வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

துமாரா பாஷ மேராக்கோ மாலும் நஹியே


“என்னப்பா சொல்லுறே - ஆளு

எடுக்க வந்த ஆளு கேட்டான்.


ஆறடி உயரம் இருந்தான்

ஆந்திரத்துக்காரன் அவன்


அழகாய் தமிழ் பேசி

அருமையாய் கூப்பிட்டான்.


“காசு கூடன்னு பாக்காதே

கவலை கொஞ்சம் கூட படாதே


ஆறே மாசத்துல போட்ட காசை எடுத்திடலாம்

ஆயுசுக்கும் உட்காந்து நீ ஜம்முனு சாப்புடலாம்


உங்காளுக நிறைய உண்டு

எங்களோட கம்பெனில


உட்காந்து பேசிப் பாரு

உலகெமெல்லாம் புரியும் பாரு


கோழி உண்டு மீனு உண்டு

குப்பூஸ் ரொட்டி உண்டு


சாண்ட்விச்சு பர்கருன்னு

சலிக்காத சாப்பாடு உண்டு


ரெண்டு வருசம் வேலைபாரு-துபாய்

செண்டு போல வாழ்க்கை மணக்கும் பாரு


கொண்டு வந்து பணத்தக் கட்டி

குபேரனா மாறப் பாரு


ஆசை வார்த்தையில ஆளக்கவுத்திட்டான்

பாசமா பேசுறான்னு - நம்ம பயலும் நம்பி


காசப் புரட்டுறதுக்கு

கடுதியில் வீடு வந்தான்.


புஞ்ச நிலத்த வித்து

புரட்டினான் இருபதைஞ்சு


அஞ்சு வண்டி ஆறுமுகத்தேவர்கிட்ட

வாங்குனான் இருபதைஞ்சு


ரொக்கமா பதினைஞ்சு

இன்னும் தேவைப்பட- பொண்டாட்டி


வைக்கப்புரி தாலி சங்கிலியை

வங்கியில ஈடு வச்சான்


மாசம் ரெண்டு போயி

விசாவும் வந்து சேர


ஆசைக் கனவோடு நம்மாளு

தேசம் விட்டு தேசம் வந்தான்


கம்பெனின்னு சொல்லிபுட்டு

காட்டுக்குள்ள கூட்டி வந்தான்


ஆட்டு மந்தை மேய்க்கச் சொல்லி

தோட்ட வேலை கொடுத்துபுட்டான்


கஷ்டமான வேலைகளை-நம்மாளு

இஷ்டமாக செய்து வந்தான்


நஷ்டம் என்ன ஆச்சுதுன்னா

நம்மாளுக்கு நாதியில்ல தமிழ் பேச


நாளு வாரமாச்சு

வாரம் மாசமாச்சு


நம்மாளு தமிழ் மறந்து

நாலஞ்சு மாசமாச்சு


ஒருநாள் காலையில

திருநாள் வந்தது போல்


வறண்ட பாலையில

வருணன் வந்து விழுந்ததுபோல்


கருண மகராசா அரபி

கபில் முதலாளியோட


காருல வந்திறங்கினான்

ஊருல ஆளெடுத்த ஆந்திராக்காரன்


அவுத்து விட்ட கண்ணுக்குட்டி பால்குடிக்க

எடுத்துவுட்டு ஓடுவதுபோல்


வவுத்தக் கட்டி பொழைக்கும் பய-அந்த

சவத்த திங்கும் பயல்ட்டப் போனான்.


‘அய்யா தெரியுதாய்யா நானு

நீங்க ஆளெடுத்த ஏழைமகன்


நல்லா இருக்கிங்களா உங்களைப்

பாத்து நெடுநாளாச்சுன்னு


பொய்யாப் பொழைக்கும் அந்த

போர்ஜரிப் பய சொன்னான்


‘பய்யா கோனே தும் (யார் நீ),

துமாரா பாஷ மேராக்கோ மாலும் நஹின்னு

(உன் மொழி எனக்குத் தெரியாது)

7 கருத்துகள்:

Chitra சொன்னது…

இப்படி ஏமாத்துறவங்களுக்கும், எப்படித்தான் ஜீரணம் ஆகுதோ?

மதுரை சரவணன் சொன்னது…

kavithai kaviththumaai oru kathaiyai etuththu solli ullathu. vaalththukkaL

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

Chitra சொன்னது…
இப்படி ஏமாத்துறவங்களுக்கும், எப்படித்தான் ஜீரணம் ஆகுதோ?

வாங்க சகோதரி இவனுகள்ளாம் நல்லாத்தான் இருக்கானுக

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க மதுரை சரவணன் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

விழிப்புணர்வு பதிவு.

சேக்காளி சொன்னது…

என்னத்த சொல்ல வளைகுடாவிற்கு வருகிறவனின் பொழப்ப பத்தி.வெயிலுக்கு ஒதுங்கி வெந்நி[வெந்நீர்]ல விழுந்த மாதிரி,எறா[ல்]புடிக்க போயி சுறாகிட்ட மாட்டுன மாதிரிதான் இருக்கு.இங்க இருக்க நிலைமையை நம்மூர்ல இருக்கவங்க கிட்ட சொன்னா எங்க முன்னேறிடுவேனோன்னு பொறாமையில பொய் சொல்றான்னு சொல்றாங்க.அப்புறம் நாம[வளைகுடாவாசிகள்]என்ன செய்ய. நான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்னு ------- பட வேண்டியதுதான்

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க