வியாழன், 27 ஜனவரி, 2011

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டி
ஆச்சர்யமா இருக்கா? வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தனித்தே போட்டியிடுகிறதுஇது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையின் சில முக்கியமான அம்சங்கள் பின் வருமாறு.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உடன்பிறப்புக்களைக் காவு கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் இனி உறவு இல்லை. இதற்கு அடையாளமாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா. ஆதரவும் உடன் வாபஸ்.

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் செய்த ராசா டி ஆர் பாலு போன்றவர்கள் கட்சியிலிருந்து உடனடி நீக்கம். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இனி எதிர்காலத்தில் யாரும் ஊழல் செய்யா வண்ணம் உடனடிச் சட்டம் இயற்றப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அள்ளி வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.பணிக்கு வராமல் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

காலம் மாறி வருவதற்கேற்ப காவிரிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண பிரதமருக்கு மின் அஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். கடிதம் எழுதுதல் தந்தி அடித்தல் போன்ற பழஞ்சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவசம் அனைத்தும் நிறுத்தம். மாறாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். இனி மக்கள் இலவசங்களுக்கு வரிசையில் நிற்காமல் அவரவர் குடும்பத்தை அவரவரே கவணித்துக் கொள்ள அரசு அறிவுரை.

கட்சியில் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அனைவரும் களையெடுப்பு. முரட்டுப் பக்தர்கள் முதுகெலும்பு உடையும் வண்ணம் சட்டங்கள் கடுமையாக்கப்படும்.

வாழ்ந்து மறைந்த வள்ளுவரின் குறள்களை பின்னுக்குத் தள்ளி விட்டு பேருந்துகளில் எழுதப் பட்ட வாழும் வள்ளுவரின் அச்சு பிச்சு வாசகங்களான “நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும் போன்ற தத்துவங்கள் தார் கொண்டு அழிக்கப்படும்.

இனி இப்தார் நோண்புகளில் மட்டும் கஞ்சி குடிக்காமல் கொப்புடையம்மன் கோவிலில் ஆடிக்கூழும், குலசாமிக்கு படையல் வைத்து யார் கூப்பிட்டாலும் அங்கு வந்து பொங்கலும் தேங்காய் சில்லும் திங்க கருணாநிதி தயார்.

கட்சியின் சினிமாத் தொடர்பு முற்றிலும் அறுத்தெறியப் படும். உளியின் ஓசை, கண்ணம்மா, இளைஞன் போன்ற காப்பியங்களை இனி கலைஞர் எழுத மாட்டார்.உப்புமா படங்களுக்கு மக்கள் பணத்தில் வரி விலக்கு செய்யும் கூத்துகள் இனி நிறுத்தப்படும்.

கடலில் தூக்கிப் போட்டால் கட்டுமரமாய் வருவேன் செருப்பாய் தேய்வேன், பொறுப்பாய் இருப்பேன் என செண்டிமெண்ட் வசனங்களை இனி கலைஞர் பேசமாட்டார். மேலும் அய்யோ கொல்லுறாங்களே என நடுநிசியில் அழவும் மாட்டார்.

மொத்தத்தில் மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்கும் வண்ணம் இனி வரும் ஆட்சி அமையும் என கருணாநிதி தமிழக மக்களுக்கு உத்தரவாதம் வழங்குவதோடு இந்த அறிக்கையில் சொல்லாத பல நல்ல விசயங்களையும் செய்வதற்கு தமிழக மக்களிடமிருந்து கைமாறாக ஒரே ஒரு ஒற்றை வாக்குறுதி மட்டும் கேட்கிறார்.

அது என்னவென்றால்

தமிழகத்தின் 21ம் 22ம் 23ம் 24ம்25ம் முதலமைச்சராக

.

இவரையும்

26ம், 27ம்,28ம், 29ம் 30ம் முதலமைச்சராக இவரையும்

இவர் காலத்துக்குப் பின் முதலமைச்சராக மேல் உள்ள படத்தில் உள்ளவரின் மகனையோ மகளையோ மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது.


13 கருத்துகள்:

ramalingam சொன்னது…

அழகிரி, கனிமொழி வகையறாக்கள்?

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ராமலிங்கம் எனக்குத் தெரிஞ்சு கருணாநிதிக்கு ஸ்டாலின் மேலத்தான் பாசம் அதிகம் ராமர் மேல தசரதன் வச்ச பாசம் மாதிரி. மகனுக்கு மகுடம் சூட்டத்தான் கருணாநிதி யார் திட்டினாலும் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

ஏங்க தூக்கத்தில கனவு கினவு கண்டீங்களா? தமிழன் எல்லோரும் மண்டைய போட்டாலும் மேல சொன்னது ஒண்ணு கூட நடக்காது !!! ஸ்டாலின் வகையாரா தவிர !!!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…
ஏங்க தூக்கத்தில கனவு கினவு கண்டீங்களா? தமிழன் எல்லோரும் மண்டைய போட்டாலும் மேல சொன்னது ஒண்ணு கூட நடக்காது !!! ஸ்டாலின் வகையாரா தவிர !!! அய்யா நான் கனவு ஒன்னும் காணல கருணாநிதி பிள்ளைப் பாசத்தில் எவ்வளவு தவறு செய்கிறார் என்பதையே சுட்டிக்காட்டினேன். பிள்ளைகள் பேரன் பேத்திகளும் நாடாள வேண்டும் என்ற நப்பாசையே கருணாநிதியை எந்த கருமத்திற்கும் துணை போக செய்கிறது என்பதே இந்த பதிவின் கருத்து

bandhu சொன்னது…

பகல் கனவு, பகல் கனவுன்னு கேள்விபட்டிருக்கேன். இப்பதான் அத ஒருத்தர் பார்த்து எழுதியத படிக்கறேன்!

Anbudasan சொன்னது…

Nice

கனாக்கண்டேன் சொன்னது…

மேலே சொன்னது நடந்தால், கடைசி வாக்குறுதி தர தயார். என்ன சொல்றீங்க?

கனாக்கண்டேன் சொன்னது…

யார் ஆண்டால் என்ன? நமக்கு தேவை நல்ல ஆட்சி.

vasan சொன்னது…

வாங்கி போட்டிருக்கும் காடு, க‌ழ‌னி, வீடு, ம‌னை, வ‌ணிக‌, அலுவ‌ல‌க வ‌ளாக‌ங்க‌ள், திரைய‌ருங்குக‌ள், ம‌ற்றும் ஐந்தாண்டுகளில் சேர்த்த‌ கோவை,திருச்சி, ம‌துரை, சென்னை ம‌ற்றும் சுற்றுப்புற‌ங்க‌ளில் வாங்கிய‌ நில புல‌ன்க‌ள், க‌ல‌ஞர் டிவி இதையெல்லாம் பற்றி ஒரு முடிவு செய்தா, ம‌க்க‌ளும் ஒரு முடிவுக்கு வ‌ருவோம்ல‌.

Gopi சொன்னது…

nalla sonning

Jayadev Das சொன்னது…

நீங்க சொன்னதுல கடைசி இரண்டு மட்டும் தான் அவர் கேட்பார், மற்றதெல்லாம் கனவிலும் நடக்காது!

kumar சொன்னது…

நண்பரே உமக்கு ஏன் இந்த வேலை
இந்த உலகமே அழிந்தல்கூட இந்த மாதிரி எண்ணம் அவர்
மனதில் தோன்றது. ஆமா .......... உம்மோட மனதில் மட்டும்
எப்படி தோனுச்சு.............. பேசாம நீங்களும் அரசியல் ஆரம்பிக்கலாமே
மக்களுக்கு நல்லது செயிர எண்ணம் உம்மோட மனசுல
இருக்கு. நீங்க ரொம்ப நல்லவருங்கோ ....................

தங்கம்பழனி சொன்னது…

எப்பூடி இப்படியெல்லாம்.. சும்மா பூந்து வெள்ளாடுங்க தலீவா..

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க