புதன், 30 டிசம்பர், 2009

"வேட்டைக்காரன்"- விமர்சனம்

எங்க வீட்டில் ஒரு சேட்டைக்காரர் இருக்கிறார். அவர் இந்த வேட்டைக்காரனின் தீவிர ரசிகர். இதைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.


வேட்டைக்காரனைப் பார்க்க தீடிரென எங்க வீட்டு சேட்டைக்காரர் அடம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து இராமநாதபுரம் ரமேஷ் திரையரங்குக்கு செல்ல வேண்டியதாயிற்று.ரமேஷ் தியேட்டரின் கேண்டின் காபி போல ஆறி அவலான ஒரு கதை. இயக்குனர் பாபு சிவன் கதைக்காக ரொம்ப யோசிக்கவில்லை. விஜயின் பழய திருப்பாச்சி கதையையே கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கிறார். என்ன திருப்பாச்சியில் விஜய் திருப்பாச்சியிலிருந்து சென்னை செல்வார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்கிறார்.
பிளஸ் டூவில் நான்கு வருடம் பெயிலான கதாநாயகனுக்கு 21 வயதுதான் இருக்கும். 30க்கு மேல் போன விஜயை 21 வயது கல்லூரி மாணவனாக கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு வேளை பிளஸ் டூவில் நான்கு வருடம் பெயிலானது போல் ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு நான்கு வருடம் பெயிலாயிருப்பார் போலும் கதை போகிற வேகத்தில் இயக்குநர் இதை சொல்ல மறந்து விட்டார்.அருந்தததீயில் கலக்கிய அனுஷ்காவிற்கு இதில் மிஸ்டர் பாரத் படத்தில் அம்பிகா கலக்கியது!!! போல ஒரு கனமான வேடம். மிக மிக நிறைவாக செய்திருக்கிறார்!!!!.சத்யன் இறந்து அவரது உடல் பெட்டியில் வரும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் அண்ணன் மகன் பிரபு "சித்தப்பா இப்ப ஒரு காமடி வருது பாருங்க"ன்னான். என்னடான்னா விஜய் அழுவது அவனுக்கு காமடியாம். சின்னப் பையன் துள்ளாத மனம் துள்ளும் படத்தினை பார்த்திருக்க மாட்டான் போல இருக்கிறது. அவனுக்கு பழய வேட்டைக்காரன் எம்.ஜி. ஆர் அழுவதை ஒரு நாள் காட்டினால் அவன் கருத்தினை மாற்றிக் கொள்வான் என நினைக்கிறேன்.என்கவுண்டருக்கு தப்பி நதியில் ஓடி அருவியில் விஜய் குதிக்கும் காட்சியைப் பார்க்கும் போது இயக்குநர் பாபு சிவன் நம்ம பிரேவ் ஹார்ட் புகழ் மெல் கிப்ஸனின் அகோபலிப்டா படத்தினைப் பார்த்திருப்பது சட்டென்ன பிடிபடுகிறது. குதிப்பது விஜய்தானா என நான் சந்தேகம் எழுப்ப உடனே என் பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி என் விலாவில் இடித்து " அவருக்கு பங்கி ஜம்பெல்லாம் தெரியும். ஏற்கனவே குஷி படத்தில் குதித்து இருக்கிறார்" என என் சிற்றறிவுக்குப் புரிய வைத்தாள். அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. எப்படி எங்க வீட்டு சேட்டைக்காரர் வேட்டைக்காரனின் ரசிகர் ஆனார் என்பது. "தாயைப் போல் பிள்ளை".


ஹீரோக்களுக்கு பில்ட் அப் கொடுப்பதற்காக ஒரு குத்துலயே ஆட்டோ மேல் விழுந்து கை கால்களை உடைச்சுகிட்டு விழும் சண்டை நடிகர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். இந்தப் படத்துல உண்மையிலேயே ரொம்ப உழைச்சிருக்காங்க. காட்டுல சிங்கத்தோட ஒரு அடி 140 பவுண்ட் எடை இருக்குமாம். படத்தப் பார்க்கும்போது விஜயின் ஒரு அடி 140 டன் இருக்கும் போல இருக்கு.


படத்துல உண்மையான ஒரு ஆறுதல் பங்கெல்லாம் வச்சிகிட்டு மிரட்டியிருக்கிற செல்லா கேரக்டர். Really Hats off.படம் பார்த்துட்டு வந்த மறுநாளு (நேத்து ) K டிவில மோனிஷ என் மோனலிசா படத்தினை எங்கண்ணன் பையன் பிரபு உட்கார்ந்து பாத்துகிட்டு இருந்தான். "எப்படிடா இந்த படத்தல்லாம் இவ்வளவு தைரியமா பார்க்குற எங்கிருந்துடா உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது"ன்னு கேட்டா அதுக்கு அவன் சொல்லுறான் " எல்லாம் வேட்டைக்காரன் படம் பாத்ததுனாலதான் சித்தப்பா"ன்றான். ஆஹா இந்த தமிழ் இளைய சமுதாயம் எதையும் தாங்கும் இதயம் பெற நம்ம விஜய் குருவி,வில்லு, வேட்டைக்காரன் அப்படின்னு அடுத்தடுத்து முயற்சி செஞ்சுகிட்டு இருக்கிறத நினைக்கும் போது அவரை எவ்வளவு பாரட்டுனாலும் தகும்.


ரமேஷ் தியேட்டர்ல ஒரு டிக்கட் விலை 100 ரூபாய். சேட்டைக்காரர் அடம் பிடிச்சதுனாலயும் மொஹரம் பண்டிகை விடுமுறைக்காக அண்ணன் பிள்ளைங்க தங்கச்சிப் பிள்ளைங்க எல்லாம் வீட்டுக்கு வந்ததாலயும் படை பட்டாளத்தோட தியேட்டருக்கு போனதுல 2000 ரூபா அவுட்டு.

இருந்தாலும் " நான் அடிச்சா தாங்க மேட்டேய் நாலு மாசம் தூங்க மேட்டேய் வீடு போயி சேர்ர்ற மேட்டேய்"ன்னு எங்க வீட்டு சேட்டைக்காரர் அப்பப்ப படிக்கும் போது படம் பாத்ததுல ஒரு சொல்லவொன்னா திருப்தி கிடைக்குது.
செவ்வாய், 24 நவம்பர், 2009

தமிழக சாலை அவலங்கள்

மேலே உள்ள படங்கள் உழுது போட்ட வயலோ அல்லது ஏரி கண்மாய் நிலங்களோ அல்ல. இவை தமிழகத்தின் பிரதான சாலைகள்.
50 நாட்கள் தாமதமாக ஆரம்பித்த பருவமழை 5 நாட்கள் கூட சரியாக பெய்யவில்லை. ஆனால் இருந்த சாலைகள் எல்லாம் இது போல் பயனற்றதாக பல நகரங்களில் ஆகிவிட்டது.
குறிப்பாக இராமநாதபுரம் நகரத்தில் வசிப்பவர்களை கேட்டால் தெரியும். கிட்டத்தட்ட நகரில் உள்ள அனைத்து சாலைகளும் சிதிலமடைந்து வண்டிகளின் பயன்பாடு மட்டுமன்றி மக்கள் நடக்கக் கூட லாயக்கற்றதாகி விட்டது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து கேணிக்கரை செல்லும் வழி, சின்னக்கடைத்தெரு செல்லும் வழி, குமரயா கோவில் சாலை, அக்ரஹாரம் சாலை, தினகர் அரன்மனை சாலை என கிட்டத்தட்ட நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் குளம் போல தண்ணீர் தேங்கி மக்கள் வீதியில் நடமாடவே முடியாத அளவுக்கு மிக மிக மோசமாக உள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் பரவி வியாதிகளும் பரவ ஆரம்பித்து விட்டது.
கடந்த மூண்று தினங்களாக இராமநாதபுரம் மருத்துவனைகள் அனைத்தும் வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன.இவை அனைத்தும் சேதமடைந்த சாலைகளில் தேங்கி நின்ற நீரினால் வந்ததுதான் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தமிழக சாலைகள் அனைத்தும் ஒரு மழைக்குக்கூட தாங்க முடியாத காரணம் என்ன?
முதல் காரணம் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
ஒரு சாலை போடுவதற்கு குறைந்தது எவ்வளவு செல்வாகும் என இந்த அதிகாரிகள் ஏற்கனவே நடப்பில் இருக்கும் விலையைக் கருத்தில் கொள்ளாமல் (Market Rate) இவர்களது அரசு விலைப் பட்டியலை அடிப்படையாக கொண்டு ஒரு மதிப்பீட்டை தயார் செய்வார்கள்.
பின்னர் டெண்டர் கோருவார்கள். யார் குறைந்த விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு இந்த அதிகாரிகள் வேலையைக் கொடுப்பார்கள். கொடுக்கும் போதே மாவட்டம் ஒன்றியம் 50000, 5000, வார்டு கவுன்சிலர் என ரகவாரியாக அரசியல் வாதிகளுக்கு கமிசன் கொடுப்பதற்காகவே குறைந்தது 20 சதவீதம் தொகையை எடுத்துக் கொண்டு வேலையை கொடுப்பார்கள். திட்ட மதிப்பீடும் குறைவு, 20 சதவீத கமிசன் வேறு இப்படி அடிமட்ட ரேட்டுக்கு வேலையை எடுத்த காண்ட்'ராக்டர் அவரும் லாபம் எடுக்க வேண்டும் அல்லவா இதில் தான் ஆரம்பிக்கிறது சாலையின் தரமற்ற நிலை. அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எடுத்துக்கொள்ளும் 20 சதவீத கமிசன் காண்ட்'ராக்டரைப் போய் சேர்ந்தால் அவரால் தரமான் சாலையைப் போடமுடியும்.
இரண்டாவது காரணம் நிலத்தடி நீர் சம்பந்தப்பட்டது. எல்லா நிலத்துக்கு கீழும் Sub surface water எனப்படும் நிலத்தடி நீர் மட்டம் ஒன்று உண்டு. இந்த மட்டம் மாற்றம் அடையும் போது மண்ணின் தாங்குதிறனும் (Bearing capacity) மாறும். பெரும்பாலும் ஆற்றின் கரையோர சாலைகளும் கன்மாய் அல்லது ஏரிக்கரையோர சாலைகளும் சிதிலமடைவதற்கு இதுதான் காரணம். ஆற்றின் அளவுக்கு மேல் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டத்தில் மாற்றம் ஏற்படும் அந்த மாற்றம் ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளையும் பாதிக்கும். கண்மாய் ஏரிக்கரையோர ஆக்ரமிப்புக்களால் அந்தந்த கண்மாய் ஏரிகளுக்கு வழக்கமாக நீர் ஆதாரங்களிலிருந்து வரும் நீரின் அளவு குறையுமானால் அது அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் இதுவும் சாலை சிதிலமடைவதற்கு ஒரு காரணம்.
ஆற்றில் அளவுக்கு மீறி மணல் அள்ளுபவர்களுக்கும் ஏரி கண்மாயை ஆக்ரமிப்பவர்களுக்கும் இந்த அரசியல் வாதிகளின் அதிகாரிகளின் ஆசி இல்லாமல் இல்லை.
இது போக ஒரு சாலையின் தாங்குதிறனை விட கூடுதல் சுமை உள்ள கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்வதால் கூட சாலைகள் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட அளவினை மீறி சரக்கு எடுத்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தினால் இந்த சாலை சேதத்தினை ஓரளவுக்குக் குறைக்கலாம்.
இது எல்லாத்தியும்விட இந்த சாலைகளின் மோசமான நிலைக்கு பிரதான காரணம் மழை முடிந்ததும் ஒட்டுப் போட்ட சாலைகளைப் பார்த்து திருப்தி கொண்டு கலர் டிவிகளையும் கவரில் வைத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் நம்ம பொது சனம்.செவ்வாய், 17 நவம்பர், 2009

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது

காலையில் திருப்பள்ளி எழுச்சிச் சத்தம் வழக்கத்தினை விட அதிகமாகவே எனக்குக் கேட்டது.

"எந்திரிங்க மணி 71/2 ஆகுது இன்னும் என்ன தூக்கம். எந்திருச்சு போயி குளிங்க நான் ரூமைக் கழுவி விடனும்.

"ஏண்டி நான் படுத்திருக்கிறது கட்டில்ல நீ பாட்டுக்கு ரூமைக் கழுவிவிட்டுப் போக வேண்டியதுதானே"

"அது எங்களுக்குத் தெரியாதா எந்திரிங்க கட்டில நகட்டிட்டு கீழேயும் நல்லா கழுவனும்"

"ஏண்டி நானும் பாக்குறேன் நாலு நாளா தொடர்ந்து வீட்டக் கழுவுற அப்படி என்னதான் விசேசம் இன்னைக்கு"

"இன்னைக்கு மாத பிறப்பு"

"அப்ப நேத்து"

"ம் நேத்து அமாவாசை அதுக்கு முத நாளு பிரதோசம் அதுக்கும் முத நாளு வெள்ளிக்கிழமை இப்படி நாளு கிழமைகூட தெரியாம அப்படி என்னதான் படிச்சிங்களோ"

"ஆமாண்டி நான் படிச்ச இன்சினியரிங்க்ல அமாவாசைப் பத்தி ஒரு எலக்டிவ் பேப்பர் இருந்திச்சு நான் தான் எடுக்கல"

"இந்த வக்கனைக்கு ஒன்னும் குறைச்சலில்ல, போயி குளிச்சிட்டு கடைக்குப் போயி புடலங்காய் இருக்கான்னு பாத்துட்டு இருந்தா நல்லதா ஒன்னு வாங்கிட்டு வாங்க"
அதுக்கும் மேல படுத்திருந்தா சத்தம் ரொம்ப ஜாஸ்தியாகும்ன்னு நினச்ச்சுட்டு குளிக்கப் போனேன்.


இத்தனைக்கும் போன வாரம் தங்கமணிக்கு சரியான தொண்டைவலி ENT specialist XRAY எண்டோஸ்கோபில்லாம் எடுத்துப் பாத்துட்டு தொண்டையில் புண் இருக்குன்னு சொல்லி மாத்திர மருந்தெல்லாம் எழுதிக் கொடுத்துட்டு "சத்தமா பேசக் கூடாதும்மா"ன்னு வேற சொன்னாரு மருந்தெல்லாம் சாப்பிட்டபின்னே சத்தம் அதிகமாச்சே தவிர குறைஞ்ச மாதிரி தெரியல.


வெளியே நல்ல மழை இருந்தாலும் கையில ஒரு குடைய பிடிச்சுகிட்டு கொண்டவளின் கட்டளையை நிறைவேற்ற புடலங்காய் வாங்க கடைக்குப் போனேன்.
இருந்ததிலேயே பெரியதா நீளமா குட்டி மலைப்பாம்பு மாதிரி தொங்கிகிட்டு இருந்த ஒரு புடலங்காயை வாங்கி தங்கமணி கையில கொடுத்தேன்.
வாங்குனவுன அத ரெண்டா ஒடிச்சா. அவ்வளவுதான்.

"இங்க வந்து பாருங்க நீங்க வாங்கிட்டு வந்த பொடலங்காய உள்ளே விதையெல்லாம் சொத சொதன்னு சரியான முத்தல், எங்க விளைஞ்சதுன்னு கடைக்காரன்கிட்ட கேட்டு வாங்கினிங்களா தோட்டத்துலயா இல்ல ஏதாவது ஊரணிக்கரையிலயா?"

இப்ப பெஞ்சிகிட்டு இருக்கிற மழைக்கு ஊரணிக் கரையில பந்தல்லாம் போட்டு பொடலங்காய் வளர்க்க முடியுமான்னு தொண்டை வரை ஒரு கேள்வி வந்தாலும் அதனால் மண்டை உடையும் அபாயம் இருப்பதினால பல்லக் கடிச்சுகிட்டு "சரி இப்ப என்ன செய்ய" அப்படின்னு அமைதியாக் கேட்டேன்.

"என்ன செய்யவா வீட்டுல பேசுறாங்கன்னு சொல்லி புடலங்காயை கடையில் திருப்பி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வாங்க"ன்னு ஒரு குண்டப் போட்டா.

வீட்டுல பேசுறாங்கன்னு கடைக்காரனுக்கும் தெரியுமான்னு நினச்சுகிட்டு "ஏம்மா இப்படி உடைச்சு கொடுத்தா கடையில் மறுபடி வாங்குவான்னா"ன்னு முனகினேன்.

'அதெல்லாம் வாங்குவான் போயி கொடுத்துட்டு வாங்க"ன்னு உள்ளே போயிட்டா.

கடையில போயி அவமானப்பட தயங்கி கடைக்குப் போற வழியில இருந்த கருவேல மரப் புதரில புடலங்காய எரிஞ்சிட்டு கைக்காசப் போட்டு தங்கமணியை சமாளிக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

என் நிலமையப் பாத்து கண்ணீர் வடிக்கிற மாதிரி வானம் பொத்து ஊத்திகிட்டு இருந்திச்சு.
ரொம்பவும் மனசு புண்பட்டு போனதால அத ஒரு புகைய விட்டு ஆத்தலாம்ன்னு பக்கத்துல இருந்த பெட்டிக் கடைக்கு ஒதுங்கினேன்.

"என்னடா வாழ்க்கை இது, மீனு வாங்குனாலும் திட்டுறா காயி வாங்குனாலும் திட்டுறா இவகிட்ட நல்ல பேர எப்படி வாங்குறதுன்னு" யோசிச்சிகிட்டு இருக்கும் போது விதி ஒரு கோரைப்பாய் வியாபாரி ரூபத்துல அந்த கடைக்கு மழைக்கு ஒதுங்குச்சு.

எனக்கு பாயப் பாத்ததும் சடக்குன்னு மண்டையில ஒரு பல்பு எரிஞ்சுச்சு "வீட்டுல பாயி இருக்குற மாதிரி தெரியலயே இத வாங்கிட்டு போயி தங்கமணிகிட்டே நல்ல பேர வாங்குவோம்ன்னு பாய் வியாபாரிகிட்டே விலையக் கேட்டேன்.

" ஒன்னு வாங்குனா 65 ரெண்டு வாங்குனா நூத்திப்பத்து"ன்னான் வியாபாரி.

ஒரு வழியா பேரம் பேசி ரெண்டு பாயை 90 ரூபாய்க்கு வாங்கினேன்.
வீட்டுக்குப் போற வழியில ஒரு யோசனை வந்துச்சு "90 ரூபாயின்னு சொல்ல வேனாம் இன்னும் இருபது ரூபா குறைச்சு 70 ரூபாயின்னு" சொல்லி இன்னைக்கு தங்கமணிய அசத்திப் புடுவோம்ன்னு பெருமையா வீட்டுக்குப் போனேன்.

"என்னது இது காயைத்தான கொடுக்கப் போனிங்க இது என்ன பாயோட வந்துருக்கிங்க பேய் மாதிரின்னு விஜய டி ராஜேந்தர் மாதிரி அடுக்கு மொழியில கரடியாக் கத்த ஆரம்பிச்சா".

"இல்ல பாயி வாங்குனா வீட்டுக்கு ஆகுமேன்னு வாங்கிட்டு வந்தேன்" ஈனஸ்வரத்தில முனகினேன்.

"உங்ககிட்ட நான் பாயி வாங்கச் சொன்னேனா வீட்டுல எவ்வளவு பாயி இருக்குன்னு தெரியுமா?ன்னு சொல்லிகிட்டே பெட் ரூம்ல டைனிங் ஹால்ல மாடிக்கு போற ரூமிலன்னு எல்லா ரூமில உள்ள சேந்தி (loft ) சிலாப்புலயும் இருந்து பாயா எடுத்துப் போட்டா.
அதுல ஒரு பாயில மட்டும் பத்துபேரு படுக்கலாம் போல இருந்துச்சு அதப் பாத்ததும் எனக்கு நாக்கு உலர்ந்துருச்சு.

"என்ன விலை" அடுத்த அஸ்திரம் வந்து விழுந்திச்சு.

பயத்துல சொல்ல வந்த விலைய விட பத்து ரூபா குறைச்சு "ரெண்டு பாயி 60 ரூபாய்"ன்னேன்

"என்னது அறுபது ரூபாயா... ஒரு ஜோடிப் பாயி அம்பது ருபாய்தானே அதுவும் இந்த மாதிரி நாடா வச்ச பாயி (ஓரத்துல) இன்னும் விலைக் குறைச்சு வாங்கலாமே, இந்த பாயில்ல புறம் பாயி எது தலைப் பாயி எதுன்னே கண்டு பிடிக்க முடியாதே இதப் போயி வாங்கிகிட்டு வந்துருக்கிங்களே, ஒழுங்கா மரியாதையா கொண்டு போயிக் கொடுத்துட்டு காச திருப்பி வாங்கிகிட்டு வாங்க ....*@#$#@@#@#@#$$#ன்னா.

காயிலதான் முத்தல் இளசு இருக்குன்னாலும் பாயில கூடவா பொறம் பாயி தலைப்பாயின்னு இருக்குதுன்னு எனக்கு சித்த நேரம் கண்ணக் கட்டிடுச்சு.

அப்புறம் என்ன காதுல வழிஞ்ச ரத்தத்த தொடச்சுகிட்டே வழக்கம் போல கருவேலம் மரப் புதருக்கு கிளம்பிட்டேன்.


பின் குறிப்பு: வொய் பிளட் சேம் பிளட் அப்படின்னு இதைப் படிச்சதும் நீங்கள் நினைத்தால் உங்கள் பின்னூட்டங்களினால் எனக்கு ஆறுதல் கூறலாம்.ஞாயிறு, 15 நவம்பர், 2009

மொழி வெறியன் அபு ஆஸ்மியா ராஜ் தாக்கரேவா?கடந்த சில தினங்களாக நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் முதலிடம் பிடித்திருப்பவர்கள் ராஜ் தாக்கரேவின் MNS கட்சியும் சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர் அபு ஆஸ்மியும்.
மராத்திய சட்டமன்றத்தில் தனது தாய்மொழியான ஹிந்தியில் பதவிப் பிரமாணம் ஏற்றதற்காக MNS உறுப்பினர்களால் தாக்கப் பட்டிருக்கிறார் அபு ஆஸ்மி.

இது தொடர்பாக ராஜ் தாக்கரே அபு ஆஸ்மி இருவரும் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

சொல்லிவைத்தாற் போல் அனைத்து மீடியாக்களும் ராஜ் தாக்கரேவின் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளை விட MNS கட்சி தீவிரவாத கட்சி எனவும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரேவை மொழி வெறியர்கள் எனவும் சித்தரிக்கின்றன.


அபு ஆஸ்மியின் இந்த செயலுக்கு மிகவும் பாராட்டு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அபு ஆஸ்மியின் தாய் மொழிப் பற்றைப் பாராட்டி அவருக்கு பாராட்டு விழா எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


MNS கட்சியினரின் செயல் கண்டிக்கப் பட வேண்டியதுதான் என்றாலும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரே இவர்களை விட இரு மடங்கு மொழி வெறியர்கள் இந்த முலாயமும் அபு ஆஸ்மியும்.


தாய் மொழி என்பது தாயைப் போன்றது ஒவ்வொருவருக்கும் அவரது அம்மா மிக சிறந்தவர்தான்.எனது அம்மா எனக்கு சிறந்தவர் என்பதற்காக உலகில் உள்ள அனைவரையும் என் அம்மாவை அவர்களது அம்மாவாக கருத வேண்டும் என நான் கூறினால் அது எவ்வளவு அபத்தமோ அது போன்ற அபத்தமான செயல்தான் அபு ஆஸ்மியின் செயல்.


ரோமுக்கு சென்றால் ரோமனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் இந்த ஹிந்தி மொழி வெறியர்கள்.இவர்களது மொழியை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இவர்கள் அடுத்த மொழியினை படிப்பதில் குறைந்த பட்சம் ஆர்வம் கூட இல்லாதவர்கள் என்பது வளைகுடா நாட்டில் பணி புரிந்து வரும் அனைவருக்கும் தெரியும்.


இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

இந்தியாவின் மிக சிறந்த தொழிலதிபரான JRD டாடா ஜெயின் குடும்பத்தினைச் சார்ந்தவர் என்பது தெரியும் இந்த சமூகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈரானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருகை தந்து குஜராத் கடற்கரையில் குஜராத் மன்னரது அனுமதி வேண்டி காத்திருந்தனர்.

இவர்களது வருகையை விரும்பாத குஜராத் மன்னர் நேரில் மறுப்பை சொல்ல சங்கடப்பட்டு ஒரு பாத்திரத்தில் தளும்ப தளும்ப பாலை ஊற்றி தனது மந்திரிகளில் ஒருவரிடம் கடற்கரையில் காத்திருக்கும் ஜெயின் சமூகத்திற்கு காட்டச் சொன்னார்.இதன் அர்த்தம் என்னவெனில் ஏற்கனவே குஜராத் நிரம்பி வழிகிறது எனவே யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதே அது.

பாத்திரத்தினைப் பார்த்த புத்திசாலி ஜெயின் சமூகத்தினர் அந்த பாலில் சர்க்கரையினை சேர்த்து மன்னருக்கு திருப்பி அனுப்பினர்.இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால் நாங்கள் அதிக இடத்தினை ஆக்ரமித்து பாலினை தளும்ப விட மாட்டோம். சர்க்கரையைப்போல் குஜராத் கலாச்சாரத்தோடும் மக்களோடும் கலந்து விடுவோம். மேலும் பாலுக்கு சர்க்கரை சுவை சேர்ப்பது போல நாட்டிற்கு சிறப்பு சேர்ப்போம் என்பதே அது.

இந்த புத்திசாலித்தனமான பதிலால் மகிழ்ந்த மன்னர் ஜெயின் சமூகத்தினரை இந்தியாவில் அனுமதித்தார் என்பது வரலாறு.

அபு ஆஸ்மியின் செயல் பாலில் சர்க்கரை கலப்பது போன்றது அல்ல.உப்பைக் கலந்து பாலினைத் திரிப்பதற்கு ஒப்பாகும்.

வீட்டில் நச்சுப் பாம்பு வந்து படம் எடுத்து அதை விரட்டி அடிப்பவர்களை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தால் அது எப்படி முட்டாள்தனமோ அது போன்றதுதான் ராஜ்தாக்கரேவின் கைதும்.

ஒரு மாநில அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் நாண்காண்டுகளுக்குள் பரிச்சியம் பெற வேண்டும் என அரசு விதிகள் சொல்வது இந்த ஹிந்தி மொழி வெறியர்களின் காதில் விழுந்திருக்காதா என்ன?


வியாழன், 12 நவம்பர், 2009

SMS மொக்கைகள் - 4

1. நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.
டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...
--------------------
2.When Apple becomes red
It is ready to Eat
அது மாதிரி
When a Girl becomes 18
She is ready to.......
-

-Vote
(ஹி ஹி வேற எதையாவது நினைச்சு வந்திங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை)
--------------------
3. ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?
--------------------
4.காதலுக்கு மதிப்பெண்கள்
சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்
சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்
சின்சியரா காதல் பண்ணுனா
-
-
-


வேறு என்ன "டாஸ் மாக்" தான்
--------------------
5.ஒருவர்: பஸ்ஸ்டாப்புல நின்னு மேலயே பாத்துகிட்டு இருக்கிங்களே ஏன்?
சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க.
--------------------
6.பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.
புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு
பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு
புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.
--------------------
7.பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?
வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?
பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.
--------------------
8.ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்
டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?
ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது
--------------------
9.பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...
நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க
விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க
நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..
--------------------
10.பெத்தப் பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு
என்னன்னா

ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அடிவயிற்றுல ஒரு நெருப்பு பத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.
--------------------
11.சர்தார் 1: வெயிட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல
சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க
சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)
--------------------
12.விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலுமாசம் தூங்க மாட்டே

ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா நீ நடிச்சாத்தான் தாங்க முடியல
--------------------
13.கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?
மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.
கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு
--------------------
14.ஒரு மொபைல் தத்துவம்
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி
பசங்க மனசு மொபைல் மாதிரி
தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்
மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்
சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்.
--------------------
15.காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.
--------------------
16.சிறப்பு தத்துவம். (Last but not least.)
ஒரு மஞ்சக்கயித்த உன் கையில கட்டுனா அதுக்கு பேரு காப்பு
அதையே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நீ
உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பு.
--------------------செவ்வாய், 10 நவம்பர், 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை

மூன்று நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழான ஹிந்துவில் OPEN PAGE என்னும் தலைப்பில் இனுமெல்லா சசிகலா என்பவர் எழுதிய கட்டுரை இது. படித்ததும் எனக்கு மிகவும் மனது கணத்துப் போனது.இதோ அந்த கட்டுரையின் தமிழாக்கம்.

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் அம்மா பொறியில் அகப்பட்ட சிறைக்கைதியைப் போல் நான் வகுப்பறையில் உள்ளேன். எதையாவது கேட்டால் "இதற்கு நேரமில்லை குறிப்பிட்ட காலத்துக்குள் நாம் பாடத்திட்டத்தினை முடிக்க வேண்டும்." என ஆசிரியர்களிடம் ஒரே மாதிரியான பதிலே வருகிறது.
எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கும் இந்த படிப்பு மிகவும் அயர்ச்சியைத் தருகிறது.

அம்மா நான் உயிர் காட்சி சாலைகளுக்கு வகுப்புத் தோழர்களுடன் சென்று அங்குள்ளவற்றை ஆசிரியர் விளக்க தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இயற்கை சுற்றுலாக்கள் சென்று இயற்கையான உயிரியல் வகுப்பைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆழ்கடலில் வசிக்கும் விலங்குகள் பற்றியும் எரிமலைகள் பற்றியும் ஒளிக்காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
என் நகரத்தில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களும் சேர்ந்து என் நகரத்தில் உள்ள வரலாற்று சின்னங்களைப் பற்றி நேரில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
தொலை நோக்கி மூலம் வானவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பாடப் புத்தகங்களில் மட்டும் நான் இவற்றை தெரிந்து கொள்ள விரும்பவில்லை அம்மா. கண்டு கேட்டு தொட்டு முகர்ந்து சுவைத்து நான் அறிய ஆசைப்படுகிறேன் நான் விரும்புவது படிப்பு அல்ல அனுபவம்.

ஏன் இந்த பள்ளிகள் இது போன்ற அனுபவத்தை வருடம் ஒருமுறை ஏற்பாடு செய்யக்கூடாது.

மேலும் அம்மா இனிமேலும் என்னால் பள்ளிப்புத்தகப் பையினைத் தூக்கி வளைய முடியாது. ஏற்கனவே என் முதுகு வளையும் அபாயத்தில் உள்ளது. ஏன் எல்லாப் புத்தகங்களையும் எல்லா நாளிலும் நான் தூக்கிச் செல்ல வேண்டும். ஏன் ஒருநாளைக்கு இரண்டு பாடம் மட்டும் படிக்கக் கூடாது.ஏன் மேலை நாடுகளில் உள்ளது போல் வகுப்பறை மேஜைகளில் லாக்கர் வசதி செய்யக் கூடாது. ஏன் தினமும் ஆட்டோக்களில் நெரிசல்களில் பிதுங்கி சிரமப்பட வேண்டும்.


தினமும் வீட்டுப்பாடம் விண்டர் புராஜக்ட், சம்மர் கிளாஸ் வீக்லி டெஸ்ட். காலாண்டு பரிட்சை. அரையாண்டு பரிட்சை. மிட் டெர்ம் டெஸ்ட் முழு ஆண்டுப் பரிட்சை வீக்லி டெஸ்ட் கோச்சிங் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் என மேலும் மேலும் தேர்வுகள். அழுத்தம் அழுத்தம் பேரழுத்தம்.
எப்போது நான் சுதந்திரமாக பாட ஆட படம் வரைய நீந்த சைக்கிள் ஒட்ட விளையாட முடியும்.
எப்போது நான் கிரிக்கெட்டோ அல்லது கள்ளன் போலிசோ என எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாட முடியும்.
எப்போது நான் குழந்தைகளுக்கே தேவைப்படும் குறைந்தபட்ச தூக்கத்தினை தூங்க முடியும். ஏன் நான் தினம் தினம் படி படி என சொல்லப் பட வேண்டும்.
அம்மா நான் தற்போது டாக்டராகவோ இஞ்சினியராகவோ வேறு எதுவாகவும் ஆக விரும்பவில்லை. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். எனது அறிவினை பாதுகாப்பாக அழுத்தம் எதுவும் இன்றி தெளிவாக கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா நான் குழந்தைப் பருவத்தினை அனுபவிக்க ஆசைப்படுகிறேன்.
இப்படி அந்த கட்டுரை முடிகிறது.
மெக்காலேயின் வெறும் கிளர்க்குகளை உருவாக்கும் இந்த கல்வித்திட்டத்தினால் பிஞ்சுகள் எப்படிப் பாதிக்கப் படுகின்றன என நினைக்கும் போது கண்கள் பனிக்காமல் இல்லை.
பட்டம் விட்டு பம்பரம் குத்தி கிணற்றில் குதித்து நீந்தி கிட்டிப் புல் விளையாண்டு, கபடி விளையாண்டு தட்டான் பிடித்து பேய்கதைகள் கேட்டு இப்படி சென்ற தலைமுறையில் நாம் அனுபவித்த குழந்தைப் பருவம் இன்று கோச்சிங் கிளாஸ் கராத்தே கிளாஸ் டான்ஸ் கிளாஸ் என வகுப்புகளிலும் தேர்வுகளிலும் indoor games ஆக சுருங்கி விட்ட அவலத்தினை என்ன சொல்வது.

சனி, 31 அக்டோபர், 2009

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?


ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. சில So called தமிழ் காவலர்கள் இதை பின்பற்றாமல் இரண்டு மூன்று என மனைவியர் வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான தமிழர்கள் ஒன்றே போதும்!!!! என தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றி வருகின்றனர்.


சில பேர் என்னிடம் கேட்டதுண்டு "தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும் என்னால் முடிந்தவரை அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் சொல்லுகிறேன்.அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் சிறீ சதானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.


"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்


பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.


சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்


சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன. இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்


1.நெற்றி (பிரம்மந்திரா)


2.தொண்டைக் குழி (ஆங்ஞை)


3.மார்புக்குழி (விசுத்தி)


4.தொப்புள் குழி (மனிப்புரம்)


5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)


6.மலக்குழி (மூலாதாரம்)


இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர்.மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.


முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.


மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.


இதைத்தான் கந்தகுருகவசத்தில் சதானந்த சுவாமிகள் சொல்லுகிறார்


"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்


இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.


ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான்.


இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்


"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்


தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி


எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம்.


ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.


இறுதியாக ஒன்று


கடவுள் ஒருவரே


அவர் எவராலும் பெறப்படவும் இல்லை


அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.


எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு


மனைவியர் இரண்டு என்பது


இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர


வேறொன்றும் இல்லை.வெள்ளி, 16 அக்டோபர், 2009

தீபாவளி தமிழர் பண்டிகைதானா?

நாளை தீபாவளி
எப்போதும் ஐப்பசியில் வரும் தீபாவளி இந்த வருடம் மட்டும் அதிசயமாய் புரட்டாசியிலேயே வருகிறது.

நீண்ட நாட்களாகவே எனக்கு தீபாவளி தமிழர் பண்டிகைதானா என ஐயம் ஒன்று உண்டு. மற்ற எந்த பண்டிகையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தீபாவளிக்கு இருக்கும் சிறப்பு,முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காலம் காலமாக நமக்கு சொல்லப் பட்ட கதையின் படி கிருஷ்ன பகவான் நரகாசுரனை கொண்று மக்களுக்கு சுபிட்சம் கொடுத்ததாகவும் அதனை கொண்டாடவே மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி புத்தாடை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்கிறார்கள் என நம்புகிறோம்.

கிருஷ்னர் தமிழர்களின் கடவுள் கிடையாது. கொல்லப்பட்ட நரகாசுரன் தமிழ்நாட்டிலும் வசிக்கவில்லை. அதனால் தமிழர்களுக்கு அவன் தொல்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை.பின் எப்படி தமிழ்நாட்டில் தீபாவளி பிரதான பண்டிகையாயிற்று.

தீபாவளி மதத்தின் பேரால் வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பண்டிகை என்பதே சரி.

தீபாவளி மட்டுமல்ல தமிழர்களுக்கு அந்நியமான விநாயகர் விஜர்சன் ஊர்வலம், சரஸ்வதி பூஜா, மாகாவீரர் ஜெயந்தி இப்படி பல இறக்குமதி செய்யப்பட்ட திருநாள்கள் தமிழ்நாட்டில் கலந்துள்ளன.

இவற்றுக்கான மூல காரணம் யார் எனப் பார்த்தால் அவர் அண்டைமாநிலமான கேரளாவின் காலாடியில் பிறந்த ஆதிசங்கரர் என்னும் முதல் சங்கராச்சாரியே ஆவார். அவரே தமிழகத்தில் கௌமாரம் என்றும் (முருக கடவுள் வழிபாடு) இந்தியாவின் வடபகுதிகளில் சைவம் (சிவ வழிபாடு) வைணவம் (விஷ்னு வழிபாடு) எனவும் மகாராட்டிரத்தில் கானபத்தியம் (கணபதி வழிபாடு) எனவும் மேற்கு வங்காளத்தில் சாக்தம் (சக்தி வழிபாடு) எனவும் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு(அக்னி வருணன் சூரியன் பாம்பு போன்றவை)எனவும் இருந்த பல்வேறு தெய்வ வழிபாடுகளை இந்துமதமாக கடவுள்களுக்குள் ஒரு உறவு முறையைக் கற்பித்து ஒன்று சேர்த்தார்.

தமிழர்களாகிய நாம் விஷ்னு சிவன் பார்வதி லெட்சுமி கணபதி துர்க்கை ராகு கேது என கணக்கில்லாத இந்து கடவுள்களை கும்பிட்டும் அவர்களது முக்கிய வழிபாட்டுத் தினங்களுக்கு அரசு விடுமுறை வழங்கியும் வருவது போல ஏதாவது வடமாநிலத்தில் தமிழ்கடவுள் முருகனுக்கு வழிபாடோ அல்லது வைகாசி விசாகத்துக்கோ பங்குனி உத்திரத்துக்கோ தைப்பூசத்துக்கோ விடுமுறை வழங்கியதாக கேள்விப்பட்டதுண்டா?

அண்டை மாநிலங்களை சொல்வானேன். நம் தமிழ்நாட்டிலேயே நம் தமிழ் கடவுள் முருகனின் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது என்பது இன்னும் வருந்ததக்க விடயம் தான்.
தமிழர்களுக்கு என பிரத்தியோகமான தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டு என அரசு அறிவித்த பின்னும் எத்தனை தமிழர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இப்படி பல்வேறு ஐயப்பாடுகள் எனக்கு தீபாவளிப் பண்டிகையைப் பற்றி இருந்தாலும் ஜவுளி பட்டாசு இனிப்பு வீட்டு உபயோகப் பொருட்கள் இப்படி பற்பல தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வியாபாரத்தினையும் ஓரளவு செல்வத்தினையும் மகிழ்சியையும் இப்பண்டிகை கொண்டு வருவதால் இந்த நன்மைகளை முன்னிட்டு வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களாகிய நாம் இப் பண்டிகையையும் வரவேற்போம்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.திங்கள், 12 அக்டோபர், 2009

SMS மொக்கைகள் - 3

1.நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?
திருடன்: சதா அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.
-------------------
2.நச்சுன்னு ஒரு உண்மை சொல்லுறேன் கேட்டுக்குங்க.
என்னதான் 220CC பல்சாரிலும் 350CC ராயல் என்பீல்டுலயும் இந்த பசங்க சுத்தினாலும் ஃபாலோ பண்ணப்போறது என்னவோ 80CC ஸ்கூட்டிதான்.
----------------------
3. 143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.
I love you வா ம்ஹூம் இல்லை
I hate you வா இல்லவே இல்லை
I like you வா ம்ஹூம்
I miss you வா இல்லை
I wish you வா இல்லை இல்லை இல்லை
சரி நான் சரியாக சொல்லுறேன்
143ன்னா
-
-
நூத்தி நாப்பத்து மூன்று. (அய்யோ அடிக்க வராதிங்க)
--------------
4.நண்பா உன்னைப்போல் என் கண்ணீர் துடைக்க ஒருவன் இருந்தால்
-
-
100 விஜய் படம் வந்தாக் கூட துணிந்துப் பார்ப்பேன்.
------------------
5.ஹாமாம் சோப் ரீ மிக்ஸ் விளம்பரம்
பவித்ரா கடைக்குப் போயி ஒரு குவார்ட்டர் சரக்கு வாங்கிட்டு வர்றியாம்மா?
சரிம்மா
அய்யய்யோ என் பொண்ணுகிட்ட என்ன சரக்குன்னு சொல்லலியே
வாந்தி வருமே
தலைவலிக்குமே
ஒவர் ஹேங் ஆகுமே
போதை ஏறாதே
பவித்ரா ..........
என்னம்மா (பவித்ரா கையில் ஒல்ட் மங்குடன்)
ஓல்ட் மங்கிருக்க பயமேன்.
----------------
6.Girls Special
கேரளா : அழகிய பெரிய ரெண்டு கண்கள்
கர்நாடகா: கரிய நீண்ட கூந்தல்
ஆந்திரா : கூரிய நீண்ட மூக்கு
பஞ்சாபி : பாதாம் பருப்பு நிறம்
தமிழ்நாடு: ஒரு மண்ணும் இல்லன்னாலும் ஓவரா சீன் போடுறது.
இப்படிக்கு சீன் போட்டதில் சீரழிந்த வாலிபர் சங்கம்.
-----------------
7.தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரு அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்
அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?
தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.
-------------------
8.தண்ணீர் தெளிச்சு ஏன் கோலம் போடுறாங்க தெரியுமா?
ஏன்னா
கோலம் போட்டுட்டு அப்புறம் தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்.
-----------------
9.காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
இப்பத்தான் தெரியுது நம்ம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு.
-----------------
10.ஹிஸ்டரி டீச்சர்:ராஜா ராம் மோகன் ராய் யாரு?
விஜய்: அவுங்க நாலு பேரும் பெஸ்ட் பிரண்டு டீச்சர்.
----------------
11.ஜோசியர்: உங்க ஜாதகப் படி நீங்க ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கனுமே
ஜோசியம் பார்ப்பவர்: ஆமாம் சாமி இப்ப உங்களுக்கு கொடுக்கக் கூட கையில் பத்துப் பைசா இல்லை.
-----------------
12.படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்
படிப்புத்தான் வரல
தூக்கமாவது வருதேன்னு நினைச்சு
சமத்தா தூங்கிடனும்.
---------------
13.தினம் ஒரு kural படிக்கனும்
எனவே இன்னிக்கு இந்த kural படிங்க
"மியாவ் மியாவ் "
சரியா நாளைக்கு வேற kural படிக்கலாம் என்ன?(சரி சரி அழக்கூடாது)
---------------
14.ஒரு அசிஸ்டண்ட் கமிசனர் அவரோட பையன் ஸ்கூல் புராஜக்ட்டுக்காக ஒரு கடையில் டையோடு வாங்கினாரு வாங்கின மறுநாளு டெபுடி கமிசனரா புரோமோசன் ஆயிட்டாரு
எப்படி
எப்படின்னா
டையொடு diode is a good rectifier
it converts AC to DC
-----------------
15. கடைசியா ஒரு தீபாவளி
மொக்கை
பையன்: அம்மா எல்லா வெடியும் தீந்துப் போச்சு இந்த சிவப்பு கலர் பெரிய வெடியை விடவா?
அம்மா: சனியனே அது கேஸ் சிலிண்டருடா.....
--------------