“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்”
என நற்றமிழ் காப்பியம் சொன்னவழி
ஆறு கோடி தமிழ் மக்கள் ஆதவனுக்கு
நன்றி கூறும் ஆனந்தத் திருநாளாம் தை
ஊருக்கு உணவூட்டும் உன்னத
உழவர் கூட்டம்
உழைத்துக் களைத்தபின் இளைப்பாறி
பின் களிப்பாடும் நாளாம் தை
கன்னல் சுவையோடு கற்கண்டு பொங்கலிட்டு
கண்மணியாம் எம் பெண்கள்
களிப்புடனே குழவையிட்டு
‘பொங்கலோ பொங்கல்’ என
போற்றுகின்ற நாளாம் தை
உன்னதத்தை, மகத்துவத்தை,
உழவுக்கும் தொழிலுக்கும் செய்யும்
வந்தனத்தை
உலகெமெல்லாம் போற்றுகின்ற
உழவர் மக்கள் பாரம்பரியத்தை
உவப்புடனே தமிழ் மக்கள் தம்
புத்தாண்டாய் கொண்டாடட்டும் என
நயப்புடனே அரசு ஆணை
நணிவுடனே அறிவித்ததை
வியப்புடனே பார்க்குதிங்கு விந்தை
வேடிக்கை கூட்டமொன்னு
சித்திரையே புத்தாண்டென பகல்
நித்திரையில் இருக்கும் அந்த
பேதை கூட்டமதை பேசியதையே பேசுமதை
பாழும் மடமைகளில் தினம்
வாழும் கூட்டமதை
போகட்டும் விடுங்கள்....
சித்திரத்தை கையில் கொடுத்தால்
குருடன் சீந்திப் பார்ப்பானா?
சந்தணத்தை பூசக் கொடுத்தால்
சகதியிலே சுகம் காண்பவன் வருவானா?
பஞ்சாங்கத்தை பார்க்காவிட்டால்
தமிழன் பலன் பெற மாட்டானா?
உலகத்தை உருண்டையென சொன்னபோது
ஒரு பயலும் நம்பியிருக்க மாட்டான் தான்.
கலகத்தை செய்தால் ஒழிய இந்த
கணபாடிகள் திருந்தமாட்டான் தான்
உலகத் தமிழர் அனைவருக்கும்
இனிய தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள்
4 கருத்துகள்:
பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் கரும்பைப்போல இனிக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...
"அடப போங்கய்யா நீங்களும் உங்க புத்தாண்டுக்கு குழப்பங்களும். தையும் வேண்டாம்.. சித்திரையும் வேண்டாம். ஜனவரி ஒன்று அன்று புத்தாண்டு போதும்" என்று எல்லோரும் முடிவு செய்யும் ஆபத்து அதிகம் நண்பரே..
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க