வியாழன், 1 அக்டோபர், 2009

அண்ணலுக்கு அஞ்சலி

நாளை அண்ணலின் பிறந்த நாள்































அஹிம்சை.சத்தியாகிரகம்,தீண்டாமை ஒழிப்பு இப்படி அண்ணல் பாருக்கு வழங்கிய நன்னெறிகள் பற்பல.
இத்துடன் சமத்துவம் காக்க அண்ணல் அவணிக்கு வழங்கிய ஒரு புதுமைதான் வட்ட மேஜை மாநாடு.
அண்ணல் வட்டமேஜை மாநாட்டை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பெரும்பாலும் மாநாடுகள் செவ்வக மேஜையில்தான் நடைபெறும்.
செவ்வக மேஜையில் உயர்ந்தவர் மேஜையின் குறுக்கே நடுநாயகமாய் வீற்றிருக்க அவரது அடிப்பொடிகள் அருகருகே அமர்ந்து விவாதிக்கவும் சமனில்லாதோரை மேஜையின் எதிர்மூலைக்கு அனுப்பி அவர் பேசுவதற்கு வாய்ப்பு கூட கொடுக்காத பாகுபாடு நிலையும் இந்த செவ்வக மேஜையில் உண்டு.
ஆனால் அண்ணலை முதன் முதலில் பேச்சுவார்த்தைக்காக இங்கிலாந்து அரசாங்கம் அழைத்த போது அண்ணல் விதித்த நிபந்தனைகள் இரண்டு மட்டும்தான்.
1.இதே எளிய அரை ஆடையுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வருவேன்.
2.பேச்சு வார்த்தை நடைபெறும் மேஜை வட்டமாக இருக்க வேண்டும்.
வட்டமேஜையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடு கிடையாது. எல்லோரும் சமம்தான்.
சமத்துவம் போற்றும் இந்த புதுமையை தந்த அண்ணல் காந்தியின் புகழுக்கு ஈடு இணை கிடையாது.
மகாத்மா இந்த மண்ணிருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.
வாழ்க நீ எம்மான்.

3 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

அண்ணலின் அபூர்வப்படங்கள் அனைத்தும் அருமை.

வட்டமேஜை குறித்த கருத்தும் அழகு நண்பரே...

பெயரில்லா சொன்னது…

enna gandi settuttaanaa?
ayyo bhaavam

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

காந்தியின் அற்புதமான நினைவுகளான படங்கள்

ரொம்ப சூப்பர்

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க