செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சவுதி அரபியாவில் சந்தித்தால்

வீர பாண்டிய கட்டப் பொம்மன் திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஜாக்சன் துரையும் இராமநாதபுரம் அரண்மனை இராமலிங்க விலாசத்தில் சந்தித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.மொழிபெயர்ப்பாளர் துணையின்றி ஜாக்சன் மிக சரளமாக தமிழ் பேசுவது ஆச்சர்யமே. படத்துக்காக இதை சுலபமாக எடுத்துக் கொண்டாலும் உண்மையில் ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒரு நபரும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரும் துபாஷ் யாருமின்றி உரையாடுதல் கடினமே.

சவுதி அரபியாவில் எண்ணைக்கிணறு கட்டுமான நிறுவனங்களில் உலகம் மொத்தமுள்ள அனைத்து நாட்டினரும் வேலைப் பார்த்து வருகின்றனர்.ஆங்கிலமும் அரபியும் கலந்த ஒரு புதுமையான மொழிதான் இங்கே எல்லோருக்கும் பொது மொழி.இலக்கணமில்லாத காலங்களில்லாத ஆங்கிலத்துடன் கீழ்கண்ட அரபு வார்த்தைகளை சேர்த்து விட்டால் அந்த பாஷை ரெடி.

பி=ஆமாம், முடியும் மாபி= இல்லை, முடியாது சுகுல்=வேலை அலதுல்=நேராக, ஒரேடியாக சவாசவா=சேர்ந்து, உடன்,கூடவே மாலும்=தெரியும் கிர்கிர்=பேச்சு மொகத்=அறிவு, திறமை புலுஸ்=சம்பளம்,காசு ஐவா=சரிசரி இப்பக் கதைக்கு வருவோம் சவுதியில் இபிஎஸ் (engineering ,procurement and supply)கம்பனியில் வேலைபார்த்த தற்போது கிழக்கிந்திய கம்பனியில் வேலை பார்க்கும் ஜாக்சன் துரையும் ஓலாயன் கம்பெனியில் வேலை பார்த்து தற்போது பாளையத்து மன்னராக இருக்கும் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் சவுதி தம்மாம் நகரில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்கும் சவுதியில் ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருப்பதால் மொழிபெயர்ப்பாளர் யாருமின்றி பேச்சைத் துவங்குகின்றனர்.

ஜாக்: யூ விர பண்டிய கெட்டபொம்மா?

வீரு: யூ மாபி மாலும் இங்கிலிஷ் ஐ வீரபாண்டிய கட்டபொம்மன் யூ ஜாக்சன் துரை.

ஜாக்: ஓகே ஓகே ஒய் லாங் மீட்டர் கமிங்.

வீரு: சம் படி ஸ்பீக் மீ யூ லைக் பிரண்ட்சிப் தட் வொய் ஐ கமிங்

ஜாக்: ஐ லைக் பிரண்ட்சிப் பட் யூ நோ குட் கை

வீரு: வீ தமிழ் மாலும் ஆல், யூ டோண்ட் டீச் லெசன்ஸ் பிகாஸ் யூ மாபி மொகத் கை

ஜாக்: யூ டூ மச் ஹெட் வெயிட் கை ஆஹ்

வீரு: ஹா ஹா ஹா தட் இஸ் சவாசவா கேரக்டர் பிரம் பெர்த்.

ஜாக்: ஐ ஃப்ளேம் யூ

வீரு: வாட் ஃபிளேம் ஸ்பீக் ஸ்பீக்

ஜாக்: டூ மச் ஃபிளேம் லிட்டில் டைம் நாட் எனாப்ஃ

வீரூ: யூ மாபி மாலும் அக்கவுண்டிங்

ஜாக்: ஸ்டுபிட் யூ ஸ்பீக் அபவுட் மீ மாபி மாலும் அக்கவுண்டிங் லிசன் ஐ ஸ்பீக்
லாங் டைம் யூ மாபி கிவ் கிஸ்தி சவாசவா யூ மாபி கிவ் டாக்ஸ் சவாசவா யூ மாபி கிவ் இண்ட்ரஸ்ட் பார் ஆல் பேலன்ஸ் புலுஸ்.

வீரு: கிஸ்தி டாக்ஸ் இண்டரஸ்ட் ஹா ஹா ரெயின் கமிங் எர்த் க்ரோயிங் வொய் ஐ சுட் கிவ் கிஸ்தி. யூ சவாசவா கம் டூ லேண்ட்,தேர் யூ போர் வாட்டர் டூ அவர் கிராப்ஸ்,ஆர் யூ பிளாண்ட் எனி சீட்ஸ்,ஆர் யூ பிளக் எனி வீட்ஸ்,ஆர் யூ பிரிங் கஞ்சி டூ அவர் பார்மர்ஸ்,ஆர் யூ கிரைண்டிங் எனி டர்மரிக் டூ அவர் மேடம்ஸ்,ஆர் யூ அங்கிள் ஆர் கசின் வொய் யூ ஆஸ்க் டாக்ஸ் ஹவ் யூ ஆஸ்க் இண்ட்ரஸ்ட் ஃஇப் அவர் பார்மர் மாலும் திஸ் மேட்டர் தே புரோக் யுவர் ஹெட் இன் பீஸ் பீஸ் பீ கேர்புல்.

ஜாக்: ஹெய் கைஸ் அரஸ்ட் திஸ் டூ மச் கிர்கிர் கை.
வீரூ: ஹா ஹவ் டேர் யூ டூ புட் யுவர் ஹேண்ட் ஆன் மறத்தமிழன் லேப்
இஃப் மை மம்மி மாலும் திஸ் மேட்டர் சி வில் கில் யூ பை ஹெர் சாங்
இஃப் மை மேடம் மாலும் திஸ் மேட்டர் சி வில் கில் யூ பை ஹெர் குழம்பு
இஃப் அவர் ஆக்டர் விஜய் மாலும் திஸ் மேட்டர் ஹி வில் கில் யூ பை ஹிஸ் வில்லு

மூன்றாவது வரியைக் கேட்டதும் ஜாக்சன் துரை மூர்ச்சையாகிறார் வீர பாண்டியனாரின் சவுதி சந்திப்பு வெற்றிகரமாக இனிதே முடிகிறது.


3 கருத்துகள்:

குடிகாரன் சொன்னது…

//இஃப் அவர் ஆக்டர் விஜய் மாலும் திஸ் மேட்டர் ஹி வில் கில் யூ பை ஹிஸ் வில்லு //

நல்லா இருக்கு

tamilcinema சொன்னது…

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

kkk சொன்னது…

இந்த பிரபலமான டயலாக் இன்னும் எவ்ளோ than கஷ்டப்படும் உங்க கற்பனை இந்த நற்பதந்து டிகிரி வேயளிளுமா,,,வடிவேல் சொல்ற மாதிரீ condinuee ..... hmmm

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க