நாளை தமிழர் திருநாள். பொங்கல் பண்டிகை. அத்துடன் அரசு அறிவித்தபடி நாளைதான் தமிழ் புத்தாண்டு.
என்னைப் பொறுத்தவரை கலைஞர் கருணாநிதி செய்த உறுப்படியான நல்ல விடயங்களில் தலையாயது இந்த தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்ததுதான்.
அறிவித்தபடி யாரும் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுகிறார்களா எனப் பார்த்தால் இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.
நாட்காட்டிகளில் பார்த்தால் வழக்கம் போல் சித்திரை முதல் நாளையே தமிழர் புத்தாண்டாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவில்லை என்று கருத வேண்டியிருக்கிறது.
ஒரு ஆண்டில் பாதி நாட்களை விடுமுறையாக கொண்டாடும் நாட்டில் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்ததால் சித்திரை முதல் நாள் விடுமுறை குறையுமே என்று தமிழ் சமுதாயம் கருதுகிறதோ என்னவோ.
பொங்கலுக்கு அடுத்தடுத்து மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் என தமிழர் பெருமை கூறும் நல்ல நாட்கள் இருந்தாலும் தீபாவளியை கொண்டாடும் அளவுக்கு சில தமிழர் பொங்கலை கொண்டாடுவதில்லை. ஆயுதபூசையை கொண்டாடும் அளவுக்கு மாட்டுப் பொங்கலை கொண்டாடுவதில்லை. இளைய சின்ன வீரத் தளபதிகளின் பிறந்த நாளை கொண்டாடும் அளவுக்கு திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவதில்லை.
இந்த சில தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நகரங்களில்தான். குறிப்பாக தமிழன் தலைநகர் சென்னையில். பொங்கலும் மாட்டுப் பொங்கலும் உழவர்கள் தொடர்புடையது அதை உழவுத்தொழிலே செய்யாத நகரங்களில் ஏன் கொண்டாட வேண்டும் என இந்த நகரவாசிகள் நினைக்கலாம்.
தமிழ்நாட்டுக்கு தொடர்பே இல்லாத கிருட்டினன் நரகாசுரன் கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்ட தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் போது அதில் பத்தில் ஒரு பங்காவது நம் உண்ணும் உணவை நமக்குத் தர உழைக்கும் உழவ்னுக்கும் கால் நடைகளுக்கும் மரியாதை தரும் பொங்கல் திருநாளுக்கு தர தமிழர்கள் முன் வர வேண்டும்.
அரசு வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக அனைவரும் கொண்டாடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக சித்திரை முதல் நாள் அரசு விடுமுறை இருந்தால் அதை முழுமையாக நீக்க வேண்டும்.
நாளை தமிழர் புத்தாண்டு என சிறப்பிதழ் வெளியிடுகின்ற பார்ப்பன ஏடுகள் குறிப்பாக தினமலர் போன்றவற்றினை அரசு அவ்வாறு செய்யக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். நாட் காட்டிகளில் தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க செய்ய வேண்டும்.
குக் பன்னி செர்வ் பன்னி ஈட் பன்னி டைஜிஸ்ட் பன்னி டெபகேட் பன்னி என பன்னித் தமிழ் பேசும் தமிழன் காதில் செவுடன் காதில் சங்காக இது ஒலித்தாலும் என்றாவது ஒருநாள் காது கேட்கும் என முயற்சியை கை விடாது தமிழ் அறிஞர்கள் அனைவரும் தொடர வேண்டும்.
அதற்கான என்னால் ஆன முயற்சியே இந்த பதிவு.
எனவே தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் என் இனிய
தமிழ்
புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
இந்த தமிழ் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற தமிழ் கடவுளாம் அப்பன் முருகனை வேண்டுகிறேன்.
7 கருத்துகள்:
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி நன்பரே உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தை திருநாள், தமிழர் திருநாள் தான் !
தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று தான் . விளக்கத்துக்கு இந்த சுட்டியை பாருங்கள்
http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_21.html
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
என் இனிய தமிழ் மக்களே!
இதோ பிறந்துவிட்டாள் "விக்ருதி"...
அனைத்து தமிழர்களும் இன்புற்று வாழவே!!
"""தமிழன் என்று சொல்லடா...!!! தலை நிமிர்ந்து நில்லடா...!!!
இரா.பரணிதரன்
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க