வியாழன், 17 பிப்ரவரி, 2011

இந்த வருட உலக அழகி


இந்த வருட உலக அழகி

எங்க சித்தாளு சின்னாத்தா


சூப்பிய முலையில் பால்

சுரக்க வழியில்லாம- கை

சூப்பி பசியாறும் குழந்தையை

இடையில் வச்சு


வாட்டிடும் வறுமை பாரத்த

சுமக்க வேண்டி- தலை

சும்மாட்டில்

வண்டி பாரம் போல்

செங்கல் ஏந்தி


அடுக்கு மாடிகளின்

நெடுக்குப் படிகளிலே

சிறுத்தைப் புலியெனெ இவள்

நடக்கும் நடையழகுக்கு


உடுக்கை இடையினிலே

தளுக்கு உடையணிந்து

மினுக்கும் மேடையிலே

சுளுக்கு வந்தது போல்


சிலர் நடக்கும் பூனை நடை

எந்த காலத்திலும்

பொருத்தமாகாதய்யா

பொருத்தமாகாது.


உலக அழகியின்னா- சில

உத்தரவாதம் வேணுமாமே?

அறிவு கேள்விகளுக்கு

அழகாய் பதில் சொல்லனுமாமே.


நானும் கேட்டுப்புட்டேன்

நல்ல கேள்வி ஒன்னு

நாலு குணம் கொண்ட எங்க

நங்கை சின்னாத்தாளிடம்


சின்னாத்தா சின்னாத்தா

பதில்

சொல்லாத்தா சொல்லாத்தா


உழைச்சுப் பிழைக்காம

ஏழை வயித்தில்

அடிச்சுப் பிழைக்கும் இந்த

உளுத்துப்போன அரசியல்வாதிகள்


உடனே திருந்தி

உருப்பட்டுப் போறதுக்கு

உடனடி யோசனை ஒன்னு

சொல்லு சொல்லு.


உழைச்சுப் பிழைக்கும்

பாட்டாளி மக்களோட

உழக்கு மூத்திரத்த தினம்

குடிக்கச் சொல்லு - இது

இந்த வருட உலக

அழகியோட பதிலு பதிலு.


10 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி மதுரை சரவணன் உங்க வருகைக்கும் கருத்துக்கும்

Chitra சொன்னது…

மனதை நெருடி - சிந்திக்க வைக்கும் கவிதை...

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி சகோதரி சித்ரா உங்க கருத்துக்கும் வருகைக்கும்

Riyas சொன்னது…

கவிதை சூப்பர்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி ரியாஸ் உங்க வருகைக்கும் கருத்துக்கும்

டக்கால்டி சொன்னது…

பாட்டாவே படிச்சிட்டீங்க தல...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நச்சுன்னு ஒரு கவிதை...

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதை அருமை..
புது புது வார்த்தைகள் பயன்படுத்தட்டிருப்பது..
கவிதைக்கு பலம்
வாழ்த்துக்கள்..

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொன்னது…

உடனே திருந்தி

உருப்பட்டுப் போறதுக்கு

உடனடி யோசனை ஒன்னு

சொல்லு சொல்லு.


உழைச்சுப் பிழைக்கும்

பாட்டாளி மக்களோட

உழக்கு மூத்திரத்த தினம்

குடிக்கச் சொல்லு

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க