வியாழன், 25 மார்ச், 2010

கலைஞரின் தலைவலிக்கு மருத்துவர் சேதுராமனின் மருந்து

அரசியல் சாணக்கியர், பல்கலை வித்தகர் டாக்டர் கலைஞருக்கு எத்தனையோ தலைவலி திருகுவலி வந்தாலும் தனது திறமைகளால் அவற்றை தவிடுபொடி ஆக்குவதில் வல்லவர்.ஆனால் அவராலேயே தீர்த்து வைக்க முடியாத பிரச்சினை ஒன்று உண்டு என்றால் அது அவரது வாரிசு பிரச்சினைதான். 86 வயதுக்கு மேல் ஆகி விட்டபடியால் ஓய்வு எடுக்க அவர் மனம் விரும்புகிறது. ராமருக்கு பட்டம் சூட்ட விரும்பாத தசரதராக அவர் நெடுமாறன் போன்றவர்களால் விமர்சிக்கப் பட்டாலும் ஓய்வை அறிவிக்க முடியாமல் தினறி வருவதற்கு காரணம் அவரது அதீத பிள்ளைப் பாசமே.

பட்டம் சூட்டப்படாத மன்னராக வலம் வரும் ஸ்டாலினை முதல் மந்திரியாக்கி அழகு பார்க்க எத்தனை தடைகள் (வைகோ போன்றவர்களால்) கட்சியில் வந்தாலும் அவர்களை தூக்கி எறிய கலைஞர் தயங்கியதில்லை. ஆனானப்பட்ட பேராசிரியரே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என சொல்லித்தான் கட்சியிலும் ஆட்சியிலும் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.


ஸ்டாலின் மன்னராவதற்கு தடையாக இருந்து வந்த அழகிரிக்கு மத்தியில் பதவி வாங்கி கொடுத்து தற்காலிக தீர்வு கண்டார் கலைஞர். சரி இனி மத்தியில் முக அழகிரி மாநிலத்தில் ஸ்டாலின் என மக்களும் நினைத்துக் கொண்டனர். அதை உறுதி செய்யும் விதத்தில் அண்ணனும் தம்பியும் இனைந்து "நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து முக அழகிரியின் பிறந்த நாளில் மதுரையில் பாசமழை பொழிந்து கொண்டனர்.
ஆனால் சமிபத்திய ஜூனியர் விகடன் பத்திரிகை பேட்டியில் "கலைஞருக்கு அடுத்து யாரை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்" என சிண்டு முடியும் கேள்விக்கு முக அழகிரி "யாரையும் கலைஞருக்கு அடுத்து தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என மண்டை காயும் விதத்தில் பதில் சொல்லியிருக்கிறார். அழகிரி அண்ணனின் ஆங்கில அறிவு அல்லது ஹிந்தி மொழி பரிச்சியமின்மை அவரை த் தொடர்ந்து டெல்லியில் குப்பைக் கொட்ட தடுக்கலாம். எனவே தமிழகத்திலேயே தனது அரசியலைத் தொடர விரும்பியே இப்படி சொல்லியிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளால் வரும் தலைவலியை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என நாடே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதோ நானிருக்கிறேன் கலைஞருக்கு மருந்து தர என மதுரையில் ஒருவர் கிளம்பியிருக்கிறார் தமிழகத்தின் சந்திரசேகர் ராவ் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் மூமூக கட்சி தலைவர் மருத்துவர் சேதுராமன்.

இவரது தீர்வு தமிழகத்தினை இரண்டாக பிரிப்பது. இதற்கு இவர் கூறும் காரணம் பல

"சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி , தூத்துக்குடி , திருநெல்வேலி , ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.வேலை வாய்ப்புக்காக தென்மாவட்ட மக்கள், வட மாவட்டங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்
தென் பகுதி மக்கள் எல்லோருமே சென்னைக்கே வருவதால் மக்கள் நெருக்கடி அதிகமாகிறது. ஆனால் தென் மாநிலங்களில் பல ஏக்கர் நிலம் இருந்தாலும் அவர் கஷ்டப்படுகிறார். வேலை வாய்ப்பு இல்லாமல் அலைகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டுமானால் தென் மாநிலத்திலும் தொழில் வளர வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து தென் மாநிலம்- வட தமிழகம் உருவாக்கினால் தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். காவிரி கரையை எல்லையாக வைத்து திருச்சி முதல் கன்னியாகுமரி வரை 18 மாவட்டங்களை ஒன்றினைத்து தென்மாநிலம் என்னும் பெயரில் மதுரையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைய வேண்டும்."
இந்த மருந்தினை கலைஞர் அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு மத்தியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தினை இரண்டாக பிரித்தார் என்றால், வடமாநிலத்துக்கு ஸ்டாலினையும் தென் மாநிலத்துக்கு அழகிரியையும் முதல்வராக்கி அவரது தலைவலிக்கு தீர்வை காணலாம். அப்படியே நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். இது செய்து முடிக்கப் பட்டால் கலைஞருக்கு ஒரு வாழ்நாள் சாதனையாக அமையும். அப்படியே டாக்டர் சேதுராமனின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தாற் போலும் இருக்கும். அப்படியே வாழ்விழந்து தவிக்கும் வடமாநில டாக்டருக்கும் (மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி) ஒரு வாழ்வு கிடைக்கும்.அதைவிட முக்கியமாக
எங்களைப் போன்ற இராமநாதபுரம் மக்களுக்கு எதற்கெடுத்தாலும் சென்னை வரும் தேவையில்லாமல் (ஒருநாள் பயணம் 2000 ரூபாய் பயணச்செலவு) மதுரையிலேயே எங்களது வேலைகளை முடித்துக் கொள்ள முடியும்.
கலைஞர் அய்யா விரைந்து இதை செய்வாரா?
ஆவலுடன் ஒரு இராமநாதபுரத்துக்காரன்.



10 கருத்துகள்:

elam1685 சொன்னது…

நல்ல பாயிண்டுதான் , என்ன....... ரெண்டு கல்லுல ஒரு மாங்கா

இறைகற்பனைஇலான் சொன்னது…

மாதம் 10 1/2 ரூபாய் பெரியார் சாப்பிடக்கொடுத்து
எழுதச்சொல்லி தமிழ்னுக்கு உழைக்க்ச்சொன்னார்.
தமிழினக்கொலைஞ்ர் எந்த்தக்காக்காமல் குடும்பத்தைக்காத்தார்.இன்னும் கூறு போட்டு விற்க ஆயத்தப்படுத்தவேண்டாம்.தமிழகம் தமிழகமாகவே இருக்கட்டும். வன்னியர் நாடு,முக்குலத்தோர் நாடு என் ஆகவேண்டாம்.

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா! மாவட்டம் மாவட்டமா தமிழகத்தைப் பிரிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

avan idiyava thooki kuppaila podu, MU.KA athikarathoda pavarla erukum pothe entha attam CM ayitan.. thanga mudiyala..
athuku evvalathu akkarina anoda uoorum avanoda atchiyila vanthurumla athan bayam

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

elam1685,இறைகற்பனைஇலான்,V.Radhakrishnan & அனானி
நன்றி நண்பர்களே உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

vsnt@rediffmail.com சொன்னது…

மேலச்செல்வனூரான்,

தெந்தமிழகம் புறக்கணிக்கப்படுவது உன்மைதான்.
சென்னயை சுற்றி புதிதாக வந்துகொண்டிருக்கும் தொழிற்சாலைகளில்
10 சதவீதத்தை மதுரைக்கு மாற்றினால்தான் அனைத்து மக்களும் பயன் பெறமுடியும்.தென்தமிழகத்து எம்பி,எம் எல் ஏ க்கள் முயற்சிக்க வேண்டும்.
முதலில் மக்கள் அதற்கான செயலில் இறங்க வேண்டும்.

ராஷா சொன்னது…

// சென்னயை சுற்றி புதிதாக வந்துகொண்டிருக்கும் தொழிற்சாலைகளில்
10 சதவீதத்தை மதுரைக்கு மாற்றினால்தான் அனைத்து மக்களும் பயன் பெறமுடியும்.தென்தமிழகத்து எம்பி,எம் எல் ஏ க்கள் முயற்சிக்க வேண்டும்.
முதலில் மக்கள் அதற்கான செயலில் இறங்க வேண்டும்.//

anne sariya sonneega ana tamilnadu renda pirikka yentha kirukkupaya idea koduthalum vendam ulahathuileye Inam, Mozhi, matham, jathi, eppadi yentha oru veyrupadum ellama sahothara manapanmaiyoda valum nadu namma nadu ( india ella) tamil nadu mattum than yeppoluthum otrumaiyai kappom

துபாய் ராஜா சொன்னது…

//கலைஞர் அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு மத்தியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தினை இரண்டாக பிரித்தார் என்றால், வடமாநிலத்துக்கு ஸ்டாலினையும் தென் மாநிலத்துக்கு அழகிரியையும் முதல்வராக்கி அவரது தலைவலிக்கு தீர்வை காணலாம். அப்படியே நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். இது செய்து முடிக்கப் பட்டால் கலைஞருக்கு ஒரு வாழ்நாள் சாதனையாக அமையும்.//

நிச்சயமா இந்த டீலிங் கலைஞருக்கு ரொம்ப பிடிக்கும்.

பழமைபேசி சொன்னது…

:-o)

ஜெய்லானி சொன்னது…

எதுக்கு சார் சண்டை, குடும்பத்தில உள்ளவங்களுக்கு ஒரு ஒரு மாவட்டமா பிரிச்சி குடுத்திடலாம்.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க