வெள்ளி, 16 அக்டோபர், 2009

தீபாவளி தமிழர் பண்டிகைதானா?

நாளை தீபாவளி
எப்போதும் ஐப்பசியில் வரும் தீபாவளி இந்த வருடம் மட்டும் அதிசயமாய் புரட்டாசியிலேயே வருகிறது.

நீண்ட நாட்களாகவே எனக்கு தீபாவளி தமிழர் பண்டிகைதானா என ஐயம் ஒன்று உண்டு. மற்ற எந்த பண்டிகையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தீபாவளிக்கு இருக்கும் சிறப்பு,முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காலம் காலமாக நமக்கு சொல்லப் பட்ட கதையின் படி கிருஷ்ன பகவான் நரகாசுரனை கொண்று மக்களுக்கு சுபிட்சம் கொடுத்ததாகவும் அதனை கொண்டாடவே மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி புத்தாடை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்கிறார்கள் என நம்புகிறோம்.

கிருஷ்னர் தமிழர்களின் கடவுள் கிடையாது. கொல்லப்பட்ட நரகாசுரன் தமிழ்நாட்டிலும் வசிக்கவில்லை. அதனால் தமிழர்களுக்கு அவன் தொல்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை.பின் எப்படி தமிழ்நாட்டில் தீபாவளி பிரதான பண்டிகையாயிற்று.

தீபாவளி மதத்தின் பேரால் வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பண்டிகை என்பதே சரி.

தீபாவளி மட்டுமல்ல தமிழர்களுக்கு அந்நியமான விநாயகர் விஜர்சன் ஊர்வலம், சரஸ்வதி பூஜா, மாகாவீரர் ஜெயந்தி இப்படி பல இறக்குமதி செய்யப்பட்ட திருநாள்கள் தமிழ்நாட்டில் கலந்துள்ளன.

இவற்றுக்கான மூல காரணம் யார் எனப் பார்த்தால் அவர் அண்டைமாநிலமான கேரளாவின் காலாடியில் பிறந்த ஆதிசங்கரர் என்னும் முதல் சங்கராச்சாரியே ஆவார். அவரே தமிழகத்தில் கௌமாரம் என்றும் (முருக கடவுள் வழிபாடு) இந்தியாவின் வடபகுதிகளில் சைவம் (சிவ வழிபாடு) வைணவம் (விஷ்னு வழிபாடு) எனவும் மகாராட்டிரத்தில் கானபத்தியம் (கணபதி வழிபாடு) எனவும் மேற்கு வங்காளத்தில் சாக்தம் (சக்தி வழிபாடு) எனவும் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு(அக்னி வருணன் சூரியன் பாம்பு போன்றவை)எனவும் இருந்த பல்வேறு தெய்வ வழிபாடுகளை இந்துமதமாக கடவுள்களுக்குள் ஒரு உறவு முறையைக் கற்பித்து ஒன்று சேர்த்தார்.

தமிழர்களாகிய நாம் விஷ்னு சிவன் பார்வதி லெட்சுமி கணபதி துர்க்கை ராகு கேது என கணக்கில்லாத இந்து கடவுள்களை கும்பிட்டும் அவர்களது முக்கிய வழிபாட்டுத் தினங்களுக்கு அரசு விடுமுறை வழங்கியும் வருவது போல ஏதாவது வடமாநிலத்தில் தமிழ்கடவுள் முருகனுக்கு வழிபாடோ அல்லது வைகாசி விசாகத்துக்கோ பங்குனி உத்திரத்துக்கோ தைப்பூசத்துக்கோ விடுமுறை வழங்கியதாக கேள்விப்பட்டதுண்டா?

அண்டை மாநிலங்களை சொல்வானேன். நம் தமிழ்நாட்டிலேயே நம் தமிழ் கடவுள் முருகனின் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது என்பது இன்னும் வருந்ததக்க விடயம் தான்.
தமிழர்களுக்கு என பிரத்தியோகமான தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டு என அரசு அறிவித்த பின்னும் எத்தனை தமிழர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இப்படி பல்வேறு ஐயப்பாடுகள் எனக்கு தீபாவளிப் பண்டிகையைப் பற்றி இருந்தாலும் ஜவுளி பட்டாசு இனிப்பு வீட்டு உபயோகப் பொருட்கள் இப்படி பற்பல தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வியாபாரத்தினையும் ஓரளவு செல்வத்தினையும் மகிழ்சியையும் இப்பண்டிகை கொண்டு வருவதால் இந்த நன்மைகளை முன்னிட்டு வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களாகிய நாம் இப் பண்டிகையையும் வரவேற்போம்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கிரிஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் தமிழர் பண்டிகைகளா ? அதெல்லாம் என்ன மயித்துக்கு கொண்டாடுறீங்க ? இது வரை நீ அதெல்லாம் தமிழர் பண்டிகையா என்று கேட்டமாதிரித் தெரியல்லையே ?

பீ எல்லாம் தின்றால் இப்படித்தான் மூளை திருகாக வேலை செய்யும். ஒழுங்கா சோறு தின்னு.

நல்லதந்தி சொன்னது…

//கிரிஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் தமிழர் பண்டிகைகளா ? அதெல்லாம் என்ன மயித்துக்கு கொண்டாடுறீங்க ? இது வரை நீ அதெல்லாம் தமிழர் பண்டிகையா என்று கேட்டமாதிரித் தெரியல்லையே ? ///

:)

நாளும் நலமே விளையட்டும் சொன்னது…

கீழான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அந்த வார்த்தைகளை சொன்னவரின் மதிப்பு தான் கேள்விக்கு உள்ளாகுமே தவிர இந்த கட்டுரை எழுதியவரை பாதிக்காது.

அவர் எண்ணத்தை அவர் எவ்வளவு நாகரிகமாக வெளிப்படுத்தினாரோ அதேபோல் உங்கள் கருத்தை வெளி இட்டு இருக்கலாம்.

நாம் எப்போது மாறுவோம்?

துபாய் ராஜா சொன்னது…

நண்பர்கள்,,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க