சவுதில தார்சாலையைத் தோண்டுறதா இருந்தா முறைப்படி பலுதியா அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கிட்டுத்தான் தோண்டனும். அதே மாதிரி தோண்டுன பகுதியை மூடுறதா இருந்தாலும் அவங்ககிட்ட காட்டிட்டுதான் மூடனும்.
பலுதியா அதிகாரிங்க எல்லாம் அரபிங்கதான். நம்ம பேசுற இங்கிலிசு அவங்களுக்கு புரியாது. அவங்க பேசுற இங்கிலிசு நமக்குப் புரியாது. அதுனால குழப்பம் வராம இருக்கிறதுக்காக பெரும்பாலும் இந்த மாதிரி ஆய்வுக்கு போகும்போது கூடவே கம்பெனில வேலைப்பார்க்குற சவுதி PROவை கையோடு கூட்டிட்டுப் போறது.
நான் எங்க கம்பெனி சவுதி PRO அபு பாகத் அல் கால்தின்னு பேரு. அவரைக் கூட்டிக்கிட்டு வேலை நடக்கிற இடத்துக்குப் போனேன்.
வேலை நடக்கிற இடம் சின்ன சந்துக்குள்ள இருந்ததாலே மெயின் ரோட்டுலேயே வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு கதவெல்லாம் அடைச்சிட்டு கிளம்பும்போது PRO சொன்னார். “சாதிக் உன் லேப்டாப்ப கையில் எடுத்துக்க, இது ஒன் டென் (110) ஏரியா கார் கண்ணாடியை உடைச்சு லேப்டாப்ப எடுத்துட்டு போயிடுவானுக”ன்னு.
வோல்டேஜ் கணக்குல நம்பர் சொல்றாரேன்னு எனக்கு குழப்பம் வந்தாலும் உள்ளூர்காரரு விசயமில்லாம சொல்ல மாட்டாருன்னு நான் லேப்டாப்ப கையில் எடுத்துக்கிட்டேன்.
“என்னய்யா சவுதில்ல திருட்டுப் பயம் கிடையாதுன்றானுக, நான் முத்தரபி, முனிசில்லா ஏரியாவெல்லாம் பலதடவை இந்தமாதிரி காருலயே லேப்டாப்ப வச்சிட்டு போயிட்டு வந்திருக்கேன், பத்திரமா இருக்குமே, யாரும் கண்ணாடியை உடைச்சதா இதுவரைக்கும் கேள்விப்படலியே”ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னாரு “சாதிக் அதெல்லாம் 220 ஏரியா, அங்கே தப்புத்தண்டாவெல்லாம் நடக்காது”ன்னு.
“என்னது 220யா? 110க்கும் 220க்கும் அப்படி என்ன வித்தியாசம்”ன்னு கேட்டேன்.
“ஏமன், சிரியா, சூடானிலிருந்து பஞ்சம் பொளைக்க சவுதிக்கு வந்து செட்டிலாயிட்டவனுக 110, சவுதியையே பூர்வீகமாக கொண்ட குடிமக்கள் 220”ன்னு PRO விளக்கம் கொடுத்தார்.
“சரி சாதிக் நீங்க இதுல என்ன ஆளு 110ஆ 220யா’ன்னு அவரைக் கேட்டேன்.
“நான் 380 இவங்களக் காட்டிலும் கொஞ்சம் மேல் ஜாதி, எங்க 380 ஆளுங்கதான் சவுதியிலே பெரிய ஜாதி சவுதில மன்னரா இருக்கிறவுங்களாம் 380தான், அந்த வகையில நான் மன்னருக்கு தூரத்துச் சொந்தமுன்னு எனக்கு ஒரு பீதியைக் கிளப்பினாரு மனுசன்.
வேலை முடிச்சு திரும்பி வரும்போது PRO கேட்டாரு “ஏன்பா உங்க ஊருல நிறைய ஜாதி இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன் இதுல எந்த ஜாதி உங்கள ஆளுறவுங்க’ன்னு கேட்டாரு
நான் சொன்னேன் எங்கள ஆளுறவுங்க எல்லாம் உங்க மன்னர் ஜாதி 380ஐக் காட்டிலும் பெரிய ஜாதி”ன்னு
“அப்படியா என்ன அவுங்க நம்பரு” PRO கேட்டாரு.
9 கருத்துகள்:
முத்தாய் பாய் இதை எதிபார்க்க வில்ல. நல்ல கூத்து இது.உண்மைதான். நம்ம ஊர் சட்ட படி இவர்கள் 420 தானே !
அங்கேயுமா திருட்டு பயம்.. ம்ம்ம் பகிர்வுக்கு நன்றி.
enaa oru presence of mind........mudiyalaa
இந்த மாதிரி அனுபவப் பகிர்வுகள் சுவாரஸ்யமாக இருக்கு. பஞ்சம் பொழப்புக்கு ஊர் விட்டு ஊர் வரவங்களை எந்த அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை போல.
கிளாச்சிக் டச் ..சரியாய் சொன்னீர் “இவுவுங்கள்ளாம் 420 ஜாதியை சேர்ந்தவுங்க”
வடநாட்டு பக்கம் போனா 480 கூட கிடைக்கும் ஹா..ஹா.. சரியான நெம்பர்தான் குடுத்து இருக்கீங்க :-)
பகிர்வு சுவாரசியமாக இருக்கு.
“அவுங்கள்ளாம் 420 ஜாதியை சேர்ந்தவுங்க”ன்னு சொல்லி முடிச்சேன்
.....ஹா,ஹா,ஹா,ஹா.... பதிவு நல்லா இருக்குது.
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க