ஒரு ஊரிலெ இல்ல இல்ல ஒரு காட்டில ஒரு திருடன்
இருந்தான் அவன் அந்த காட்டு வழியே போகிற வழிப்போக்கரைகளை தாக்கி கொள்ளையடித்து வாழ்ந்து
வந்தான். ஒரு நாள் அவன் சாகும் தருவாயில் அவன் மகனை அழைத்து
“மகனே நான் இறக்கப் போகிறேன் வாழும் காலம் வரை இந்த ஊர் மக்களின் யாயிலும்
பல்லிலும் இருந்து விட்டேன் நீ என்ன செய்வாயோ என எனக்கு தெரியாது ஆனால் நான் இறந்த
பிறகு இந்த ஊர் மக்க்|ள் என்னை நல்லவன் என்று சொல்ல வேண்டும்
என சத்தியம் வாங்கி கொண்டு அவன் இறந்து விட்டான்.
மகனுக்கு இப்ப என்ன செய்து தந்தைக்கு நல்ல
பெயர் வாங்கி கொடுப்பது என ஒரே குழப்பம். நெடு
நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் அவனும் அவன் தந்தை போலவே காட்டில் கொள்ளையடிக்க
ஆரம்பித்தான் ஒரே ஒரு மாற்றம் அவன் தந்தை கொள்ளை மட்டும் அடித்தான் இவன் கொள்ளை அடித்தத்தோடு
வழிப்போக்கரகளின் ஆடையினையும் கழட்டி எடுத்தான். மக்கள் இப்போது சொல்ல ஆரம்பித்தனர்.
“அடா அடா அப்பன் எவ்வளவு நல்லவன் கொள்ளை மட்டும் தான் அடித்தான் மகன் டவுசரையும்ல கழட்டி விடுறான்”
கதைப்படி அப்பன் கெட்டவனே ஆனாலும் மகனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நல்லவன். இதுதான் நம்ம தமிழ் நாடு அரசியல் வாதிகள் கதையும்.
கருனா நிதிக்கு ஜெயலலிதா நல்லவர் ஜெயலலிதாவுக்கு கருனா நிதி நல்லவர்
என மாறி மாறி நாமும் ஏமாந்து போய் வாக்கு அளிக்கிறோம்.
ஒரு லட்சம் கோடி 2ஜி ஊழலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஜெயாவின்
64 கோடி சாதாரனமாக போய் விட்டது. என்ன தவறு செய்து
விட்டார் கருனா நிதியை விடவா பெரிய தப்பு செய்து விட்டார் கருனா நிதி மட்டும் வெளியில்
இருக்கிறார் எங்கமாவை மட்டும் ஜெயிலில் போட்டது எந்த விதத்தில் நியாயம் என பலரும் வியாக்கையானம்
பேசி வருவதோடு மட்டுமல்லாமல் கோவில் கோவிலாக ஏறி இறங்கி விடுதலை பெற கடவுளிடம் மனு
வேறு கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
எவனுக்கும் மக்களின் வரிப்பணத்தினை சுரண்டுவது
திருடுவது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது அது சிறியதாக இருந்தாலும் தப்பு
தப்புதான் என நக்கீரர் போல் தட்டி கேட்கும் எண்னம் வரவில்லை. மாறாக அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சாதரனமப்பா என்ற
அசட்டையான போக்கே நிலவுகிறது. அந்த அளவுக்கு நம் மனதில் ஊழல்
ஒரு தவறில்லை என்ற என்னம் புரையோடிப் போயிருக்கிறது. இந்த மாதிரி
தவறுகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள் சமுதாயம் அச்சப்
பட்டு வாழும் தவறு செய்வதற்கு வெட்கப் படுவார்கள் என யாரும் நினைக்க வில்லை.
திரையில் தவறு செய்யும் அரசியல் வாதிகளை
தட்டி கேட்கும் முதல்வன் அன்னியன் இந்தியன் போன்ற படங்களை வரவேற்கும் மக்கள் நிஜத்தில்
அதை வரவேற்காதது விந்தையிலும் விந்தை.
அரசியலில் நான் சேர்ந்தது மக்களுக்கு
தொண்டு செய்யவே சம்பாதிக்க அல்ல என எந்த அரசியல் வாதியாவது நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்.
அம்மாவும் அய்யாவும் சத்திய மகான்கள் அவர்கள்
தவறே இழைக்கவில்லை எந்த தொண்டனாவது சத்தியம் பண்ணி சொல்லட்டும்.
நான் உத்தம புருசன் ஏக பத்தினி விரதன்
திரைக்கு பின்னால் நடிக்கவே மாட்டேன் என்னை வைத்து படம் எடுத்து சம்பாதிப்பவன் என்னுடன்
நடிப்பவன் எல்லாம் என்னை வாழவைத்த தமிழினம் தான் என எவனாவது வந்தேறி பிழைக்கும் நடிகன்
சூடம் கொளுத்தி சொல்லட்டும்.
தமிழ்தான் எனது தாய் மொழி தமிழே என் மூதாதையர்
மொழி என் வீட்டில் நான் தமிழ் மட்டுமே பேசுகிறேன் தமிழை தவிர எனக்கு எந்த மொழியும்
தெரியாது என தமிழன் தலையில் மிளகாய் அரைத்து இன்னும் அரைத்துக் கொண்டு தமிழனை ஏமாற்றி
ஆள நினைக்கும் எந்த தறுதலையாவது சத்தியம் பண்ணி சொல்லட்டும்.
போங்கடா தமிழர்களா தனி மனித துதி பாடாமல்
தாய் தந்தை நல்லா இருக்கனும்னு தமிழ் கடவுள் முருகன் கோவிலில் மொட்டையை போட்டு வேலையைப்
பாருங்கடா.
செட்டியானுக்கு ஆசாரி தலைவர் ஆக முடியாதுடா
கோனாருக்கு நாடார் தலைவர் ஆக முடியாதுடா திராவிடனுக்கு ஆரியன் தலைவன் ஆக முடியாதுடா
தமிழனுக்கு தெலுங்கன் கன்னடன் எல்லாம் தலைவன் ஆக முடியாதுடா
அது போல உங்கமாவையோ அல்லது உங்கயாவையோ
எங்கள பெத்தவுங்களா ஏத்துக்க முடியாதுடா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க