வியாழன், 27 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டின் தலையெழுத்து இதுதான்

என் நண்பன் ஒருவன் என் வலைப்பூவைப் படித்து விட்டு எனக்கு ஒரு மின் மடல் அனுப்பியிருந்தான். அதில் நான் வலையுலகில் புகழ் பெற ஒரு உருப்படாத யோசனையையும் சொல்லியிருந்தான்.

அது என்னன்னா நம்ம பேருலஏதாவது வடமொழி எழுத்து வருகிறமாதிரி பேரு வச்சிக்கனுமாம். அப்பத்தான் தமிழ்நாட்டில புகழ் அடைய முடியுமாம். உதாரணத்துக்கு
அரசியல்
காமராஜ்
எம்ஜியார் (ராமசந்திரனா புகழ் அடையவில்லையாம்)
கருணாநிதி (உண்மை பெயரு தஷ்ணா மூர்த்தியாம்)
ஜெயலலிதா
ராம்தாஸ்
விய்காந்த்

கலைத்துறை
தியாகரா பாகவதர்
சிவாஜி
ஜெமினி
ஜினி
கமல்ஹாசன்
விஜய்
ஜித்

எழுத்தாளர்கள்
சுஜாதா
ஜெயகாந்தன்
ராஜேஸ்குமார்
சுரேஷ்பாலா

இப்படி அடுக்கிட்டுப் போனான். இந்தமாதிரி வடமொழி எழுத்து இல்லாததால்தான் அண்ணாத்துரை பிரபலமாகியும் அல்பாயுசல போயிட்டாராம். அப்புறம் நம்ம நல்ல கண்ணு ,வைகோ இவுங்கள்ளாம் அரசியல்லயும் விக்ரம் சூர்யா கலையுலகிலும் திறமை இருந்தும் சூப்பர் ஸ்டார் ஆக முடியலையாம்.

அட ஙொப்புரானேன்னு நினச்சுகிட்டு வலையுலகில் யாரு சூப்பர் ஸ்டாருன்னு யோசிச்சுப்பாத்தா யுவகிருஷ்னா,கிருஷ்னகுமார்(பரிசல்காரன்),அவிய்ங்க ராமாணிக்கம்,நட்புடன் மால்,சுஷ்மலா ன்னு இந்த பேருங்க மட்டும் ஞாபகத்துக்கு வருது.
யோசிச்சு பார்க்கையில தமிழ்நாட்டின் தலையெழுத்து தமிழ் எழுத்தா இல்லைன்னு மட்டும் பிடிபடுது.

இல்லைன்னா


தமிழைத் தாய்மொழியா கொள்ளாதவனை(ளை) எல்லாம் தலையில தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருப்பமா?
7 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

துளஸின்னு மாத்திக்கப்போறேன்:-))))

யுவகிருஷ்ணா சொன்னது…

அருமையான பார்வை. இந்த கருத்தை அப்படியே சிற்பமாக செதுக்கி பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கவும் :-)

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

துளசி கோபால் சொன்னது…
துளஸின்னு மாத்திக்கப்போறேன்:-))))

முதல் வருகைக்கு நன்றி
தமிழ் பேராகவே இருக்கட்டும் அண்ணே.

யுவகிருஷ்ணா சொன்னது…
அருமையான பார்வை. இந்த கருத்தை அப்படியே சிற்பமாக செதுக்கி பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கவும் :-)

லக்கி திட்டுறிங்களா பாராட்டுறிங்களா ஒன்னும் புரியலையே

துபாய் ராஜா சொன்னது…

நல்ல வேளை என் பேருல வடமொழி இருக்கு.

உங்களுக்கு தான் 'வட'(மொழி) போச்சு. :))

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க துபாய் ராஜா

சிலேடை நல்லா இருக்கு

துபாய் ராஜா சொன்னது…

//துளசி கோபால் சொன்னது…
துளஸின்னு மாத்திக்கப்போறேன்:-))))

முதல் வருகைக்கு நன்றி
தமிழ் பேராகவே இருக்கட்டும் அண்ணே//

தங்கராசண்ணே,யாராவது பின்னூட்டம் போட்டாங்கன்னா அவங்க வலைப்பூவிற்கு(ம்) சென்று பாருங்கள்.அவர்களைப் பற்றிய விவரங்களை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

துளசி அம்மா பல ஆண்டுகளாக பதிவுலகில் உள்ள சீனியர் பதிவர்.கோபால் அவர்களது கணவர் பெயர்.

நாம நாலு பேர் வீட்டுக்கு போனாதான் நம்ம வீட்டுக்கு நாலு பேர் வருவாங்க.இதுதான் உங்களது இந்த பதிவிற்கு பதில்.

நிறைய பதிவெழுதினா பிரபலம் ஆகமுடியாது. நிறைய பதிவர்களது எழ்த்துக்களைப் படிச்சு உங்க கருத்துக்களை சொல்லுங்க.அப்புறம் பாருங்க.உங்க ஆதங்கம் தன்னாலே தீரும்.

லக்கி சொன்னது இதைத்தான்.

//யுவகிருஷ்ணா சொன்னது…
அருமையான பார்வை. இந்த கருத்தை அப்படியே சிற்பமாக செதுக்கி பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கவும் :-)//

//லக்கி திட்டுறிங்களா பாராட்டுறிங்களா ஒன்னும் புரியலையே//

இதற்குமேல் புரியற மாதிரி யாராலும் சொல்லமுடியாது.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

ரொம்ப நன்றின்னே இப்பத்தானே ஆரம்பிச்சுருக்கேன்.போக போக எல்லாம் தெரிஞ்சுகுவேன்.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க