செவ்வாய், 10 நவம்பர், 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை

மூன்று நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழான ஹிந்துவில் OPEN PAGE என்னும் தலைப்பில் இனுமெல்லா சசிகலா என்பவர் எழுதிய கட்டுரை இது. படித்ததும் எனக்கு மிகவும் மனது கணத்துப் போனது.இதோ அந்த கட்டுரையின் தமிழாக்கம்.

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் அம்மா பொறியில் அகப்பட்ட சிறைக்கைதியைப் போல் நான் வகுப்பறையில் உள்ளேன். எதையாவது கேட்டால் "இதற்கு நேரமில்லை குறிப்பிட்ட காலத்துக்குள் நாம் பாடத்திட்டத்தினை முடிக்க வேண்டும்." என ஆசிரியர்களிடம் ஒரே மாதிரியான பதிலே வருகிறது.
எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கும் இந்த படிப்பு மிகவும் அயர்ச்சியைத் தருகிறது.

அம்மா நான் உயிர் காட்சி சாலைகளுக்கு வகுப்புத் தோழர்களுடன் சென்று அங்குள்ளவற்றை ஆசிரியர் விளக்க தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இயற்கை சுற்றுலாக்கள் சென்று இயற்கையான உயிரியல் வகுப்பைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆழ்கடலில் வசிக்கும் விலங்குகள் பற்றியும் எரிமலைகள் பற்றியும் ஒளிக்காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
என் நகரத்தில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களும் சேர்ந்து என் நகரத்தில் உள்ள வரலாற்று சின்னங்களைப் பற்றி நேரில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
தொலை நோக்கி மூலம் வானவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பாடப் புத்தகங்களில் மட்டும் நான் இவற்றை தெரிந்து கொள்ள விரும்பவில்லை அம்மா. கண்டு கேட்டு தொட்டு முகர்ந்து சுவைத்து நான் அறிய ஆசைப்படுகிறேன் நான் விரும்புவது படிப்பு அல்ல அனுபவம்.

ஏன் இந்த பள்ளிகள் இது போன்ற அனுபவத்தை வருடம் ஒருமுறை ஏற்பாடு செய்யக்கூடாது.

மேலும் அம்மா இனிமேலும் என்னால் பள்ளிப்புத்தகப் பையினைத் தூக்கி வளைய முடியாது. ஏற்கனவே என் முதுகு வளையும் அபாயத்தில் உள்ளது. ஏன் எல்லாப் புத்தகங்களையும் எல்லா நாளிலும் நான் தூக்கிச் செல்ல வேண்டும். ஏன் ஒருநாளைக்கு இரண்டு பாடம் மட்டும் படிக்கக் கூடாது.ஏன் மேலை நாடுகளில் உள்ளது போல் வகுப்பறை மேஜைகளில் லாக்கர் வசதி செய்யக் கூடாது. ஏன் தினமும் ஆட்டோக்களில் நெரிசல்களில் பிதுங்கி சிரமப்பட வேண்டும்.


தினமும் வீட்டுப்பாடம் விண்டர் புராஜக்ட், சம்மர் கிளாஸ் வீக்லி டெஸ்ட். காலாண்டு பரிட்சை. அரையாண்டு பரிட்சை. மிட் டெர்ம் டெஸ்ட் முழு ஆண்டுப் பரிட்சை வீக்லி டெஸ்ட் கோச்சிங் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் என மேலும் மேலும் தேர்வுகள். அழுத்தம் அழுத்தம் பேரழுத்தம்.
எப்போது நான் சுதந்திரமாக பாட ஆட படம் வரைய நீந்த சைக்கிள் ஒட்ட விளையாட முடியும்.
எப்போது நான் கிரிக்கெட்டோ அல்லது கள்ளன் போலிசோ என எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாட முடியும்.
எப்போது நான் குழந்தைகளுக்கே தேவைப்படும் குறைந்தபட்ச தூக்கத்தினை தூங்க முடியும். ஏன் நான் தினம் தினம் படி படி என சொல்லப் பட வேண்டும்.
அம்மா நான் தற்போது டாக்டராகவோ இஞ்சினியராகவோ வேறு எதுவாகவும் ஆக விரும்பவில்லை. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். எனது அறிவினை பாதுகாப்பாக அழுத்தம் எதுவும் இன்றி தெளிவாக கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா நான் குழந்தைப் பருவத்தினை அனுபவிக்க ஆசைப்படுகிறேன்.
இப்படி அந்த கட்டுரை முடிகிறது.
மெக்காலேயின் வெறும் கிளர்க்குகளை உருவாக்கும் இந்த கல்வித்திட்டத்தினால் பிஞ்சுகள் எப்படிப் பாதிக்கப் படுகின்றன என நினைக்கும் போது கண்கள் பனிக்காமல் இல்லை.
பட்டம் விட்டு பம்பரம் குத்தி கிணற்றில் குதித்து நீந்தி கிட்டிப் புல் விளையாண்டு, கபடி விளையாண்டு தட்டான் பிடித்து பேய்கதைகள் கேட்டு இப்படி சென்ற தலைமுறையில் நாம் அனுபவித்த குழந்தைப் பருவம் இன்று கோச்சிங் கிளாஸ் கராத்தே கிளாஸ் டான்ஸ் கிளாஸ் என வகுப்புகளிலும் தேர்வுகளிலும் indoor games ஆக சுருங்கி விட்ட அவலத்தினை என்ன சொல்வது.

13 கருத்துகள்:

தோழி சொன்னது…

miga nalla katturai. unamiyum kooda

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

தோழி சொன்னது…
miga nalla katturai. unamiyum kooda//

நன்றி தோழி உங்களது விரைவான கருத்துக்கும் உங்களது முதல் வருகைக்கும்

தேவன் மாயம் சொன்னது…

பட்டம் விட்டு பம்பரம் குத்தி கிணற்றில் குதித்து நீந்தி கிட்டிப் புல் விளையாண்டு, கபடி விளையாண்டு தட்டான் பிடித்து பேய்கதைகள் கேட்டு இப்படி சென்ற தலைமுறையில் நாம் அனுபவித்த குழந்தைப் பருவம் இன்று கோச்சிங் கிளாஸ் கராத்தே கிளாஸ் டான்ஸ் கிளாஸ் என வகுப்புகளிலும் தேர்வுகளிலும் indoor games ஆக சுருங்கி விட்ட அவலத்தினை என்ன ///


உண்மைதான் நண்பரே!!

சந்தனமுல்லை சொன்னது…

மிக அருமையான கட்டுரை! ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை! வாழ்த்துகள்!

ரோஸ்விக் சொன்னது…

நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி டாக்டர் தேவன் மாயம் அவர்களே

நன்றி சந்தனமுல்லை அம்மா

நன்றி திரு ரோஸ்விக் அவர்களே

சந்தனமுல்லை சொன்னது…

தங்கள் இடுகையை இங்கே http://ammakalinpathivukal.blogspot.com/2009/11/blog-post.html பகிர்ந்துள்ளேன் - மேலும் பலரை சென்றடையும் பொருட்டு! ஆட்சேபனையிருந்தால் தெரிவிக்கவும்! நன்றிகள்! அப்புறம், நான் சந்தனமுல்லை மட்டுமே! :-))

அமுதா கிருஷ்ணா சொன்னது…

ஆனால் பெற்றோர் படி,படி என்று தானே அலைகிறார்கள்..எல்லோருக்கும் அதீத ஆசை..நிஜமா ஸ்கூலில் பசங்க கூட கொஞ்ச நேரம் பேசக்கூட டைம் இருக்காது..பசங்க ஒரு மெஷின் என்றால்,,டீச்சர்களும் இன்னொரு வகையான மெஷின்கள் தான் தனியார் பள்ளிகளில்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல கட்டுரை..

அமுதா சொன்னது…

மிக நல்ல பதிவு.

பதி சொன்னது…

நல்ல பகிர்வு....

பதி சொன்னது…

பெற்றோரின் மனநிலையில் மாற்றம் வராமலும் மதிப்பெண்களை அடிப்படியாக கொண்டு திறமையை தீர்மாணிக்கும் முறையை ஒழிக்காத வரையிலும் எதுவும் மாற்றம் வரும் எனத் தோன்றவில்லை.

இல்லையெனில், பள்ளி இறுதி வகுப்புகளில் (10, 12) அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தே தீரவேண்டும் என மாணவர்களுக்கு சில பெற்றோர் கொடுக்கும் மன அழுத்தத்தை தடுக்கவும் சட்டம் கொண்டு வர ஏற்படு செய்ய வேண்டும். !!!!!

5லிருந்து 10 மதிப்பெண்களை சேர்த்து எடுப்பதற்காக அவர்கள் அந்த அந்த வயதிற்கே உரிய அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்காமல், திருவிழா, குடும்ப விழாக்களிலும் பங்கேற்காமல் ஒரு தொழிற்சாலையைப் போல் இயங்குகின்றனர்... சில பள்ளிகள் concentration campsக்கு இணையானவை... அந்தியூரிலும் நாமக்கல் பகுதியிலிருந்தும் (பள்ளிகளின் பெயர் வேண்டாமே)படிப்பு முடித்து வரும் மாணவர்களிடம் (அனைவரும் அல்ல) கல்லூரியில் பழகுவது கூட சற்றே சிரமமானதே.. அதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன்..

ஆனால், இதனையே சம்பந்தப்பட்ட அந்த அப்பா/அம்மா விடம் விவாதிக்கும் பொழுது ஒரு கொலைவெறிப் பார்வை தான் பதிலாக வருகின்றது... அதே சமயம், இவனுங்க மட்டும் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டானுங்க, எங்க பசங்க வீணா போக யோசனை கொடுக்குறாங்கன்னு ஒரு நல்ல பேரையும் நமக்கு கொடுத்துட்டு போறாங்க... :(

துபாய் ராஜா சொன்னது…

நல்லதொரு பகிர்வு நண்பரே...

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க