ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாயின் வாயைக் கட்டினோம்


கீழக்கரையில் ஒரு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒன்று இருக்கும். அந்த வகையில் நான் ஹமீதியா மேனிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் போது ஐந்து வருத்தப்படாத வாலிபர்கள் இருந்தோம். ஹமீதியா பள்ளியின் ஆசிரியர் ஓ எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் ஜாபர் அலி அந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர். புலவர் முஸ்தபாவின் மருமகன் செய்யது ஹமிது சுல்தான் சங்கத்தின் பொருளாளர். (இவர்கிட்டதான் அப்ப காசு இருக்கும்) சிட்டி கன்சல்டண்ட் பொறியாளர் ஆசாத் ஹமித் நான் கீழக்கரை நூலகர் திரு அழகுமலை மகன் பொறியாளர் மீனாட்சி சுந்தரம் இவர்கள் உறுப்பினர்கள்.

சங்கக் கூட்டம் கடற்கரையில்தான் நடக்கும் அலை அடிக்காமல் இருந்தால் ஐந்தாம் பாலத்திலும் அலை ரொம்ப அடித்தால் கஸ்டம்ஸ் ஆபிஸின் சரிவு சுவரிலும் நடக்கும். அப்சரா தியேட்டருக்கு எதிரில் ஒரு பெட்டிக்கடையில் சுண்டல் விற்பார்கள் அதை ஆளுக்கொரு பொட்டலம் வாங்கி பாலத்தில் வந்து உட்கார்ந்தோம் என்றால் கஸ்டம்ஸ்காரர்கள் வந்து திட்டும் வரை பேசிக் கொண்டிருப்போம். சில நேரம் பாலத்திலிருந்து செருப்பை கடலில் வீசுவது பின் அது கரை ஒதுங்கினால் கரையில் போய் எடுத்துக் கொளவது கரையில் ஒதுங்காமல் கடல் அலையில் அடித்துச் சென்றால் சட்டையைக் கழட்டி பாலத்தில் போட்டு விட்டு நீந்தி போய் அந்த செருப்பைப் போய் எடுப்பது என சாகசமெல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது கடற்கரையில் ஒரு பெட்ரோல் பேங்க் இருந்த்தது. மீனவர்களுக்காக டீசல் மட்டும் வியாபாரம். அந்த் பங்கில் ஒரு வெள்ளை நாய் ஒன்று கட்டப் பட்டிருக்கும் அந்த நாய் எங்களைப் பார்த்தால் மட்டும் அப்படி ஒரு குரை குரைக்கும். இதில் கோபமடைந்த எங்கள் சங்கத் தலைவர் அந்த நாயை என்ன செய்யலாம் என ஆராய்சியில் இறங்கினார். மீனாட்சி சுந்தரம் ஒரு ஆலோசனை சொன்னார் நூலகத்தில் நாயின் வாயைக் கட்ட மணீமேகலை பிரசுரம் புத்தகம் ஒன்றை பார்த்ததாகவும் அந்த புத்தகத்தில் உள்ள மந்திரத்தை செபித்து அந்த நாயின் வாயைக் கட்டலாம் என அரிய ஆலோசனை வழங்கினார்.

சொன்னபடியே அந்த புத்தகத்தினை கடற்கரைக்கு கொண்டு வந்தார், அதில் குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, நமது காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி,கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால் நாய் குரைக்க இயலாது என குறிக்கப்பட்டிருந்தது. இந்த மந்திரத்தினை நாய் முன் செபித்து அதன் வாயைக் கட்டும் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.ஏன் எனில் எனக்கு மனப்பாட சக்தி அதிகம் என சங்கத் தலைவர் நம்பியிருந்தார்.

ரொம்ப பாதுகாப்பாக நாயைக் கட்டியிருந்த இடத்தில் இருந்து நாற்பதடி தூரத்தில் நின்று கொண்டு காலடி மண்ணை எடுத்து மந்திரத்தினை ஓதி நாயை நோக்கி எறிந்தோம். காலடி மண்ணில் ஒரு கல் இருந்திருக்கும் போலிருக்கிறது. அடிபட்ட நாய் முன்னை விட வள் வள் என குலைக்க ஆரம்பித்தது. கோபமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நாயை அவிழ்த்து விட்டார். இப்போது ஐஸ் கம்பெனியை நோக்கி நாய்க்கும் எங்கள் ஐந்து பேருக்கும் ஒட்டப் பந்தயம் நடக்க ஆரம்பித்தது. நானும் மீனாட்சி சுந்தரமும் பின்னாங்கால் பிடறிபட ஐஸ் கம்பெனியிலிருந்து மீன் மார்க்கெட்டு செல்லும் வலதுப் பக்க பாதையில் ஓடி விட்டோம் சங்கத் தலைவர் இடது பக்கத்தில் கடற்கரைக்கு செல்லும் பாதையில் ஓடி விட்டார். மாட்டிக் கொண்டது ஆசாத்தும் சுல்தானும் ஆசாத் சற்றே உயரமானவர் என்பதால் ஐஸ் கம்பெனி ஓரத்திலிருந்த கருவேல் மரத்தின் கிளையினைப் பிடித்து ஐஸ் கம்பெனி காம்பவுண்ட் சுவரில் ஏறி விட்டார் நாய் இப்போது சுல்தானை பார்த்து முறைக்க தொடங்கியது.

காக்கா உடனே ஒரு காரியம் செய்தார். நாயைக் கட்டும் மந்திரம் உள்ள மணிமேகலைப் பிரசுர புத்தகம் அவர் கையில்தான் இருந்தது. அதை வைத்து நாயின் வாயை நோக்கி ஓங்கி அடித்தார். அவ்வளவுதான் நாய் பின்னங்கால் பிடறிபட திரும்பி பெட்ரோல் பங்க் சென்று விட்டது.


அதற்கு பின்னால் எங்களைப் பார்த்து அது குரைப்பதில்லை. மந்திரத்தினால் பயனில்லை என்றாலும் மந்திரப் புத்தகம் நாயின் வாயைக் கட்டி விட்டது.




6 கருத்துகள்:

faqirsulthan சொன்னது…

அண்ணா எங்கள் அரபி ஆசிரியர் 80 களில் அதிகாலை வேளை தொழச்செல்லும் மாணவர்களுக்கு நாய் பயம் இல்லாமல் போக ஒரு குர் ஆன் வசனத்தை சொல்லச்சொன்னாராம். அது கொஞம் நீளமானது என்பதால் ஒருவர் மனப்பாடம் செய்து விட்டுச்செல்ல மற்றவர்கள் அவர் பாதுகாப்பில் போய் இருக்கின்றனர். வழக்கமாக நாய் குறைக்க இவர்கள் வசனத்தின் ஆரம்பத்தை எல்லாரும் கத்த அது குரைத்துக்கொண்டே துரத்த ஆயத்தமாகி விட எல்லா மாணவர்களும் ஓட்டம் பிடிக்க, மனப்பாடம் செய்தவர் தைரியத்துடன் அந்த வசனத்தை முழுமையாகச் சொல்ல முயன்று தட்டுத்தடுமாறி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி நாயை வெறுப்பேற்ற இனிமே இங்கே நின்றால் இவன் நம்மை கடித்தாலும் கடித்து விடுவான் என்று பயந்த நாய் ஓடியதுதான் பிறகு அவர்களின் தொழுகைக்கு எந்த நாயும் இடைஞ்சல் செய்ய வில்லை என்று கேள்வி. மந்திரத்தை விட பாடி லாங்குவேஜ் தான் காப்பாற்றும் சிலவேளை.

தமிழ்ச் செல்வன்ஜீ சொன்னது…

இது மாதிரி நான் பட்ட பாடுகளை விவரித்து தினமலர் வார மலரில் நாய் படும் பாடு என்று சிறுகதை ஒன்று எழுதினேன்...உங்கள் அனுபவமும் அருமை

jansi kannan சொன்னது…

எனக்கு ஒரு கோபம். எங்கள் வீட்டு அருகில், தெருநாய் உபத்திரம். அது ஒரு வீட்டில் 4ஐந்து நாய்கள். போகும்போதும், வரும்போதும் அவருடனே போகும். எங்கள் வீடுவந்து கட்டிப் போட்டுள்ள ஆட்டைக் கடித்து விடுகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு திமிரான பார்வைதான் பார்த்துச் செல்லுகிறார்கள். அவர்கள் வீட்டு ஆட்டைக் கடித்துவிட்டதே, என்ற ஒரு வருத்தம், இரக்கம்கூட அவர்களுக்கு முற்றிலுமாக இல்லை. நாங்கள் காரில் ஆட்டை அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் இஞ்செக்ஷன் போட்டு வருகிறோம். மீண்டும் மீண்டும் அந்த நாய் எங்கள் ஆட்டை விரட்டுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல 4 நாய்கள். இதுபோல் எங்கள் கோழியையும், தினம் ஒன்று விரட்டி பிடித்து சாப்பிட்டு விடுகிறது. அவர்களிடம் சண்டையிட நான் விரும்பவில்லை. அதான் இந்த முகநூலின் பக்கம் வந்தேன். இது பாவமான செயல் என்று என் மனம் வேதனைப்படுகிறது. ஆனால், அதைவிடப் பாவம், என் பிரியமான வளர்ப்புச் செல்லுங்கள். இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்.

jansi kannan சொன்னது…

எதற்காக ரத்து செய்யப்பட்டது,இப்போதானே இந்த முகநூலுக்குள்ளே வருகிறேன்.

jansi kannan சொன்னது…

எதற்காக ரத்து செய்யப்பட்டது,இப்போதானே இந்த முகநூலுக்குள்ளே வருகிறேன்.

rabbienagai சொன்னது…

Best Casino Pokies Nearby in Canada 2021
Casino Pokies. Casino Pokies. It's just the 포커 칩 name of a 해외 토토 배당 slot machine, 브라 밝기조절 and the number of ways 검증 업체 먹튀 랭크 it is displayed on netteller the casino's

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க