வியாழன், 3 செப்டம்பர், 2009

மில்லியன் டாலர் கேள்வி இரண்டு

ரொம்ப நாளா என் மண்டைய குடைஞ்சுகிட்டு இருக்கிற இரண்டு மில்லியன் டாலர் கேள்வி இது. இதுக்கு வலையுலகில் இருந்து பதில் எதிர்பார்த்து இந்த பதிவ போடுறேன்.

முதல் கேள்வியைப் படிக்கிறதுக்கு முன்னாடி கீழே உள்ள படத்தப் பாருங்க.ஒரு செம்மறி ஆட்டு மந்தை போயிகிட்டு இருக்கு.அதுல முன்னாடி ஒரு கருப்பு ஆடு மத்த செம்மறி ஆடுங்களை வழிநடத்திப் போகுது பாருங்க.


இதுதான் அந்த கருப்பு ஆடு. ஆனா வழக்குல இந்த ஆடை வெள்ளாடுன்னு சொல்லுவாங்க.இது ஒரு இனம். ஆனா இது வேற இனமான செம்மறி ஆடுங்கள வழி நடத்திப் போகுது.இப்ப இதுதான் மண்டைய குடையுற முதல் கேள்வி.

1.செம்மறி ஆடுக்கு சொந்த புத்தி இல்லையா?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த கேள்விக்கு போகிறதுக்கு முன்னாடி கீழே உள்ள படத்தப் பாருங்க.

இவுங்க ஜெயலலிதா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தானைத் தலைவி. திருமதி முகம் படைத்த திருவளர்செல்வி.சட்டசபையிலேயே 'நான் பாப்பாத்திதான்"ன்னு தான் சார்ந்த இனத்த உலகமறிய சொன்ன தங்கத் தலைவி.

பார்ப்பனர்னா மேற்கு ஜெர்மனியிலருந்து கைபர் போலன் கணவாய் வழியா இந்தியாவுக்கு வந்த ஆரிய இனம்னு சின்ன வயசுல புஸ்தகத்துல படிச்சுருக்கேன்.அதே புத்தகத்துல

தமிழ்நாடுங்கிறது திராவிட நாடுன்னும் இங்க உள்ள மக்கள் திராவிட மக்கள்னும் படிச்சுருக்கேன்.அப்ப அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துல இருக்கிறவுங்களும் திராவிடர்களாத்தான் இருப்பாங்க.

இப்ப இதுதான் மண்டையக் குடையுற ரெண்டாவது கேள்வி.

2.அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் இது கட்சியோட பேரு.இந்த கட்சியில இருக்கிற திராவிட இன மக்களை ஆரிய பெண்மணியால் முன்னேற்ற முடியுமா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

யாராச்சும் பதில் சொல்லுங்களேன், பிளீஸ் ரொம்ப நாளா மண்டைய குடையுது.


5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயோ........ ஐயோ..... இது கூட தெரியாம இவரு பச்சை தமிழனாமா....... :)

துபாய் ராஜா சொன்னது…

தல,முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்குங்க...
"அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்"
"அம்மா திராவிட முன்னேற்ற கழகமாகி" கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப்போகுது.

அம்மா நாமம் வாழ்க.....
அம்மா போட்டிருக்கிற நாமம் வாழ்க....ன்னு கூவத்தெரிஞ்ச குண்டர்கள்தான் இப்போ கட்சில தொண்டர்களா இருக்காங்க.....

துபாய் ராஜா சொன்னது…

எனக்கு செம்மறியாட்டு கறி பிடிக்காது. அதனால அதைப்பற்றி கருத்து சொல்லமாட்டேன்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி அனானி உங்க கருத்துக்கு
"பச்சைத் தமிழனா" இருக்குறதுனாலதான் விவரம் தெரியாம இதக் கேட்குறேன்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க துபாய் ராஜா
//அம்மா நாமம் வாழ்க.....
அம்மா போட்டிருக்கிற நாமம் வாழ்க....ன்னு கூவத்தெரிஞ்ச குண்டர்கள்தான் இப்போ கட்சில தொண்டர்களா இருக்காங்க.....//

ரொம்ப சரியா சொன்னிங்க..

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க