வியாழன், 3 செப்டம்பர், 2009

உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு மாமா

என் பேரு கருணாகரன். படிச்சது B.A ஹிஸ்டரி இல்லை. B.E சிவில். நான் முன்னாடி ஊருல கவர்மெண்ட் இஞ்சினியரா வேலைப் பார்த்தேன். அதை விட்டுப்புட்டு இப்ப சவுதில வேலைப் பார்க்குறேன்.என்னடா 'காக்காசுனாலும் கவர்மெண்ட் வேலை பாக்கனும்"ன்னு நினைக்கிற ஊருல இவன் இஞ்சினியர் வேலையை விட்டுப்புட்டு ஏன் சவுதி வந்தான்னு நினைக்கிறிங்களா? கேளுங்க என் ஸ்டோரிய.....

எனக்கு ஒரு அத்தை மகள். பேரு அம்சவல்லி. என் மேல அவளும் அவ மேல நானும் ரொம்ப பாசம் வச்சிருந்தோம். காலையில் எங்க வீட்டு மொட்டமாடியில நான் தூங்கும் போது வந்து பாயில பக்கத்துல படுத்துக்கிட்டு பல்லு விளக்காம பக்கோடா சாப்பிடச் சொல்லி தொந்தரவு பண்ணுற அளவுக்கு புள்ள எம் மேல ரொம்ப பாசமா இருப்பா.

என்னதான் அத்தை மகளாயிருந்தாலும் முறைப்படி பொண்ணு கேட்கனுமேன்னு எங்க வீட்டுல போயி கேட்கயில எங்க மாமா என் கிட்ட சொன்னாரு "மாப்புளே நான் 1970ல்லே S S L C யிலே ஜில்லா பர்ஸ்ட்டா வந்தேன். படிச்சு முடிச்சதும் எனக்கு உடனே கவர்மெண்டு வேலை கிடச்சுருச்சு.எங்கூட படிச்ச மாப்பிள பெஞ்சுகாரனுல்லாம் இன்னைக்கு துபாய் சவுதின்னு போயி வீடு வாசல் கட்டி நல்லாருக்கும் போது நான் மட்டும் வாடகை வீட்டுலயே காலத்த தள்ளுறேன். அதுனால என் பொண்ண ஒரு துபாயி சவுதில வேலைபார்க்கிற கோடிஸ்வரனுக்குத்தான் கட்டித் தருவேனே தவிர உன்னை மாதிரி ஒன்னாம் தேதி சம்பளக்காரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்.அதுனால துபாய் கிபாயி போயி பணத்த சம்பாதிச்சு ஒரு கோடி ரூபாயை இந்த கையில கொடுத்துட்டு அந்த கையில பொண்ணக் கூட்டிட்டு போங்கன்னு' என் பீச்சாங்கையில அடிச்சு சொன்னாருங்க.

பீச்சாங்கையில அடிச்ச அடி வலிச்சாலும் வலிக்காத மாதிரி காட்டிக்கிட்டு "மாமா உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்குன்னு" சொல்லிபுட்டு பாத்துகிட்டு இருந்த கவர்மெண்ட் வேலைய விட்டு புட்டு சவுதி வந்துட்டேன்.

சவுதி வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. சவுதிலதான் பொண்ணுங்கள பாக்க முடியாது, தண்ணி கிண்ணி அடிக்க முடியாது. காசு இருந்தாலும் செலவழிக்க முடியாது. அதுனால காசு மிச்சமாகும் சீக்கிரமா ஒரு கோடி தேத்திப்புடலாம்ன்னு வந்தேன்.

வந்து ஒரு அஞ்சு வருசம்னே. ராப்பகலா வேலை பாத்தேன். நாய் படாத பாடு பட்டேன்.மாசம் ரெண்டு லெச்ச ரூவா சம்பளம்னே. வீட்டுக்கு போன் பண்ணுனாக்கூட செலவாகும்னு சிக்கனமா காசு சேத்து ஒரு கோடி ருபா திரட்டிபுட்டேன்.

ரொம்ப சந்தோசமா வந்து மாமனப் பாத்து ஒரு கோடி ரூவாயை காட்டி "இப்ப பொண்ணக் குடுங்க"ன்னு கேட்டேன்னே. அதுக்கு அந்த ஆளு சொல்லுறாரு "மாப்பிளே நீ சவுதி போனவுடனே ஒரு துபாயி மாப்பிள வந்து ஒரு கோடி ரூபா கொடுத்துக் கேட்டாரு அவருக்கு நான் பொண்ணக் கொடுத்திட்டேன். அவளுக்கு கல்யாணமாயி அஞ்சு வருசமாச்சு இப்ப உள்ளூரிலதான் இருக்காங்கன்னு"ன்னு.

மனசு ரொம்ப வலிச்சிதுன்னே. இருந்தாலும் வலிக்காத மாதிரியே காட்டிகிட்டு 'உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா'ன்னு சொல்லிபுட்டு வந்துட்டேன்னே.

அதுக்கப்புறம் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போயிருச்சுன்னே. வீட்டுக்கு வர்ற வழியிலேயே ஒரு குவார்ட்டர் மானம் கெட்ட மானிட்டரையும் ஒரு பூச்சி கொல்லி மருந்தயும் சேத்தே வாங்கிட்டு வந்துட்டேன். வீட்டுல வந்து ரெண்டையும் கலக்கி குடிக்கப் போகையில யாரோ கதவ தட்டுற சத்தம் கேட்டுச்சு.

யாருடான்னு கதவைத்திறந்து பாத்தா ஒருத்தன் அரக்கப் பறக்க உயிரு போற அவசரத்துல ஓடி வந்தவன் மாதிரி ஒருத்தன் நிக்கிறான். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிகிட்டே அவன் சொல்லுறான்" என் பேரு செந்தட்டிக் காளை உங்க அத்த பொண்ணு அம்சவல்லியைத்தான் நான் கட்டிருக்கேன். நீங்க வந்த விபரம் இப்பத்தான் மாமா சொன்னாரு.உங்க ஒருகோடி ருபா விசயத்தியும் சொன்னாரு. அதான் உங்களப் பாக்க ஓடோடி வந்தேன்"னு.

'என்ன விசயம்'னு அந்த துபாய் மாப்பிள்ளையை கேட்கும் போது அவன் சொல்லுறான்' தம்பி நான் ஒரு ரெண்டு கோடியா தந்துடுறேன். நீயே அம்சவல்லிய கூட்டிகிட்டுப் போப்பா'ன்னு

"என்னங்க சொல்லுறிங்க' அப்படினு நான் கேட்க

"தம்பி கொஞ்சம் நஞ்சமா படுத்துறா.. தீணியா திங்கிறா வாங்கி கொடுத்து மாள முடியல தீனி தின்ன நேரம் போக திட்டு திட்டுன்னு திட்டுறா தாங்க முடியல'ன்னு சொல்லி உட்காந்து கேவி கேவி அழுகிறான்.

அதுக்கு மேல கேட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு நான் கேனையானா? அடுத்த பிளைட்ட புடிச்சு மறுபடியும் சவுதி வந்துட்டேன்.

'ஒரு தின்னிப்பண்டாரத்த என் தலயில கட்டப்பாத்தானே"ன்னு அந்த துபாயி மாப்பிள்ளைய நினச்சு என் மனசு வலிச்சாலும் உண்மைய சொன்ன அவன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னே.


14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:):):):)

SUBBU சொன்னது…

துபாய் அன்னே என்னால முடியலன்னே :)))))))))))))))))))))))))))))))

துபாய் ராஜா சொன்னது…

//'ஒரு தின்னிப்பண்டாரத்த என் தலயில கட்டப்பாத்தானே"ன்னு அந்த துபாயி மாப்பிள்ளைய நினச்சு என் மனசு வலிச்சாலும் உண்மைய சொன்ன அவன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னே.//

கிரேட் எஸ்கேப் தல....... :))

//அதுக்கு மேல கேட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு நான் கேனையானா? அடுத்த பிளைட்ட புடிச்சு மறுபடியும் சவுதி வந்துட்டேன்.//

நம்மாட்கள் நிறைய பேரு வெளிநாட்டுல இருக்கத்துக்கு இதும் ஒரு காரணமாண்ணே... :))

அ. நம்பி சொன்னது…

//'ஒரு தின்னிப்பண்டாரத்த என் தலயில கட்டப்பாத்தானே"ன்னு அந்த துபாயி மாப்பிள்ளைய நினச்சு என் மனசு வலிச்சாலும் உண்மைய சொன்ன அவன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னே.//

பாவம்... செந்தட்டிக் காளை!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க Sachanaa
உங்க முதல் வருகைக்கு நன்றி

//SUBBU சொன்னது…
துபாய் அன்னே என்னால முடியலன்னே :)))))))))))))))))))))))))))))))

வாங்க சுப்பு
என்னாலயும் தான் முடியல
அதான் சவுதி வந்துட்டேன்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ராஜா அய்யா வாங்க வாங்க
//நம்மாட்கள் நிறைய பேரு வெளிநாட்டுல இருக்கத்துக்கு இதும் ஒரு காரணமாண்ணே... :))

ஆமாங்க இங்கே நிறையப் பேரு ஊருக்குப் போறதுன்னாலே ஏதோ பேயப் பாக்கப் போற மாதிரி பதறுவாய்ங்க.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க அ.நம்பி
உங்க தொடர் வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

Unknown சொன்னது…

:)

Unknown சொன்னது…

கல்யாணத்துக்கு முன்னால அந்த பொண்ணுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து வீணாய் போன பணத்தை வேற எப்படித்தான் வசூல் பண்றது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இந்தக் கதையில் உண்மையச் சொல்லியிருக்கீங்க.
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

சென்ஷி சொன்னது…

:)

நல்லா எழுதியிருக்கீங்கண்ணே

பெயரில்லா சொன்னது…

Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr oooooooooooooooooooooooooooo Super

govindasamy சொன்னது…

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !
UNMAIVRUMBI,
MUMBAI.

ஆதி சொன்னது…

Verry happy about this.... Nantry

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க