சனி, 22 ஜனவரி, 2011

ஆண்களிடம் இல்லாத நல்ல குணங்கள்


1. 1. ஆண்களுக்கு நன்றி விசுவாசம் கிடையாது. மார்கெட்டு உள்ளபோது நடிகைகளுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிக்கும் ஆண்கள் அதே நடிகைகள் மார்கட்டு இழந்து சின்னத்திரையில் நடிக்கும்போது கண்டு கொள்வதில்லை.

2. ஆண்களுக்கு பெருந்தன்மை என்பது அறவே கிடையாது. ஆண்கள் கதாநாயகராய் நடிக்கும் புறா, நில்லு, பேட்டைக்காரன்,கோவலன் போன்ற மொக்கைப் படங்களை சகிப்புத்தன்மையுடன் பெண்கள் பார்க்கும் போது பெண்கள் கதைநாயகியாய் நடிக்கும் நல்ல தொலைக்காட்சித் தொடர்களை ஆண்கள் கண்டுகொள்வதே இல்லை.

3. ஆண்களுக்கு மனதைரியம் மருந்துக்கு கூட கிடையாது. 3 மணி நேர திரைப்படத்தினையே தொடர்ந்து பார்க்க முடியாமல் 5 தடவை சிகரட் அடிக்கப் போகும் பயந்தாங்கொள்ளிகள். பெண்களைப் போல் மூன்று வருடம் ஒரே சீரியலை தொடர்ந்து பார்க்க இவர்களுக்கு தைரியம் குறைவுதான்.

4. ஆண்களுக்கு கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் துளிக்கூட கிடையாது. தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் கதாநாயகியாயினும் சரி, வில்லியாயினும் சரி, கதாநாயகியின் பாட்டியாயினும் சரி அவர்கள் போட்டிருக்கும் சேலை டிசைனிலிருந்து ஸ்டிக்கர் பொட்டு டிசைன் வரை நுணுக்கமாக பெண்கள் கவனிப்பதைப் போல் ஆண்களால் கவனிக்க முடியாது.

5. ஆண்களுக்கு காலம் தவறாமை சுத்தமாக கிடையாது. 71/2க்கு ஜாலங்கள், 81/2க்கு ரொட்டி ஒலி, 9மணிக்கு சித்தப்பா, 91/2க்கு வடக்கத்தி சின்னு, 10மணிக்கு பித்தளையான புருசன் என பெண்கள் காலம் தவறாமையை கடைப்பிடிப்பது போல ஆண்கள் கடைப்பிடிப்பது இல்லை.

6. ஆண்களுக்கு விடாமுயற்சி என்பதே கிடையாது. தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் போது விளம்பரத் தடை வந்தால் என்ன, வீட்டுக்காரர் கத்தினால் என்ன, பிள்ளைகள் கதறினால் என்ன, பெண்கள் எடுத்த காரியத்தினை முடிப்பது போல் ஆண்களால் எந்தக் காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்ய முடியாது.

7. ஆண்களுக்கு சமநோக்கு கொஞ்சம் கூடக் கிடையாது. மூன்று நாட்கள் கூட ஓடாத மொக்கை படங்களுக்கு விமர்சனம் எழுதும் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்ற ஆண்கள் வர்க்கம் மூன்று வருடம் தொடர்ந்து பெண்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களை நடுநிலை மனதுடன் விமர்சனம் எழுதுவதில்லை.

8. ஆண்களுக்கு சமூக அக்கறை துளிக்கூட கிடையாது. திங்கள் கிழமை தீபா கல்லூரி சென்றபோது தீடிரென நான்குபேர் வந்து காரில் கடத்திச் சென்றார்களே அவள் என்ன ஆனாள்?. புதன் கிழமை புவனாவின் நாத்தனாருக்கு நிச்சயதார்த்தம் நின்று போனதே அது நடந்ததா?. வெள்ளிக்கிழமை விமலாவுக்கு அவள் மாமியார் விஷம் கலந்த காப்பியைக் கொடுத்தாளே அவள் குடித்தாளா? செத்தாளா? என்பது போன்ற சமூக நிகழ்வுகளை பெண்கள் அறிந்து கொள்ளும் அளவுக்கு ஆண்களுக்கு சமூக அக்கறை அறவே கிடையாது.

9. ஆண்களுக்கு இரக்கம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒருவள் ஒருவாரமென்ன தொடர்ந்து ஒரு வருடம் அழுது கொண்டிருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் குண்டு வெடித்து 100 பேர் பலி, பங்குச் சந்தை கவிழ்ந்தது, பாராளுமன்றத்தில் அமளி என்பது போன்ற குலை நடுங்கும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமா, ஒரு சின்னஞ்சிறிய பந்தை பெரிய மட்டையால பத்து பதினோரு பேர் நையப்புடைத்து அடித்து துவம்சம் செய்வதை இரக்கமில்லா அரக்கர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

10. ஆண்களுக்கு புரிந்து கொள்ளும் தண்மை அறவே கிடையாது. ஆண்கள் மொக்கைப் பதிவுகளை எழுதிக்கொண்டோ அல்லது படித்துக் கொண்டோ இருக்கும்போது ‘சரி பகலெல்லாம் ஆணி புடுங்கிய களைப்புத் தீர இப்படி செய்கிறார்கள் என பெண்கள் புரிந்துகொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதுபோல பகலெல்லாம் வீட்டு வேலைகள் செய்து பெண்கள் இரவு வேளைகளில் தொலைக்காட்சி தொடர் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும்போது அதைப் புரிந்து கொள்ளாமல் “சாப்பாடு ரெடியா பையனுக்கு சாப்பாடு போட்டியா என்று தொந்தரவு செய்யும் மங்குனிகள்.


16 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sema

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

மதுரை சரவணன் சொன்னது…

நல்லா தான் இருக்கு...வாழ்த்துக்கள்

சமுத்ரா சொன்னது…

ha ha ha....good one...

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ரமேஷ் இதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிற விசயமா எல்லாம் ஒரு அனுபவம்தான்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க மதுரை சரவணன் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாங்க சமுத்ரா உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா சொன்னது…

சரியான உள்குத்தலா இருக்கே??

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்க நெலமைய நெனச்சாத்தான் கொஞ்சம் கவலையா இருக்கு!

பொன் மாலை பொழுது சொன்னது…

உண்மைதான் :))))))))))))

பெயரில்லா சொன்னது…

kalakkitinga....

ABISHEK.AKILAN...

Jayadev Das சொன்னது…

சூப்பர், பெண்கள் சீரியல்களில் வருபவர்கள் அணிந்திருக்கும் நகைகள், புடைவைகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெண்களை வில்லிகள் கொடுமைப் படுத்துவதை மனம் விரும்பி பார்ப்பது கவலைக் குரிய விடயம். குரூரமான புத்தி இருந்தால் மட்டுமே அந்த மாதிரி கொடுமைகளை சகித்துக் கொண்டு பார்க்க முடியும். இழவு வீட்டிற்குப் போனாலும் சீரியல் சமயத்தில் எல்லாத்தையும் போட்டுவிட்டு கரெக்டாக "தொல்லைக்" காட்சி முன் ஆஜராகி விடுகிறார்கள். சொந்த பந்தங்கள் விபத்தில் சிக்கியிருந்தாலோ, விஷம் குடித்திருந்தாலோ கூட இவ்வளவு கரிசனத்தோடு இருப்பார்களா என்று நினைக்குமளவுக்கு சீரியல்களில் வரும் கதா பாத்திரங்களைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஆண்கள் இந்த விஷயத்தில் இவர்களை அடித்துக் கொள்ளவே முடியாதுதான்.

Jayadev Das சொன்னது…

சீரியல்கள் அத்தனைக்கும் அருமையான மாற்றுப் பெயர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள்.

sasd சொன்னது…

yathai thakaringa

sadic

டக்கால்டி சொன்னது…

அனுபவம் புலம்புகிறது... :-)

Unknown சொன்னது…

நல்லா இருக்கு..

குறையொன்றுமில்லை. சொன்னது…

இதுக்குப்பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியோ?:))))))

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க