ஞாயிறு, 15 நவம்பர், 2009

மொழி வெறியன் அபு ஆஸ்மியா ராஜ் தாக்கரேவா?கடந்த சில தினங்களாக நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் முதலிடம் பிடித்திருப்பவர்கள் ராஜ் தாக்கரேவின் MNS கட்சியும் சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர் அபு ஆஸ்மியும்.
மராத்திய சட்டமன்றத்தில் தனது தாய்மொழியான ஹிந்தியில் பதவிப் பிரமாணம் ஏற்றதற்காக MNS உறுப்பினர்களால் தாக்கப் பட்டிருக்கிறார் அபு ஆஸ்மி.

இது தொடர்பாக ராஜ் தாக்கரே அபு ஆஸ்மி இருவரும் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

சொல்லிவைத்தாற் போல் அனைத்து மீடியாக்களும் ராஜ் தாக்கரேவின் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளை விட MNS கட்சி தீவிரவாத கட்சி எனவும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரேவை மொழி வெறியர்கள் எனவும் சித்தரிக்கின்றன.


அபு ஆஸ்மியின் இந்த செயலுக்கு மிகவும் பாராட்டு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அபு ஆஸ்மியின் தாய் மொழிப் பற்றைப் பாராட்டி அவருக்கு பாராட்டு விழா எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


MNS கட்சியினரின் செயல் கண்டிக்கப் பட வேண்டியதுதான் என்றாலும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரே இவர்களை விட இரு மடங்கு மொழி வெறியர்கள் இந்த முலாயமும் அபு ஆஸ்மியும்.


தாய் மொழி என்பது தாயைப் போன்றது ஒவ்வொருவருக்கும் அவரது அம்மா மிக சிறந்தவர்தான்.எனது அம்மா எனக்கு சிறந்தவர் என்பதற்காக உலகில் உள்ள அனைவரையும் என் அம்மாவை அவர்களது அம்மாவாக கருத வேண்டும் என நான் கூறினால் அது எவ்வளவு அபத்தமோ அது போன்ற அபத்தமான செயல்தான் அபு ஆஸ்மியின் செயல்.


ரோமுக்கு சென்றால் ரோமனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் இந்த ஹிந்தி மொழி வெறியர்கள்.இவர்களது மொழியை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இவர்கள் அடுத்த மொழியினை படிப்பதில் குறைந்த பட்சம் ஆர்வம் கூட இல்லாதவர்கள் என்பது வளைகுடா நாட்டில் பணி புரிந்து வரும் அனைவருக்கும் தெரியும்.


இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

இந்தியாவின் மிக சிறந்த தொழிலதிபரான JRD டாடா ஜெயின் குடும்பத்தினைச் சார்ந்தவர் என்பது தெரியும் இந்த சமூகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈரானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருகை தந்து குஜராத் கடற்கரையில் குஜராத் மன்னரது அனுமதி வேண்டி காத்திருந்தனர்.

இவர்களது வருகையை விரும்பாத குஜராத் மன்னர் நேரில் மறுப்பை சொல்ல சங்கடப்பட்டு ஒரு பாத்திரத்தில் தளும்ப தளும்ப பாலை ஊற்றி தனது மந்திரிகளில் ஒருவரிடம் கடற்கரையில் காத்திருக்கும் ஜெயின் சமூகத்திற்கு காட்டச் சொன்னார்.இதன் அர்த்தம் என்னவெனில் ஏற்கனவே குஜராத் நிரம்பி வழிகிறது எனவே யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதே அது.

பாத்திரத்தினைப் பார்த்த புத்திசாலி ஜெயின் சமூகத்தினர் அந்த பாலில் சர்க்கரையினை சேர்த்து மன்னருக்கு திருப்பி அனுப்பினர்.இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால் நாங்கள் அதிக இடத்தினை ஆக்ரமித்து பாலினை தளும்ப விட மாட்டோம். சர்க்கரையைப்போல் குஜராத் கலாச்சாரத்தோடும் மக்களோடும் கலந்து விடுவோம். மேலும் பாலுக்கு சர்க்கரை சுவை சேர்ப்பது போல நாட்டிற்கு சிறப்பு சேர்ப்போம் என்பதே அது.

இந்த புத்திசாலித்தனமான பதிலால் மகிழ்ந்த மன்னர் ஜெயின் சமூகத்தினரை இந்தியாவில் அனுமதித்தார் என்பது வரலாறு.

அபு ஆஸ்மியின் செயல் பாலில் சர்க்கரை கலப்பது போன்றது அல்ல.உப்பைக் கலந்து பாலினைத் திரிப்பதற்கு ஒப்பாகும்.

வீட்டில் நச்சுப் பாம்பு வந்து படம் எடுத்து அதை விரட்டி அடிப்பவர்களை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தால் அது எப்படி முட்டாள்தனமோ அது போன்றதுதான் ராஜ்தாக்கரேவின் கைதும்.

ஒரு மாநில அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் நாண்காண்டுகளுக்குள் பரிச்சியம் பெற வேண்டும் என அரசு விதிகள் சொல்வது இந்த ஹிந்தி மொழி வெறியர்களின் காதில் விழுந்திருக்காதா என்ன?


5 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//அபு ஆஸ்மியின் செயல் பாலில் சர்க்கரை கலப்பது போன்றது அல்ல.உப்பைக் கலந்து பாலினைத் திரிப்பதற்கு ஒப்பாகும்.//

சிறப்பான கட்டுரை

அருண் சொன்னது…

டாடா ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல, அவர் பார்சி இனத்தை சேர்ந்தவர்,

பெயரில்லா சொன்னது…

அருண் சொல்வதுபோல இரானிலிருந்து வந்தவர்கள் பார்சிகள். ஜைனர்கள் அல்லர். பால் சர்க்கரை விடயம் கதையாகத்தான் இருக்க முடியும். மற்றப்படி உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன்.

புருனோ Bruno சொன்னது…

டாடா பார்சி சமுகம் அல்லவா

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி திரு கோவி கண்ணன்

நன்றி திரு அருண்
நீங்கள் சொன்னது போல் டாடா பார்சி சமூகத்தை சேர்ந்தவர்தான் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

நன்றி திரு அனானி
இந்த கதை உண்மையிலேயே நடந்ததுதான்
ஜே ஆர் டி டாடாவைப் பற்றி ஒரு கட்டுரையில் படித்தது.

நன்றி டாக்டர் புருனோ

நீங்கள் சொன்னது போல் டாடா பார்சி சமூகத்தை சேர்ந்தவர்தான் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க