ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

இது ஒரு சவுதி ஆதியின் கதை

இடம்:சவுதி அரேபியா தம்மாம் நாள் 10-08-09 நேரம்: காலை 9.00

"வாங்க மூர்த்தி என்ன விசயம்"

"சார் போனவாரம் நம்ம ஆர்டர் பண்ணுன ஸ்டீல் பிளேட் கிடைக்கலியாம். பர்சேஸ் டிபார்ட்மெண்ட்டுலருந்து போன் பண்ணுனாங்க.அது வந்தாத்தான் பேப்ரிகேசன் முடிக்க முடியும். இந்த வாரம் புரடக்சன் ரேட்டு கொடுக்கலின்னா புராஜக்ட் மேனேஜர் திட்டித்தீர்த்துடுவாரு. அதான் உங்ககிட்ட ஐடியா கேட்கல்லாமுன்னு"

"என்ன பிளேட் மூர்த்தி,ஸ்பெசிபிகேசன் என்ன?"

"A333 சார்"

"கெமிக்கல் காம்போசிசன் பாருங்க மூர்த்தி, A333க்கு பதிலா A516 வாங்கலாம்.516 மார்க்கெட்டுல சுலபமா கிடைக்கும்.அத வாங்கி வேலையை முடிங்க. அப்படியே கிளையண்டுக்கும் இன்பார்ம் பண்ணிச்சொல்லிடுங்க."

"சரி சார் அப்படியே பண்ணிடுறேன் சார். அதெப்படி சார் எதையும் ரெபர் பண்னாம கரக்டா சொல்லுறிங்க."

"பர்சேஸ்ல பத்து வருசம் அனுபவம் மூர்த்தி. எந்த பொருள எப்படி வாங்கனும்னு நமக்கு அத்து படி"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்:சவுதி அரேபியா தம்மாம் நாள் 12-08-09 நேரம்: மாலை 7.00

"அட பாஸ்கர் என்ன இந்தப்பக்கம்"

"அடுத்த மாசம் ஊருக்கு போறேன் சார் அதான் பர்சேஸ் பண்ணலாம்னு வந்தேன், நீங்க கூட அடுத்த வாரம் ஊருக்குப் போறிங்கன்னு கேள்விப்பட்டேன்"

"ஆமா பாஸ்கர் பட் நான் எல்லா பர்சேஸையும் முன்னாடியே முடிச்சிட்டேன்."

"உங்களப்பத்திதான் தெரியுமே சார் எனக்கு நீங்கதான் எந்த பொருளையும் பார்த்து பார்த்து வாங்கிறதுல கில்லாடியாச்சே"

"ரொம்ப புகழாதிங்க பாஸ்கர், கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் அந்த காசுக்கு சரியான பொருளை வாங்குனாத்தானே நம்மல்லாம் விவரமான ஆளுன்னு அர்த்தம்"

'எனக்கு கூட இப்ப ஒரு லேப்டாப் வாங்கனும் சார், உங்களுக்கு நேரமிருந்தா வரமுடியுமா சார்"

"அதுக்கென்ன பாஸ்கர் வாங்க நல்ல லேப்டாப்பா பாத்து வாங்கிடுவோம் எனக்குத் தெரியாததா?"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம்:தமிழ்நாடு கீழக்கரை நாள்:19-08-09 நேரம்:காலை 11.00

"மீனு வாங்கப்போயி இவ்வளவு நேரமா? இந்நேரத்துக்கு கடல்லய போயி மீன புடிச்சு கொண்டாந்திருக்கலாம்"

"கடைல்ல கூட்டமா இருந்துச்சு புள்ளே, அதான் லேட்டு"

"எங்கயாவது கூட்டாளிகளோட வெட்டி அரட்டை அடிச்சுட்டு வந்துட்டு கடையில கூட்டமுன்னு ஏன் பொய் சொல்லுறிங்க கொண்டாங்க அந்த மீன குழம்பக் கூட்ட"

"இந்தா, என்னைக் குறை சொல்லாம உனக்கு பொழுது விடியாதே"

"அய்யய்யே என்ன மீனு இது எந்தக் கடையில வாங்கினிங்க"

"ஏன் எல்லாம் தெரிஞ்ச கடைதான் இப்ப என்ன அதுக்கு"

"இப்ப என்ன அதுக்கா? பாருங்க எல்லா மீனும் நொந்து போயிருக்கு. மீனு வாங்கும் போது செவுள திறந்து நல்லா சிவப்பா இருக்கான்னு பாத்து வாங்கனும் அந்த திறமைல்லாம் உங்ககிட்ட இருந்தாதான் உள்ளூரிலயே பொழைப்பிங்களே.என்னை ஏமாத்துங்கன்னு நெத்தில எழுதி வச்சிகிட்டுதான் கடைக்கு போவிங்களோ, நீங்கள்ளாம் சவுதில எப்படி பொழைக்கிறிங்கன்னே தெரியல்லியே.......-@#$$%$$##@@##$@#@@#"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ha ha ha ha

Unknown சொன்னது…

சூப்பர் :-)

பெயரில்லா சொன்னது…

Title super.

பெயரில்லா சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ... கலக்குறீங்க..
நல்லருக்குங்க.

இல்யாஸ் சொன்னது…

super

இராகவன் நைஜிரியா சொன்னது…

ஹி... ஹி...

தங்கமணிகிட்ட திட்டு வாங்கத ரங்கமணிகள் இந்த உலகத்திலேயே கிடையாது போலிருக்கு...

அன்புடன் அருணா சொன்னது…

ஹாஹாஹஹா.....கலக்கல்ஸ்

Unknown சொன்னது…

நல்லாருக்கு :)

எல்லாருக்க்கும் எல்லாம் தெரிவதில்லையே... :D

ஹிஹிஹி

@தங்கராசு நாகேந்திரன், ஒரு பின்னுட்டம் போட முன்று தடவை டிரை பன்னவேண்டிதிருக்கு...

இப்படி வருது "உங்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியவில்லை. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்."

ஏதாவது பன்னுங்க பாஸு..

Unknown சொன்னது…

எனக்கு ஒரு உண்மை தெருந்சாகனும்...

படத்துல இருக்குற பொன்னுங்க யாரு?? ஹிஹி...

எல்லாம் கிழக்கரையா?

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க