சாயங்காலம் ஆட்டம் போட்டு
சாப்பிடாம தூங்கும் மகன்
எப்ப எந்திரிப்பான் என்ன கேட்பான்னு
எங்களுக்குத் தெரியாததாலே
கொக்கச்சி பாக்கட்டு ஒன்னு
குடமிளகாய் லேஸ் பாக்கட்டு ஒன்னு
மிக்சர் பாக்கட்டு ஒன்னு-பிரிட்டானியா
மில்க் பிக்கிஸ் பாக்கட்டு ஒன்னு
பச்சை வாழைப்பழம் ஒன்னு-நாட்டு
மஞ்ச வாழைப்பழம் ஒன்னு
டிக்டாக் பாக்கட்டு ஒன்னு-தித்திக்கும்
தேன்குழல் பாக்கட்டு ஒன்னு
வாங்கி வந்து வச்சிபுட்டா- தங்கமகன்
தூங்கி எந்திரிச்சா தொல்லையில்ல
தாங்கிக் கொள்ள முடியாதுங்க-செல்லமகன்
தேம்பி அழ ஆரம்பிச்சான்னா
இப்படித்தான் ஒருநாளு
நல்ல நட்ட நடுசாமத்தில
எப்படித்தான் தெரிஞ்சிட்டானோ
வீட்டில் இல்லாத பொருள் எதுன்னு
“அப்பா ஆரஞ்சுன்னு” ஆரம்பிச்சான் தங்கமகன்
இப்ப கிடைக்காதுன்னா ஏத்துக்கல செல்லமகன்
வெக்கம் பாக்காம ராத்திரியில்
பழக்கடை கோவிந்தன் வீட்டுக் கதவு தட்ட
தூக்கம் பாக்காம அவனும் கடைதிறந்து
எம்மவன் ஏக்கம் தீர்த்து வச்சான்.
அப்பப்ப போன் போட்டு என் பொண்டாட்டிகிட்ட
ஆரஞ்சு வாங்கி வச்சியான்னு கேட்பதுண்டு.
இப்ப ரெண்டு நாளா என் மகன்
என்ன கேட்குறான்னா
‘அப்பா எங்கம்மா நான் அவரை
எப்பம்மா பார்ப்பேன்னு”
துக்கம் அடைக்குதுங்க தொண்டைய
தூக்கம் வரலிங்க கண்ணுல
கடலைக் கடந்து வந்து சம்பாதிக்கிறது
காசு பணம் மட்டும்தாங்க
6 கருத்துகள்:
துக்கம் அடைக்குதுங்க தொண்டைய
தூக்கம் வரலிங்க கண்ணுல
கடலைக் கடந்து வந்து சம்பாதிக்கிறது
காசு பணம் மட்டும்தாங்க
....மனதை கனக்க வைக்கும் சூழ்நிலை.
சூப்பரா எழுதியிருக்கீங்க... மகன் மீது ரொம்ப பாசமோ...
// குடமிளகாய் லேஸ் பாக்கட்டு ஒன்னு //
இது எனக்கு ரொம்பப் பிடிக்குமே... அதை ஏன் இப்படி நட்டநடு ராத்திரியில் ஞாபகப் படுத்துறீங்க...
// கொக்கச்சி பாக்கட்டு ஒன்னு //
புரியல அப்படின்னா என்ன....?
ப்ச்
ஏக்கம்தான்... என்னசெய்ய...
நானும் உணரும் தருணம் இது.
இந்த பிரிவு அவர்களின் நல்வாழ்வுக்குதானே?
கவிதை நல்லாயிருக்குங்க.
அருமை..
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க