திங்கள், 14 செப்டம்பர், 2009

ஒரு தேவதை என் எதிரில் வந்தால்...


ஊரெங்கும் தேவதை வந்து
உவந்திடுதாம் வரங்கள் பத்து
பதிவுலகில் படித்த நானும்
பழங்கதை ஒன்று நினைக்கலானேன்.

அந்தகன் வந்து அழைக்க மாட்டானா
என அல்லலுற்றிருந்தான்
ஏழை அந்தகன் ஒருவன்.
பார்ப்பதற்கு விழிகள் இல்லை
பரிவுகாட்டும் மொழிகள் இல்லை
செல்வம் ஈட்டிடவும் வழிகள் இல்லை
படும் துன்பங்களும் ஒழியவில்லை-என
விதிர்விதிர்த்து இருந்த அவன்முன்
எதிரில் வந்தாள் ஒரு தேவதை.

பாரெங்கும் உனைப்போல்
பலபேருக்கு கொடுக்க வேண்டும்
பத்துவரம் இல்லை மகனே
ஒரு ஒத்தைவரம் கேள் என்றாள்
கிடைப்பதோ வரம் ஒன்று -அது
போக்க வேண்டும் அவனை
வாட்டிடும் துயரை வென்று
யோசித்தான் அந்தகன்
கேட்டிட்டான் இப்படி
'அம்மா
என் பேரன் தங்கக் கிண்ணத்தில்
பால் அருந்துவதை
என் மாளிகை உப்பரிகையில் நின்று
உவப்புடனே நான் காண வேண்டும்"

என் எதிரிலும் தேவதை வந்தால்...
பத்து வரம் கேட்க வேண்டாம்
ஒரு ஒத்தை வரம் கேள் என்றால்
நயப்புடனே நானும் கேட்பேன்
நல்லதொரு வரம் ஒன்று.
'அம்மா
மறைந்த எம் மன்னவன்
மதயானை போல மீண்டு வந்து
மடிந்த எம் மக்கள் முன்பும்-உயிரை
மாய்த்த எம் முத்துகுமரன்கள்
கண்ணெதிரேயும்
மகிந்தா, கோத்தபையா
மற்றும் சரத் பொன்சேகா எதிரிகளையும்
'கை' காட்டும் கருணா போன்ற துரோகிகளையும்
கடிதில் கழுவேற்ற வேண்டுமென
கச்சிதமாய் கேட்பேன் வரம் ஒன்று.






8 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

உலகத்தமிழர்
உளமெலாம்
உழன்றிடும்
ஆசையை
அன்பர் நீர்
அழகாக
உரைத்திட்டீர்
ஐயா....

துபாய் ராஜா சொன்னது…

வான் தெய்வம்
உண்மையென்றால்
வரமிது
பலித்திடும்..

மன்னவன்
மீண்டு(ம்)
வந்தால்
நம் இனமது
தழைத்திடும்..

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ராஜா
கவிதைக்கு கவிதையாலயே பின்னூட்டம்
கலக்குறிங்க போங்க

லோகு சொன்னது…

அட்டகாசம்... அருமையான கவிதை.. அண்ணன் மறையவில்லை, மீண்டும் வருவார் என நம்புவோம்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க தம்பி லோகு வரவுக்கு நன்றி
நானும் அப்படித்தான் நம்புகிறேன்
மறைந்த என்றால் பதுங்கிய எனும் அர்த்தத்தில்தான் எழுதியிருக்கிறேன்
அண்ணன் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை

பழமைபேசி சொன்னது…

நல்ல எழுத்தாற்றல்!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//நல்ல எழுத்தாற்றல்//
வாங்க பழமைபேசி அண்ணா,
உங்களைவிடவாண்ணா பெருசா எழுதிட்டேன்
காலையில் உங்க கவிதைபடிச்சதுனால இருக்கும்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுங்கிற மாதிரி
பழமைபேசி பதிவைப் படித்தவரும் பாக்கள் எழுதுவார்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நண்பா இன்று தான் என் மின் அஞ்சலை பார்த்தேன் . மன்னிக்கவும் .

தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி

விரைவில் எழுதுகிறேன் .

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க