரசு விடுமுறை வழங்கியும் வருவது போல ஏதாவது வடமாநிலத்தில் தமிழ்கடவுள் முருகனுக்கு வழிபாடோ அல்லது வைகாசி விசாகத்துக்கோ பங்குனி உத்திரத்துக்கோ தைப்பூசத்துக்கோ விடுமுறை வழங்கியதாக கேள்விப்பட்டதுண்டா?

அண்டை மாநிலங்களை சொல்வானேன். நம் தமிழ்நாட்டிலேயே நம் தமிழ் கடவுள் முருகனின் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது என்பது இன்னும் வருந்ததக்க விடயம் தான்.
தமிழர்களுக்கு என பிரத்தியோகமான தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டு என அரசு அறிவித்த பின்னும் எத்தனை தமிழர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இப்படி பல்வேறு ஐயப்பாடுகள் எனக்கு தீபாவளிப் பண்டிகையைப் பற்றி இருந்தாலும் ஜவுளி பட்டாசு இனிப்பு வீட்டு உபயோகப் பொருட்கள் இப்படி பற்பல தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வியாபாரத்தினையும் ஓரளவு செல்வத்தினையும் மகிழ்சியையும் இப்பண்டிகை கொண்டு வருவதால் இந்த நன்மைகளை முன்னிட்டு வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களாகிய நாம் இப் பண்டிகையையும் வரவேற்போம்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.திங்கள், 12 அக்டோபர், 2009

SMS மொக்கைகள் - 3

1.நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?
திருடன்: சதா அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.
-------------------
2.நச்சுன்னு ஒரு உண்மை சொல்லுறேன் கேட்டுக்குங்க.
என்னதான் 220CC பல்சாரிலும் 350CC ராயல் என்பீல்டுலயும் இந்த பசங்க சுத்தினாலும் ஃபாலோ பண்ணப்போறது என்னவோ 80CC ஸ்கூட்டிதான்.
----------------------
3. 143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.
I love you வா ம்ஹூம் இல்லை
I hate you வா இல்லவே இல்லை
I like you வா ம்ஹூம்
I miss you வா இல்லை
I wish you வா இல்லை இல்லை இல்லை
சரி நான் சரியாக சொல்லுறேன்
143ன்னா
-
-
நூத்தி நாப்பத்து மூன்று. (அய்யோ அடிக்க வராதிங்க)
--------------
4.நண்பா உன்னைப்போல் என் கண்ணீர் துடைக்க ஒருவன் இருந்தால்
-
-
100 விஜய் படம் வந்தாக் கூட துணிந்துப் பார்ப்பேன்.
------------------
5.ஹாமாம் சோப் ரீ மிக்ஸ் விளம்பரம்
பவித்ரா கடைக்குப் போயி ஒரு குவார்ட்டர் சரக்கு வாங்கிட்டு வர்றியாம்மா?
சரிம்மா
அய்யய்யோ என் பொண்ணுகிட்ட என்ன சரக்குன்னு சொல்லலியே
வாந்தி வருமே
தலைவலிக்குமே
ஒவர் ஹேங் ஆகுமே
போதை ஏறாதே
பவித்ரா ..........
என்னம்மா (பவித்ரா கையில் ஒல்ட் மங்குடன்)
ஓல்ட் மங்கிருக்க பயமேன்.
----------------
6.Girls Special
கேரளா : அழகிய பெரிய ரெண்டு கண்கள்
கர்நாடகா: கரிய நீண்ட கூந்தல்
ஆந்திரா : கூரிய நீண்ட மூக்கு
பஞ்சாபி : பாதாம் பருப்பு நிறம்
தமிழ்நாடு: ஒரு மண்ணும் இல்லன்னாலும் ஓவரா சீன் போடுறது.
இப்படிக்கு சீன் போட்டதில் சீரழிந்த வாலிபர் சங்கம்.
-----------------
7.தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரு அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்
அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?
தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.
-------------------
8.தண்ணீர் தெளிச்சு ஏன் கோலம் போடுறாங்க தெரியுமா?
ஏன்னா
கோலம் போட்டுட்டு அப்புறம் தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்.
-----------------
9.காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
இப்பத்தான் தெரியுது நம்ம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு.
-----------------
10.ஹிஸ்டரி டீச்சர்:ராஜா ராம் மோகன் ராய் யாரு?
விஜய்: அவுங்க நாலு பேரும் பெஸ்ட் பிரண்டு டீச்சர்.
----------------
11.ஜோசியர்: உங்க ஜாதகப் படி நீங்க ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கனுமே
ஜோசியம் பார்ப்பவர்: ஆமாம் சாமி இப்ப உங்களுக்கு கொடுக்கக் கூட கையில் பத்துப் பைசா இல்லை.
-----------------
12.படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்
படிப்புத்தான் வரல
தூக்கமாவது வருதேன்னு நினைச்சு
சமத்தா தூங்கிடனும்.
---------------
13.தினம் ஒரு kural படிக்கனும்
எனவே இன்னிக்கு இந்த kural படிங்க
"மியாவ் மியாவ் "
சரியா நாளைக்கு வேற kural படிக்கலாம் என்ன?(சரி சரி அழக்கூடாது)
---------------
14.ஒரு அசிஸ்டண்ட் கமிசனர் அவரோட பையன் ஸ்கூல் புராஜக்ட்டுக்காக ஒரு கடையில் டையோடு வாங்கினாரு வாங்கின மறுநாளு டெபுடி கமிசனரா புரோமோசன் ஆயிட்டாரு
எப்படி
எப்படின்னா
டையொடு diode is a good rectifier
it converts AC to DC
-----------------
15. கடைசியா ஒரு தீபாவளி
மொக்கை
பையன்: அம்மா எல்லா வெடியும் தீந்துப் போச்சு இந்த சிவப்பு கலர் பெரிய வெடியை விடவா?
அம்மா: சனியனே அது கேஸ் சிலிண்டருடா.....
--------------

வெள்ளி, 9 அக்டோபர், 2009

SMS மொக்கைகள் - 2

1.மனசு இருந்தா SMS அனுப்புங்க...
அன்பு இருந்தா பிக்சர் மெசேஜ் அனுப்புங்க
காசு இருந்தா CALL பண்ணுங்க...
எல்லாம் இருந்தா .....

உங்க செல்லை கொரியரில் அனுப்புங்க ஹி ஹி....
---------------------
2.ஒரு பையன் ரோட்டுல தும்மிகிட்டே போறான்
ஏன்?
ஏன்னா
அவன் பொடிப் பையன்.
----------------
3.நாம் வாழனும்னா எத்தனைப் பொண்ணை வேனும்னாலும் காதலிக்கலாம்
ஆனா சாவனும்னா
ஒரே ஒரு பொண்ணை
கல்யாணம் கட்டிக்கிட்டாப் போதும்.
--------------------
4.பசங்க காதலுக்கும் பொண்ணுங்க காதலுக்கும் என்ன வித்தியாசம்.
பசங்க பிரண்டுன்னு சொல்லிட்டு பின்னாடி காதலிப்பாங்க
பொண்ணுங்க காதலிச்சுட்டு பின்னாடி பிரண்டுன்னு சொல்லுவாங்க.
---------------
5.நண்பா நேற்று என் கனவில் நீ வந்தாய்
கட்டுக்கட்டாக பணத்தினை எண்ணிக்கொண்டிருந்தாய்
ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை
அது என்னவென்றால்
ஏன் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாய்?
---------------
6.ஒருவர். ஹலோ சிங்ஜி ஏன் உங்க புது வீட்டுக்கு பாடி ஸ்பிரே அடிக்கிறிங்க
சர்தார். ஏன்னா இது வியர்வை சிந்தி கட்டிய வீடு.
------------------
7.எல்லோரும் காலை வணக்கம் எப்படி சொல்லுவாங்க
அ) கோயமுத்துர்காரர்:ஏனுங்க குட்மாரிங்க்னா
ஆ)திருநெல்வேலிகாரர்: ஏலே குட்மார்னிங்க்லா
இ)மதுரக்காரர்: எலே மக்கா குட்மார்னிங்க்யா
ஈ)நம்ம பாசை: ஓ சாமியோவி எந்திரி சாமியோவ்..
--------------------
8.பெண்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
1.சோனி எரிக்சன்(சவுண்ட் பார்ட்டி-வாயாடிப் பொண்ணு)
2..சாம்சங் உசார் பார்ட்டி (மடக்குறது கஷ்டம்)
3.நோக்கியா ரீல் பார்ட்டி(மடக்கிறது ஈஸி மேய்க்கிறது கஷ்டம்)
4.மோட்டாரோலா மீடியம் (மொக்கை பிகர்)
5.சைனா செட் சூப்பர் பிகர் (ஆனா சிலிப் ஆனா சிதறிடும்)
---------------
9.திருடர்கள் ஜாக்கிரதை என்னும் தலைப்பில் கவிதை எழுத கண் மூடி ஒரு நிமிடம் யோசித்தேன் விழித்துப் பார்த்தால்
என் பேனாவை காணவில்லை.
--------------
10.இப்ப நீங்க பைசா செலவில்லாம டென்னிஸ் பார்க்கப் போறிங்க
IS IS IS IS IS IS IS IS IS IS
பாத்தாச்சா டென்னிஸை
மீண்டும் வருகிறென்.
நன்றி
வணக்கம்.
------------------

சனி, 3 அக்டோபர், 2009

SMS மொக்கைகள்

1.தங்கச் செயினை உருக்கினால் தங்கம் வரும்
வெள்ளிச்செயினை உருக்கினால் வெள்ளி வரும்
அதுமாதிரி சைக்கிள்செயினை உருக்கினால் சைக்கிள் வருமா?


2.ஒருவன்: பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது
கேட்பவர்: ஏன் என்னாச்சு
ஒருவன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னா அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது.


3.அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை
அதனால் எனக்கும் எண்னைப் பிடிக்கவில்லை.
ஆகவே

-

-

ரெண்டு பேரும் எண்ணை இல்லாமல் தோசை சுட்டு சாப்பிட்டோம். ஒகே.


4.பெண் நண்பி
காதலி
மனைவி
சின்னவீடு
இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன?

மிக எளிது முறையே
pre paid
post paid
life card
coin box
இதுக்குள்ள வித்தியாசம் தான்.


5.ஒரு ஏழை மீனவன் கடலில் சென்று மீன் பிடித்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொன்னான். ஆனால் வீட்டில் கேஸ் இல்லை, மின்சாரம் இல்லை மண் எண்ணையும் இல்லை
எனவே சமைக்க முடியாமல் மீனை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டான்.
கடலில் விழுந்த மீன் துள்ளி எழுந்து கத்தியது.

"தி மு க வாழ்க"


6.ஓட்டுப்போடுவதற்கான அதிகாரபூர்வ வயது 18
திருமணத்திற்கான அதிகாரபூர்வ வயது 24
இதிலிருந்து என்ன தெரியுது.

IT IS TOUGHER TO CONTRL A LADY THAN A COUNTRY
--------------------------------------------------
இனிமேல் வருவது மரண மொக்கைகள்

1.வேட்டைக்காரன் படம் வெளியாகும் நாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
அ) குழந்தைகள் பெரியவர்கள் நோயாளிகள் பெண்கள் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.
ஆ)ஒவ்வொரு டிக்கட்டுடனும் இரண்டு சாரிடோன் மாத்திரையும் ஒரு டைகர் பாம் அல்லது அமிர்ந்தான்சன் வழங்கப்பட வேண்டும்.
இ)திரையரங்கு முன்பு கண்டிப்பாக மருத்துவர் குழு அடங்கிய ஒரு ஆம்புலன்சு நிறுத்தப்பட வேண்டும்.
ஈ)ஒரு முறைக்கு மேல் திரும்பிப் பார்ப்போருக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது.
----------------------
2.வடிவேல்: டேய் நான் தான் தமிழ்நாட்டுல பெரிய காமடியன் தெரியுமா?
விவேக்: போடா நான் தான் பெரிய காமடியன்
சந்தானம்: டேய் ரெண்டு பேரும் பாத்துப் பேசுங்கடா பக்கத்துல விஜய் இருக்காரு.
---------------------

3.வேலைக்கு ஆட்கள் தேவை
சம்பளம் மாதம் 15000 ரூபாய்
இடம்: சென்னை ஏ வீ எம் ஸ்டுடியோ
வேலை: சான்சு கேட்டு விஜய் வந்தால் குச்சியால விரட்டனும்.
----------------------
4.அமெரிக்கா vs இந்தியா படை நிலவரம்
அமெரிக்கா
10000 அனுகுண்டுகள்
6000000 படைவீரர்கள்
10000 கவச வண்டிகள்
120000 வானூர்திகள்

இனி இந்தியா
ஒரு மரியாதை அல்லது வில்லு பட டிரய்லர்
மவனே மொத்த அமெரிக்காவும் குளோஸ்டா!
-------------------
5.விஜய் பட அதிசயங்கள்
அ) ஒரு கண்ணீர் துளி கோமா நிலையில் உள்ள ஒருவரது உயிரைக் காக்கும் (பிரண்ட்ஸ்)
ஆ)அரை இறுதியில் தோற்றாலும் இறுதிப் போட்டியில் விளையாடலாம் (கில்லி)
இ)சூப்பர்மேன் கூட கயிறு இல்லாமல் அந்தரத்தில் 500 அடிக்கு மேல் பறந்ததில்லை (குருவி)
ஈ)ஒரு பிச்சைக்காரன் கூட ஒருமாதம் தொடர்ந்து ஒரு பெனியனைப் போட்டதில்லை (மதுர)
--------------------------

வியாழன், 1 அக்டோபர், 2009

அண்ணலுக்கு அஞ்சலி

நாளை அண்ணலின் பிறந்த நாள்அஹிம்சை.சத்தியாகிரகம்,தீண்டாமை ஒழிப்பு இப்படி அண்ணல் பாருக்கு வழங்கிய நன்னெறிகள் பற்பல.
இத்துடன் சமத்துவம் காக்க அண்ணல் அவணிக்கு வழங்கிய ஒரு புதுமைதான் வட்ட மேஜை மாநாடு.
அண்ணல் வட்டமேஜை மாநாட்டை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பெரும்பாலும் மாநாடுகள் செவ்வக மேஜையில்தான் நடைபெறும்.
செவ்வக மேஜையில் உயர்ந்தவர் மேஜையின் குறுக்கே நடுநாயகமாய் வீற்றிருக்க அவரது அடிப்பொடிகள் அருகருகே அமர்ந்து விவாதிக்கவும் சமனில்லாதோரை மேஜையின் எதிர்மூலைக்கு அனுப்பி அவர் பேசுவதற்கு வாய்ப்பு கூட கொடுக்காத பாகுபாடு நிலையும் இந்த செவ்வக மேஜையில் உண்டு.
ஆனால் அண்ணலை முதன் முதலில் பேச்சுவார்த்தைக்காக இங்கிலாந்து அரசாங்கம் அழைத்த போது அண்ணல் விதித்த நிபந்தனைகள் இரண்டு மட்டும்தான்.
1.இதே எளிய அரை ஆடையுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வருவேன்.
2.பேச்சு வார்த்தை நடைபெறும் மேஜை வட்டமாக இருக்க வேண்டும்.
வட்டமேஜையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடு கிடையாது. எல்லோரும் சமம்தான்.
சமத்துவம் போற்றும் இந்த புதுமையை தந்த அண்ணல் காந்தியின் புகழுக்கு ஈடு இணை கிடையாது.
மகாத்மா இந்த மண்ணிருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.
வாழ்க நீ எம்மான்.