சனி, 12 செப்டம்பர், 2009

"மானாட மயிலாட" எதற்கு?




அண்டை மாநிலத்தில்
அவளோட ராவுகளும்
அஞ்சரைக்குள்ள வண்டிகளும்
வந்திறங்கிய காலம் சொல்லும்
அங்கு
கம்யூனிஸ்டுகள் களப்பனியில்
தீவிரமாய் இருந்தார் என்று.




இந்திய முட்டாள்கள்
பதினோருபேர்
மூன்று ஐந்து நாள் ஆட்டமென்றும்
ஏழு ஒரு நாள் ஆட்டமென்றும்
வெளிநாடு
டூர் சென்ற தேதிகள் சொல்லும்
அன்று பாராளுமன்றத்தில்
எவ்வளவு பரபரப்பு இருந்தது என்று



இளைஞர்களின் சக்தி
இணையற்ற சக்தி
மாணவர்களின் சக்தி
மாபெரும் சக்தி
எழுச்சிப் பெற்றால்
என்ன ஆகும் என

பழம் தின்று கொட்டைப்போட்ட
பகுத்தறிவு பகலவன்களுக்குத்
தெரியாதா என்ன?



பெரியதிரை "டார்கெட்டு" உள்ள
சின்னத்திரை கூத்தாடிகளும்
பெரியதிரை"மார்கட்டு" இழந்து
சின்னத்திரை வந்த 'ஆத்தா'டிகளும்
அரிப்பை சொரிந்து கொள்ளும்
அழகினை பார்க்கும் வரைக்கும்



முத்துக்குமரன்களை
மறைத்து
"முத்தழகு" தங்கதாமரை
வாங்கியதை
தமிழன் நமக்குத்
தலையங்கமாய்
சொல்லுவார்கள்.

ஆட்சிமாறினால்

காட்சியும் மாறும்

"அய்யோ கொல்லுறாங்களே"

என்னும் படம் மட்டும்தான் ஓடும்.





10 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

நியாயமான அறச்சீற்றம்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த நாட்டிலே,நம் நாட்டிலே.....

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்........ :((

லோகு சொன்னது…

ம்ம்ம்ம்...

ttpian சொன்னது…

சோனியாவுக்கு வயது 16 அல்லது 17 இருக்குமா?

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி ராஜா கருத்துக்கும் வரவுக்கும்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//ttpian சொன்னது…
சோனியாவுக்கு வயது 16 அல்லது 17 இருக்குமா?//

என்ன வில்லத்தனம் ......
விடிய விடிய ராமாயனம் கேட்டு சீதைக்கு ராமர் சித்தப்பாவான்னு கேட்ட மாதிரி இருக்கு
தம்பி ttpian இந்த கருமத்தல்லாம் நான் பாக்குறதுல்ல

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க லோகு உங்கள மறந்திட்டேன்
பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாம்னு பாத்தா
நேத்து ரொம்ப சோகமா இருந்திங்க போலிருக்கு
சரியாய்டுச்சா?

வனம் சொன்னது…

வணக்கம் தங்கராசு நாகேந்திரன்

ம்ம்ம்ம் ரோம்ப நியாயமான வரிகள்.
சரி இதெல்லாம் யாறுக்கும் தெரியாது என நிணைக்கின்றீர்களா ? -- எல்லாறுக்கும் தெரியும் ஆனாலும் நான் ஏமாறுவேன் என அடம்பிடிக்கும் நம்ம தமிழ் மகா ஜனங்கள் இருக்கும் வரை இப்படித்தான்

இராஜராஜன்

பழமைபேசி சொன்னது…

தொடருங்கள் அண்ணாத்தே...

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//வனம் சொன்னது…
வணக்கம் தங்கராசு நாகேந்திரன்

ம்ம்ம்ம் ரோம்ப நியாயமான வரிகள்.
சரி இதெல்லாம் யாறுக்கும் தெரியாது என நிணைக்கின்றீர்களா ? -- எல்லாறுக்கும் தெரியும் ஆனாலும் நான் ஏமாறுவேன் என அடம்பிடிக்கும் நம்ம தமிழ் மகா ஜனங்கள் இருக்கும் வரை இப்படித்தான்

இராஜராஜன்//

வாங்க இராஜராஜன்
உங்க முதல் வருகைக்கு நன்றி.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//பழமைபேசி சொன்னது…
தொடருங்கள் அண்ணாத்தே//

நன்றிங்கண்ணா.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க