செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அது......

அது.......

ஒரு ஊர்ல ஒரு பஞ்சாயத்து தலை(வர்) இருந்தாரு. அவரு பேஸும் போது பெரும்பாலும் "அது' இல்லைன்னா 'இது' இந்த இரண்டு வார்த்தைதான் அதிகம் வரும். வாயில வசம்ப வச்சு தேச்சாலும் வேற வார்த்தைகள் அவருக்கு ரொம்ப வராது.
ஆனாலும் என்ன செய்யுறது தலை(வரா) ஆச்சேன்னு ஊருல மக்கள் அவரு என்ன அதுவா பேசினாலும் ஒரு இதுவா புரிஞ்சுகிறுவாங்க.

ஒருநாள் பஞ்சாயத்து அலுவலகத்தில குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் செய்யனும்னு ஒரு கூட்டம் போட்டாங்க. அதுல பஞ்சாயத்து தலைவர் என்கிற முறையில தலைவர கூப்பிட்டு பேச சொன்னாங்க.

தலை(வர்) எந்திருச்சு மைக்க புடிச்சாரு

'எல்லோருக்கும் ஒரு இதுவான வணக்கம். அதைப் பத்தி பேசுறதுக்கு ஒரு இதுவா என்னைக் கூப்பிட்டாங்க. அதைப் பத்தி நான் சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்லை. அது என்னனா நம்ம நாட்டுல அது ரொம்ப பெருகிட்டதால எல்லோருக்கும் ஒரு இது தேவைப்படுது. எல்லோரும் அதப் பண்ணிக்கிட்டாத்தான் நம்ம நாடு ஒரு இதுவா மாற முடியும். அதுனால எல்லார் வீட்டுலயும் கண்டிப்பா இத பண்ணிக்கனும்.இத ரொம்ப தாழ்மையோட ஒரு இதுவா சொல்லிக்கிறேன். மறுபடியும் எல்லோருக்கும் ஒரு இதுவான வணக்கம்"
என்னங்க கதை ஒகேவா?


அது.......


2 கருத்துகள்:

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

இதை பத்தி எழுதும் போது ஒரு டிஸ்கி போட மறந்திட்டேன் அது.....

இதுக்கும்(கதை) அதுக்கும் (படம்) எந்த சம்பந்தமமும் இல்லிங்கண்ணா.....

துபாய் ராஜா சொன்னது…

//இதை பத்தி எழுதும் போது ஒரு டிஸ்கி போட மறந்திட்டேன் அது.....

இதுக்கும்(கதை) அதுக்கும் (படம்) எந்த சம்பந்தமமும் இல்லிங்கண்ணா.....//

அது........ :))

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க