புதன், 26 ஆகஸ்ட், 2009

இவ்வளவும் தாங்கினோம் ஆனால் இதை மட்டும் தாங்க முடியலியே

எங்கள் வீட்டில் அண்மைக்காலமாக ஒருவர் செய்து வரும் அடாவடிகள்

1.வறண்டுபோன கிணற்றிலிருந்து பலமணித்துளிகள் போராடி மேல்நிலைத்தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரினை யாரும் எதிர்பாரா நேரத்தில் குழாய்களை திறந்து வெளியேற்றுதல்.

2.பல மணி நேரம் செலவழித்து அழகுடன்(?) என் மனைவி போட்ட வாயிற்கோலங்களை சில நிமிடங்களில் அழித்தல்.

3.குடம் 3 ரூபாய் வீதம் வாங்கிய குடிநீரில் கோல மாவினைக் கொட்டுதல்.

4.வீட்டில் போதுமான அளவு கழிப்பறை இருந்தும் படுக்கையறை மற்றும் அடுமனையை கழி(ளி)வறையாக பாவித்தல்.

5.மதிய நேரத்தில் உணவருந்தி ஓய்வெடுக்கும் பெரியவர்களை முகத்தில் அறைந்து அல்லது முடியைப் பற்றி இழுத்து தூக்கம் கலைத்தல்.

6.ஆர்வமுடன் தொலைக்காட்சித் தொடர்களை கண்டுகளிக்கும் போது சேய்மை கட்டுப்படுத்தி (REMOTE CONTROL) மூலம்
தொலைக்காட்சியை அணைப்பது.

7.வீட்டிற்கு வரும் பால் தயிர் நெய் வியாபாரிகளிடமிருந்து தான் மட்டுமே பொருட்களை வாங்குவேன் என அடம் பிடிப்பது.

8.தொலைபேசி மணி அடித்தால் பாய்ந்து சென்று எடுத்து எதுவும் பேசாமல் எதிர்முனையினரை மிரள வைப்பது.

9.எந்நேரமும் வீட்டில் நிர்வாணமாக அலைதல்.உடைகளை அணிவித்தால் பக்கத்துத் தெருவில் கழட்டி எறிந்து உடையை காணவில்லை என கூறுதல்

10.சலவை சோப்பு குளியல் சோப்பு பற்பசை என அனைத்து பொருட்களின் மேலுறையை தான் மட்டுமே அகற்றுவேன் என அடம் செய்வது

இவை சில மாதிரிகள் மட்டுமே இது போல இன்னும் சொல்லவொன்னா பல தொல்லைகளை இவர் கொடுத்துவந்தாலும் இதுவரை தாங்கிக் கொண்டோம். ஆனால் இப்போது புதிதாக இவர் செய்யும் எல்லை கடந்த தொல்லை ஒன்றை மட்டும் தாங்க முடியவில்லை.அது
விஜய் பட பாடல்களை மட்டும் தொலைக்காட்சியில் பார்ப்பது குறிப்பாக வில்லு மற்றும் குருவி படப் பாடல்களை மிக துணிவுடன் பார்த்து ரசித்து வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சித் தொடர்களை பார்க்க வரும் அக்கம் பக்கத்தினரையும் மிரள வைப்பது.

7 கருத்துகள்:

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

மஸ்தான் நீங்க கீழக்கரையா?

supersubra சொன்னது…

பையனா பேரனா

Ram சொன்னது…

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

supersubra சொன்னது…
பையனா பேரனா

அவ்வ்வ்வ்வ் ஒரு "யூத்" கிட்ட போயி இப்படி கேட்கிறிங்களே தலைவா
பையன் தான் என் மகனைப் பற்றித்தான் இப்பதிவு

பழமைபேசி சொன்னது…

இஃகிஃகி

துபாய் ராஜா சொன்னது…

நீங்க கடைசியா சொன்ன விஷயத்தை யாராலுமே தாங்கமுடியாதுண்ணே...... :))

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி நண்பர் துபாய் ராஜா அவர்களே
நன்றி திரு பழமைபேசி அவர்களே

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க