சனி, 5 செப்டம்பர், 2009

சும்மா அதிருதுல்ல.....


தமிழக உச்ச நட்சத்திரம் திரு.ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் B.E. civil engineering படித்து விட்டு கட்டிட காண்ட்ராக்டராக பணியாற்றினால் என்ன பேசியிருப்பார் என்பதே இந்த கற்பனை.

1."நான் பிளான்ல வரையுறதையும் கட்டுவேன்

வரையாததையும் கட்டுவேன்"

2."நான் எப்பக் கட்டுவேன் எப்படிக் கட்டுவேன்னு எனக்குத் தெரியாது

ஆனா கட்ட வேண்டிய நேரத்துல கரக்டா கட்டுவேன்"

3."கண்ணா நான் ஒரு அடி பவுண்டேசன் போட்டா

நூறு அடி பவுண்டேசன் போட்ட மாதிரி"

4."அதிகமா மணல் போட்ட காங்கிரீட்டும்

கம்மியா சிமிண்ட் போட்ட கட்டிடமும்

ரொம்ப நாள் இருந்த்ததா சரித்திரமே இல்லை".

5.கண்ணா ஆண்டவன் கெட்டவனுக்கு நூறு கிமீ

தார்ரோடு காண்ட்ராக்ட் கொடுப்பான் ஆனா

கடைசியில் மழையை பெய்யவெச்சு அவன கைவிட்டுடுவான்

நல்லவனுக்கு ஒரு கிமீ பாலம் காண்ட்ராக்ட் கொடுப்பான்

கடைசியில கைதூக்கி விட்டுவான்"

6."என் பிளான் தனி பிளான்

பாக்காதே தாங்க மாட்டே"

7.சித்தாளு கூலி நாள் கணக்கு

மேஸ்திரி கூலி வாரக் கணக்கு

இஞ்சினியர் கூலி மாசக் கணக்கு

வீட்டுக்காரன் போடுறது எப்பவும் தப்புக் கணக்கு"

8."சும்மா அதிருதுல்ல" (நான் கட்டின கட்டிடம்)


4 கருத்துகள்:

Rekha raghavan சொன்னது…

நிஜமாகவே அதிருதுங்க.

ரேகா ராகவன்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ரேகா ராகவன்
உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

துபாய் ராஜா சொன்னது…

முதல்ல 25-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே..

சீக்கிரம் 50 அடிங்க.

அதிரல்கள் அனைத்தும் அருமை.

//கண்ணா ஆண்டவன் கெட்டவனுக்கு நூறு கிமீ

தார்ரோடு காண்ட்ராக்ட் கொடுப்பான் ஆனா

கடைசியில் மழையை பெய்யவெச்சு அவன கைவிட்டுடுவான்

நல்லவனுக்கு ஒரு கிமீ பாலம் காண்ட்ராக்ட் கொடுப்பான்

கடைசியில கைதூக்கி விட்டுவான்//

அனைத்திலும் அருமை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நீங்க கட்டின இந்தக் கட்டுரை(யும்)
சும்மா அதிருதில்ல!!!

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க