செவ்வாய், 8 செப்டம்பர், 2009

தொடர்பதிவு (நாங்களும் ரவுடிதாண்டி)


தீடிர்னு நண்பர் 'தென்பொதிகை சாரல் காற்று எப்பவுமே கவிதை ஊற்று" துபாய் ராஜா அவர்கள் தொடர்பதிவு ஒன்று எழுத அழைத்தார்.வலையுலகிற்கு வந்தே ஒரு மாதம்தான் ஆகிறது இதுல பல்சுவைப் பதிவர்ன்னு பட்டம் வேற கொடுத்திருக்கார், அவரோட பதிவுல.நண்பருக்கு நன்றிகள் பல கூறி என்னால என்ன முடியுமோ அத எழுதுகிறேன்.

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.(ஏன் அழைச்சிங்க யாருங்க நீங்க)
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.(தண்டோரா போட்டது எல்லாருக்கும் கேட்டாச்சா)
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.(அரசன் கொடுக்கிற ஆயிரம் பொண் பரிசும் எனக்கே கிடைக்கனும் சொக்கா...)
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டி விட வேண்டும் (அதுதான் நல்லா செய்வமே)
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்ப வேண்டும்.(யாம் பெற்ற இ(து)ன்பம் பெருக வையகம்)
6.அழைக்கப்பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.(அரியர் எழுத வழியில்லாம என்ன காலேஜி இது)
(நண்பர்களே அடைப்புக்குறிக்குள் இருப்பது விதியல்ல சொக்கனை நினைத்து நான் புலம்பியவை அவை)
*********

ஆரம்பிப்பமா?
(அய்யோ அய்யோ இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது அவ்வ்வ்வ்வ்)


1. A – Avatar (Blogger) Name / Original Name :செல்வனூரான்/தங்கராசு நாகேந்திரன்

2. B – Best friend? :சின்ன வயசுலருந்தே எங்கண்ணன் சுந்தரமூர்த்திதான் இன்னும் ஊருல பலபேருக்கு நாங்க அண்ணன் தம்பின்னு தெரியாது.

3. C – Cake or Pie? :எதக்கொடுத்தாலும் ஓக்கேதான் இங்க சவுதில பாலைவனத்துல திங்குறதுக்கு எதா இருந்தாத்தான் என்ன?

4. D – Drink of choice? : பழயதுறவி பழயபீப்பாய் பிரஞ்சுமாவீரன் இப்படி எது கிடச்சாலும் ok (காஞ்சு கிடக்கிறமய்யா பாலைவனத்துல)

5. E – Essential item you use every day? : கைவிரல்கள்தான் (எவ்வளவு சம்மரி அடிச்சாலும் வலிக்காது)

6. F – Favorite color? : நம்ம மனசு மாதிரி எப்பவும் வெள்ளைதான்.

7. G – Gummy Bears Or Worms: என்னது ....கரடியும் புழுவுமா?..

8. H – Hometown? : செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி ஊரு.

9. I – Indulgence?: நிறைய உண்டு இப்ப அடிக்கடி பண்ணுறது "நான் ஒரு ப்லொக்கர்டா"ன்னு நண்பர்கள்கிட்ட அலப்பறை கொடுக்கிறது(indulge in tall talk).

10. J – January or February?: இந்த மாசத்துல வருசப்பிறப்பு ஒருநாளு,பொங்கலுக்கு மூனு நாளு,குடியரசுதினம் ஒருநாளு, ஞாயிற்று கிழமை நாலு நாளு ஆக மொத்தம் ஒம்பது நாளு லீவு ஆங்..ம்....(பசங்க படத்துல வர்றமாதிரி படிக்கவும்)

11. K – Kids & their names? - ஒன்னே போதும்னு நினைக்க வைச்சுகிட்டு இருக்கிற பையன், பேரு சிவகார்த்திக் (எங்கப்பன் முருகன் பேராக்கும்).

12. L – Life is incomplete without?- O2 அதாங்க ஆக்சிஜன் ஹி ஹி (நமக்கு O2 வேலைதாங்க)

13. M – Marriage date? : நல்லாத்தேன போயிகிட்டு இருந்துச்சு ஹி ஹி (12-04-2006)

14. N – Number of Siblings?:பொண்டாட்டியத்தவிர எல்லோரும் அக்கா தங்கச்சிங்கதான்.பாக்குற பழகுற எல்லோரும் அண்ணன் தம்பிதான்.

15. O – Oranges or Apples?: முதல்லயே சொல்லிட்டேன் காஞ்சு கிடக்குறோம் எதுனாலும் ஒகேதான்.

16. P – Phobias/Fears? -பைரவர் வாகனத்த கண்டா ரொம்ப பயம் ஒரு தெருவில அவரப்பாத்தா மறுபடி அந்த தெருப்பக்கமே போக மாட்டேன்.மத்தபடி சிங்கம் புலிக்கெல்லாம் நாங்க பயப்படுறது இல்ல.

17. Q – Quote for today?: "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"

18. R – Reason to smile?: சிரிச்சா உங்க கன்னத்துல விழுற குழி அழகா இருக்குன்னு என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா.

19. S – Season? மழைக்காலம் (அந்த மண்வாசனை ரொம்ப பிடிக்கும்)

20. T – Tag 4 People?- சாருவைக் கூப்பிட ஆசைதான் ஆனா அதுக்கு முன்னாடி ரஜினியக் கூப்பிடனும்னு லக்கி ஏற்கனவே சூடு வாங்கியிருக்கிறதுனால நான் விரும்புற உச்ச நட்சத்திரங்கள் இவங்கள கூப்பிடுறேன்.
1.நண்பர் ஸ்டார்ஜன்

2.பிரபல பிரியாணி புகழ் கிளியனூர் இஸ்மத் பாய்
3.கவிஞர்.நெல்லைக்கவி சரவணக்குமார்
4.மரியாதைக்குரியதலைமை ஆசிரியர் 'ஜெரி ஈசானந்தா"

21. U – Unknown fact about me?: என்னத்த சொல்ல....ஒன்னுமே புரியல உலகத்துல..

22. V – Vegetable you don't like? -கருவேப்பிலையை கூட நான் விடுறதுல்ல. சாப்பிடும்போது கழிவில்லாம சாப்பிடனும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.

23. W – Worst habit?: பொண்டாட்டிக்கு பயப்படுறது. மாத்த முடியல பழகிப்போச்சு.ஹி ஹி ...

24. X – X-rays you've had?: ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல, நான் மண்டை உடைபட்டு விழுந்ததை மறந்து செல்ல...(23 க்கும் 24க்கும் சம்பந்தமில்லைப்பா)

25. Y – Your favorite food? பழய கஞ்சிதான் இதப்பத்தி ஒரு பதிவு போடனும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.(மதுரை வீரன் படத்துல கஞ்சி குடிச்சுகிட்டு கலைவானர் சொல்லுவாரு 'செல்லி இந்த பழயகஞ்சிய சாப்புட்டுபிட்டு கடசியில இருக்கிற தண்ணிய குடிக்கும் போது அடா அடா இததான் சொர்க்கம்னு சொன்னாய்ங்களோ")

26. Z – Zodiac sign? -மூல நட்சத்திரம்,தனுசு ராசி (மூல நட்சத்திரம் என்கிறதால பொண்ணு கிடைக்காம (எனக்கு பொன்னு கொடுத்தா மாமனார் மண்டையப் போட்டுறுவானாம்)அலைஞ்ச பழய கதை ஞாபகம் வந்துடுச்சு....)
****************************
இனி தமிழில்

1. அன்புக்குரியவர்கள் : அம்மாவும் அப்பாவும்
2. ஆசைக்குரியவர் : அடிச்சாலும் புடிச்சாலும் எப்பவும் நம்ம பொண்டாட்டிதான்.
3. இலவசமாய் கிடைப்பது : அறிவுரைகள்

4. ஈதலில் சிறந்தது : இடதுகை அறியாமல் வலது கை கொடுப்பது.
5. உலகத்தில் பயப்படுவது : உண்மை பேசாதவரைக் கண்டு
6. ஊமை கண்ட கனவு : சேதுசமுத்திரம் திட்டம்
7. எப்போதும் உடனிருப்பது : தன்னம்பிக்கை..
8. ஏன் இந்த பதிவு : நட்புக்காக
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : படுத்தா தூக்கம் வரனும்
10.ஒரு ரகசியம் : காதக் கொடுங்க சொல்லுறேன்
11.ஓசையில் பிடித்தது : துதிப்போர்க்கு வல்வினைபோம்...(சூலமங்களம் சகோதரிகள்)
12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்

13.(அ)ஃறிணையில் பிடித்தது: யானை

அம்புட்டுதேன்... இனி அடுத்தவுங்க பாடு
ஸ் அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே......18 கருத்துகள்:

உலவு.காம் (ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி உலவு இணைச்சாச்சு

துபாய் ராஜா சொன்னது…

அட்டகாசம்.எதிர்பார்த்ததை விட பின்னி பெடலெடுத்து விட்டீர்கள்.

விதிகளுக்கே அடைப்புக்குறிக்குள் நையாண்டி.. !!. ம்ம்.எல்லாம் விதியோட விதி... :))

துபாய் ராஜா சொன்னது…

//D – Drink of choice? : பழயதுறவி பழயபீப்பாய் பிரஞ்சுமாவீரன் இப்படி எது கிடச்சாலும் ok (காஞ்சு கிடக்கிறமய்யா பாலைவனத்துல)//

எங்க போனாலும் 'தண்ணி'ப்பிரச்சினை தான் பெரிய பிரச்சினையாயிருக்குப்பா..... :))

துபாய் ராஜா சொன்னது…

//D – Drink of choice? : பழயதுறவி பழயபீப்பாய் பிரஞ்சுமாவீரன் இப்படி எது கிடச்சாலும் ok (காஞ்சு கிடக்கிறமய்யா பாலைவனத்துல)//

எங்க போனாலும் 'தண்ணி'ப்பிரச்சினை தான் பெரிய பிரச்சினையாயிருக்குப்பா..... :))

துபாய் ராஜா சொன்னது…

//J – January or February?: இந்த மாசத்துல வருசப்பிறப்பு ஒருநாளு,பொங்கலுக்கு மூனு நாளு,குடியரசுதினம் ஒருநாளு, ஞாயிற்று கிழமை நாலு நாளு ஆக மொத்தம் ஒன்பது நாளு லீவு ஆங்..ம்....(பசங்க படத்துல வர்றமாதிரி படிக்கவும்)//

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கய்யா...... :))

துபாய் ராஜா சொன்னது…

//M – Marriage date? : நல்லாத்தேன போயிகிட்டு இருந்துச்சு ஹி ஹி//

ஒய் பிளட் சேம் பிளட்...

இந்த இடத்துல எல்லோருமே பிரேக் ஆகுறாங்கப்பா... :))

துபாய் ராஜா சொன்னது…

//R – Reason to smile?: சிரிச்சா உங்க கன்னத்துல விழுற குழி அழகா இருக்குன்னு என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா.//

மக்களே,'வீட்டம்மா'ட்ட நொரண்டு பேசி கன்னத்துல இடி வாங்கி டொக்கு விழுந்ததை எப்படியெல்லாம் ரொமாண்டிக்கா மாத்துறாங்கய்யா....... :))

துபாய் ராஜா சொன்னது…

//T – Tag 4 People?- சாருவைக் கூப்பிட ஆசைதான் ஆனா அதுக்கு முன்னாடி ரஜினியக் கூப்பிடனும்னு லக்கி ஏற்கனவே சூடு வாங்கியிருக்கிறதுனால.....//

எப்படியெல்லாம் பொருத்திப் போடுறாய்ங்க....

லோகு சொன்னது…

அட்டகாசமான பதிவுங்க..
சரி காமெடி.. படிக்க படிக்க தனியா சிரிச்சுட்டு இருந்தேன்.. சூப்பர்..

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ராஜா
//அட்டகாசம்.எதிர்பார்த்ததை விட பின்னி பெடலெடுத்து விட்டீர்கள்//

எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்.

//எங்க போனாலும் 'தண்ணி'ப்பிரச்சினை தான் பெரிய பிரச்சினையாயிருக்குப்பா..... :))//
உண்மையிலயே தண்ணி இல்லாக் பொட்டலுலதான் இப்ப இருக்கோம்.

//ஒய் பிளட் சேம் பிளட்...

இந்த இடத்துல எல்லோருமே பிரேக் ஆகுறாங்கப்பா... :))//
இஃகி இஃகி

////R – Reason to smile?: சிரிச்சா உங்க கன்னத்துல விழுற குழி அழகா இருக்குன்னு என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா.//

மக்களே,'வீட்டம்மா'ட்ட நொரண்டு பேசி கன்னத்துல இடி வாங்கி டொக்கு விழுந்ததை எப்படியெல்லாம் ரொமாண்டிக்கா மாத்துறாங்கய்யா....... :))

நம்புங்க சாமி உள்ளதைதான் சொல்லுறேன்.

////T – Tag 4 People?- சாருவைக் கூப்பிட ஆசைதான் ஆனா அதுக்கு முன்னாடி ரஜினியக் கூப்பிடனும்னு லக்கி ஏற்கனவே சூடு வாங்கியிருக்கிறதுனால.....//

எப்படியெல்லாம் பொருத்திப் போடுறாய்ங்க....//

ஏதோ நம்மால முடிஞ்சது இஃகி இஃகி

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//லோகு சொன்னது…
அட்டகாசமான பதிவுங்க..


வாங்க தம்பி லோகு
உங்க வருகைக்கு நன்றி
//சரி காமெடி.. படிக்க படிக்க தனியா சிரிச்சுட்டு இருந்தேன்.. சூப்பர்..//
எல்லாம் காலையில உங்க பதிவப் படிச்ச inspiration தான்.

ரமேஷ் விஜய் சொன்னது…

அட்டகாசமான பதிவு

mix சொன்னது…

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ரமேஷ் விஜய்
உங்க முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

செல்லாதவன் சொன்னது…

பொண்டாட்டியத்தவிர எல்லோரும் அக்கா தங்கச்சிங்கதான்.பாக்குற பழகுற எல்லோரும் அண்ணன் தம்பிதான்.
என்ன அருமை!அற்புதம்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நண்பா இன்று தான் என் மின் அஞ்சலை பார்த்தேன் . மன்னிக்கவும் .

தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி

விரைவில் எழுதுகிறேன் .

adhi சொன்னது…

Anna.... Arumaie...

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க