செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

தும் ஹிந்துஸ்தானி லெகின் ஹிந்தி நஹி மாலும்

"தும் ஹிந்துஸ்தானி லெகின் ஹிந்தி நஹி மாலும்"
மேல உள்ள கிரகம் புடிச்ச வார்த்தையைத்தான் பருப்புபயலுக(வடக்கத்தானுக்கு வளைகுடாவில உள்ள பட்டப்பேரு) தமிழனப் பாத்ததும் முதல்ல கேட்பாய்ங்க.
எனக்கு உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்துறும். உடனே கீழே உள்ள கேள்வியெல்லாம் அவங்களப் பாத்து கேட்பேன்.

1.நீ தமிழ் படிக்கிறியாடா? நானும் இந்தி படிக்கிறேன்.

2.இப்ப ஹிந்தியை கண்டிப்பா பேசனும்கிறதுக்கு நம்ம ரெண்டு பேரும் வட இந்தியாவிலயாடா வேல பாக்குறோம்?

3.நான் ஹிந்தி பேசுனா உனக்கு லாபம் எனக்கு என்னடா லாபம்?

4.ஹிந்தியப் பேசி பேசி உன் தாய் மொழி பீகாரி குஜராத்தியல்லாம் நீயும் உன் சந்ததிகளும் மறந்து திரியுற மாதிரி என்னையும் தமிழை மறந்து திரியச் சொல்லுறியா?

5.ஹிந்தி ஹிந்தின்னு பேசுறியே ஹிந்தி இந்தியாவின் பூர்விக மொழியாடா? 1000 வருசத்துக்கு முன்னாடி இந்தியாவில் ஹிந்தி இருந்துச்சுடா?

6.Isometric Drawing, Specification AISC, ASTM,ANSI STANDRD மாதிரி வேலை விபரமெல்லாம் ஹிந்தியிலயாடா வருது?.

7.நீ எப்பத்தாண்டா நல்லா இங்கிலீஷ் பேசி எங்கள மாதிரி நல்ல வேலை பார்ப்பே? எவ்வளவு நாளைக்கு இப்படி இங்கே கக்கூஸ் கழுவிகிட்டு இருப்ப?

அதுக்கு மேல எவனும் ஒன்னும் பேச மாட்டான்.

இவிங்கள மறுபடியும் கனக விசயர் தலைல்ல கல்லு வச்சமாதிரி கல்லு வச்சி சுமக்க வச்சு தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து கண்ணகிக்கும் திருவள்ளுவருக்கும் சிலை செய்யனும்னே..


13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்னதான் மழுப்பினாலும் ஹிந்தி தெரியாம வளைகுடா நாடுகள்ல (குறிப்பா UAEல) குப்பை கொட்டமுடியாதுங்கறத ஏத்துக்கத்தான் வேணும்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

:)

nila சொன்னது…

ஹா ஹா ஹா... நானும் இதை அனுபவித்து இருக்கிறேன்... ஆனால் வளைகுடாவில் அல்ல... இங்கே நம் தலைநகரம் டெல்லியில் :(

Bleachingpowder சொன்னது…

//kudikaarann சொன்னது…
என்னதான் மழுப்பினாலும் ஹிந்தி தெரியாம வளைகுடா நாடுகள்ல (குறிப்பா UAEல) குப்பை கொட்டமுடியாதுங்கறத ஏத்துக்கத்தான் வேணும்
//
அங்க மலையாளமும் ஆங்கிலமும் தெரிஞ்சா போதுங்கோ. அவனுகளுக்கு இங்கிலீஷ் பேர வராதுங்குறதுக்காக நம்ம இந்த கத்துக்க சொல்லுவானுங்க அந்த நாதாரிங்க

பொறம்போக்கு சொன்னது…

தலைவரே,அனைத்து வட இந்தியர்களும் (தாய் மொழி வெவ்வேறாயினும்) ஏன் மலையாளிகளும் கூட நன்றாக ஹிந்தி பேசுகின்றனர். உங்கள் தமிழனுக்குத்தான் தமிழைத்தவிர வேறு மொழி தெரியாது. தெரிய விடவில்லை உங்கள் அரசியல்வாதிகள். உங்கள் சந்ததியினரையாவது தமிழ் மட்டுமே உலகில் சிறந்த மொழி என்று ஏமாற்றாமல் ஹிந்தி படிக்க விடுங்கள்...

பெயரில்லா சொன்னது…

ஏ! பொறம்போக்கு!

நீயே ஒரு பொறம்போக்கு!

எங்களுக்கு நீ என்ன கருத்து சொல்லற?

எங்களுக்கு தோணினா நாங்க ஹிந்தி படிச்சிக்கிறோம்

நீங்க ஒன்னும் எங்களுக்கு சோறு போடா வேணாம்.

எனக்கு தெயர்ந்சி நிறைய தெலுகு, கன்னட பசங்க ஹிந்தி ஸ்கூல்ல படிச்சாங்க
ஆனா பேச வராது.

நான் தெரியாம தான் கேட்கரன் ஹிந்தி என்ன சூப்பர் மொழியா?
தமிழ் என்ன நாதாரி மொழியா?

suresh சொன்னது…

arumaiyyana neththiyadii.. thodarndhu eludhavum ( naan englishil type panniyammakku mannickavum)

Unknown சொன்னது…

இந்தி நமக்கு தேவையெனில் கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.கண்டிப்பாக கற்றுக் கொள்ளத்தான் என்று யாரும் சொல்வதற்கு இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.மேலும் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.இந்திய நிர்வாக மொழி(Official Language)களுள் இந்தியும் ஒன்று. மீறி வாதிடுபவர்களிடம் தேசிய மொழி என்வதற்கான ஆதாரத்தினை கேளுங்கள்.
அன்புடன் சிவா

Unknown சொன்னது…

//
Isometric Drawing, Specification AISC, ASTM,ANSI STANDRD
//

ஆமா, இதெல்லாம் என்ன??? :( :(( :((( :((((

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி
குடிகாரன்
யூர்கன் க்ருகியர்
நிலா
பிளிச்சிங் பவுடர்
பொறம்போக்கு
அனானி
சுரேஷ்
சிவா
மஸ்தான்
உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

மஸ்தான்
Isometric Drawing, Specification AISC, ASTM,ANSI STANDRD இவை அனைத்தும் அமெரிக்க தர விபரங்கள்.பொறியாளர்களுக்கானது.எண்ணைக் கிணறு கட்டுமானத்தில் இவைதான் ஸ்டாண்டர்ட்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

தங்கராசு,

நல்லா எழுதியிருக்கீங்க உங்க அனுபவத்த.. உங்கள யாரும் கட்டாயப்படுத்தலியே! கட்டாயப்படுத்துனாத்தான் தப்பு :))

இன்றைய தேதிக்கு பல மொழிகள் தெரிந்தவன் தான் வல்லவன். இது நமக்கும் பொருந்தும். நம் தமிழகத்துல எல்லாருக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு எல்லாம் இருந்தா, நம்ம ஏங்க வெளியூருக்குப் போக வேண்டும்? இங்கயே இருந்தா நமக்கு எதுக்குங்க மற்ற மொழிகள் தேவை? தப்பு எங்கேன்னு புரியுதுங்களா? தமிழர்கள் முன்னேறினா தமிழும் முன்னேறும்! ஜப்பான் மாதிரி தமிழ்நாடு இருந்தா ஹிந்தியும் வேண்டாம், ஆங்கிலமும் வேண்டாம்!!

நம்மவர்கள் தமிழையாவது நல்லா பேசுறாங்களா, எழுதுறாங்களா? அதை முதல்ல சரி செய்ய வேண்டும் ;)

Ram சொன்னது…

i had also same troubles, when i ask others, why u never learn tamil, there answer is no need, so i used tell them that i Had no need to learn hindi, if you want to communicate with me speak english or tamil,

கார்கோட நாகன் சொன்னது…

அலோ...இதுவரைக்கும் ஹிந்தி பேசத் தெரியாம தமிழர்கள் யாராவது செத்துப் போயிருக்காங்களா.? இல்ல,கல்யாணம் ஆகாம போயிருக்கா.? இல்ல மூச்சு கீச்சு தடுமாறுதா.? சொல்லப் போனா இந்தியாவிலயே இங்கிலீஷ் நல்லா பேசுறது தமிழன் தான்..! நமக்கு ஒரு மொழிய கத்துக்கிறது ஒரு பிரச்சினையே இல்லை..ஆனால் எந்த மொழிய கத்துக்கணும்ங்றதுல ஒரு சுதந்திரம் வேணும்ல..?!

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க