செவ்வாய், 28 டிசம்பர், 2010

இங்கிலிசுக்கு தமிழ்நாட்டுல்ல இருக்கிற மருவாதை

ரிக்சாக்காரன் படத்துல நம்ம எம்ஜியாரைப் பாத்து மேஜர் சுந்தரராசன் கேட்பாரு
"செல்வம் வாட் யூ திங்க் அபோட் லைப்" அதுக்கு வாத்தியாரு இங்கிலிசுலேயே
பதில் சொல்வாரு. அதப்பாத்து அசந்து போற மஞ்சுளா வாத்தியாரைப்பாத்து
நீங்க படிச்சவரான்னு கேட்கும். அந்த அளவுக்கு நம்ம தமிழ்நாட்டுல எவனாவது
இங்கிலுசுல பொளந்து கட்டுனா உடனே நம்ம சனம் அவன் மேல ஒரு மருவாத
வச்சிரும்.

வேலைக்காரன் அப்புறம் மன்னன் படத்துல சூப்பர் ஸ்டாரு தூங்காதே தம்பி
தூங்காதேல்ல உலகநாயகன் அப்புறம் மீனவரா இருக்கிற விசய் தம்பி காருல
வர்ற கதாநாயகிகிட்ட இங்கிலிசுல பொளந்துகட்டுற காட்சியெல்லாம் பாத்துட்டு
கை வலிக்கிற வரைக்கும் கை தட்டுற சனம்தான் நம்ம தமிழ் சனம்.

இன்னும் பஸ்ஸுல டிரய்ன்ல போகும் போது எவனாவது இந்தியிலோ அல்லது
தெலுங்கிலயோ பேசுனா அவன் சட்டைப் பண்ணாது நம்ம சனம். ஆனா இங்கிலிசுலே
எவனாவது பேச ஆரம்பிச்சான் அவன அப்படியே தேவலோகத்துல வந்து இறங்குன
இந்திரன் சந்திரன் மாதிரி பாக்க ஆரம்பிப்பாய்ங்க.

இதுக்கு நம்மளும் விதிவிலக்கல்ல. ஒன்னாம் வகுப்பில இருந்து 12ம் வகுப்பு வரைக்கும்
தமிழ் மீடியத்தில படிச்சிட்டு காலேசுக்குப் போன புதுசுல கண்ணக்கட்டி காட்டுல விட்ட
மாதிரிதான் இருந்துச்சு. செக்சன் சாலிடு ஹரிசாண்டல் பிளேன் வெர்டிகல் பிளேன்ன்னு
இந்த லெக்சரர்கள் பாடம் எடுக்கும்போது அப்படியே வாயைப்பிளந்து பாத்துகிட்டு இருக்கிறது.

அப்புறமா ஹிந்து பேப்பரு எக்ஸ்பிரஸ் பேப்பரு அசைடு அவுட்லுக்கு இந்தியா டுடேன்னு
ஒன்னுமே புரியாட்டாலும் இந்த பேப்பரைல்லாம் வாங்கி எங்கியாவது பஸ்ஸுல போனா
படிச்சுகிட்டே போறது. படிக்கிறமோ இல்லியோ ஒரு பந்தா காட்டுறது.அப்புறமா கொஞ்சம்
கொஞ்சமா எவனாவது சிக்குறவன்கிட்ட பண்ணி இங்கிலிசு அதாங்க இந்த இன் பண்ணி,
டெர்மினேசன் பண்ணி, ரீடிங் பண்ணி, எனர்ஜைஸ் பண்ணி, அஸ்யூம் பண்ணி, அனலைஸ்
பண்ணி இப்படி பல பண்ணி இங்கிலிசுல அளப்பரையை கூட்டிக்கிட்டு இருந்தோம்.

அப்புறம் சென்னையில வேலைப் பார்க்கும் போது ஆங்கில அறிவ அண்ணாநகர் கிரேண்ட்
செண்ட்'ரல்ல சாக்கிசான் படம் பாத்தும் சத்யம் தியேட்டருல அர்னால்ட் படம் பாத்தும்
ஊருக்குப்போனா மதுரை மாப்பிள்ல விநாயகருல்ல தங்கரீகல்ல பல படங்கள்ள பாத்து
அறிவ வளத்துக்கிட்டோம். இதுல ஒரு விசேசம் என்னன்னா இப்படி படம் பாக்கும் போது
பக்கத்து சீட்டுல்ல எவனாவது சிரிச்சா உடனே நாமளும் விழுந்து விழுந்து சிரிச்சு வைக்கிறது
இல்லனா அவன் நம்மல இங்கிலிசு தெரியாதவன்னு தப்பா நினைச்சுடக்கூடாது பாருங்க.

இப்படி ஒரு பத்து வருசம் சென்னையில வண்டி ஒட்டிட்டு சவுதி வந்தபின்னர்தான்
தெரிஞ்சது நாம பேசுறது இங்கிலிசு இல்லன்னு. ஏன்னா இங்கே பெட்'ரோல் தோண்டுற
வேலையில பெரிய பெரிய அதிகாரிங்க எல்லாம் வெள்ளெக்கார துரைங்கதான். நான் பேசுன
இங்கிலிசப் பாத்துட்டு அவனுங்கல்லாம் மிரண்டு போயி யப்பா உனக்கு Bக்கும் Pக்கும்
வித்தியாசம் தெரியல Tக்கும் Dக்கும் வித்தியாசம் தெரியல்லன்னு சொல்லிட்டு நம்ம கிட்டேயே
வரமாட்டானுக.

இருந்தாலும் நம்ம இங்கிலிசு தாகம் அடங்கல்ல. சிக்குனானுக பிலிப்பைனிக பிலிப்பினிகிட்ட
இங்கிலிசு பேசுறது ரொம்ப ஈசி. நம்ம தமிழங்கிட்ட பண்ணி பண்ணி பேசுற மாதிரி
அவனுககிட்ட கோயிங்கா கம்மிங்கா ஈட்டிங்கா சாட்டிங்கான்னு இப்படி ஒவ்வொரு வார்த்தை
முடிக்கும்போதும் ஒரு ஆ சேத்துகிட்டு பேசுனா போதும்.

இப்படி பேசி பேசி நமக்கு ஒரு காலத்துல ஒரு பந்தா வந்துருச்சு. ஆகா நாம பேசுறதுதாண்டா
இங்கிலிசுன்னு. அப்ப ஒரு நாள் ஒரு தமிழன்கிட்டேயே இங்கிலிசுல பேச ஆரம்பிச்சதும்
அவன் கேட்டான் ஏண்டா உனக்குத்தான் எல்லாம் தெரியுமா? எங்க சொல்லு தொப்புளுக்கும்
அக்குளுக்கும் இங்கிலிசுல என்னடா வார்த்தைன்னு. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல
அப்புறம் அவன் சொன்னான். போயி நல்லா நிறைய வார்த்தகள கத்துக்க அதுக்கப்புறம் "ஐ
ஹேட் வெண்ட்" ஐ டிட் பினிசுடு"ன்னு நீயா புதுசு புதுசா Tenses உருவாக்காதேன்னு மூக்க
அறுத்துபுட்டான். அதோடு விட்டான்னா டேய் இங்கிலுசு என்பது ஒரு லாங்குவேசுதான் அது
ஃநாலேட்ஜ் இல்லன்னு அட்வைசு பண்ணுனான்.

அப்புறமா நான் என்கர்டா டிக்சனரி வெப்ஸ்டைர் டிக்சனரி பழனியப்பா டிக்சனரின்னு பல
அகராதிகள்ள கம்யூட்டர்ல்ல வச்சிகிட்டு கிடைக்கிற ஆங்கில வார்த்தக்கெல்லாம்
அர்த்தம் பாத்து எழுதிப்பாத்து நெட்டுரு போட்டு தினமலர் பேப்பருக்கு தமிழ் செய்திகளுக்கு
இங்கிலிசுல பின்னூட்டம் போட்டு ஒரு ஆங்கிலப் புலவனா மாறிக்கிட்டு வரும்போது அடிச்சானுக
கம்பெனியில ஆப்பு ஆட்குறைப்புன்னு.

அப்புறமா ஊரு வந்து சேந்து மறுபடியும் நேர்முகத்தேர்வு பல கலந்து திரும்ப சவுதி வந்து
சேந்தப்புறம் தெரிஞ்சது.புதுக் கம்பெனில்ல எல்லாரும் நேபாளியும் பங்காளியும்
அவனுக என்னப்பாத்து சொன்னானுக "என்னடா நீ நாங்க வெளிநாட்டுகாரனுக இந்தில
பேசுறோம். தும் ஹிந்துஸ்தானி லெகின் இந்தி நஹி மாலும்"ன்னு

நம்ம திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் ஒரு தடவ ஒரு மீட்டிங்கில மதிமுக
எல் கணேசனப் பத்தி பேசும் போது சொன்னாரு. "எல்ஜி குறவன் குறத்திகிட்ட இங்கிலிசு
பேசுவாரு. இங்கிலிசுகாரன்கிட்ட தமிழ்ல்ல பேசுவாருன்னு" அந்தமாதிரிபோச்சு என்னோட
நிலமையும்.

இப்ப கொஞ்ச நாளா நம்ம மடிகணினில்ல இருந்த என்கர்டா பழனியப்பா டிக்சனரில்லாம்
மூட்டைக் கட்டி போட்டாச்சு.

நம்மகிட்ட இருந்த பல ஆங்கில வார்த்தைக்கான் அர்த்தமெல்லாம் தூக்கி ஒரு இடத்துல
போட்டாச்சு. அத படிக்க விரும்புறவங்க இங்கே போயி படிச்சுங்கங்க.

இப்ப நாம பேசுறதுல்லாம் இதுதான்.

"கியா உவ்வா", காம் கர்த்தாஹே" கியா சாயியே" பந்த் கரோ" கிதர் சாரே
நாம் கியா கே"

கேட்கிற பாட்டெல்லாம் இது தான்
கபி கபி மேரா தில் மே, கியா வுவா தேரா வாதா

ஆத்தாஹே சாத்தாஹே
அவ்வளவுதாங்ஹே, அச்சாஹே டீகே.

12 கருத்துகள்:

sakthistudycentre.blogspot.com சொன்னது…

அருமையான பதிவு

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

Vettipayal சொன்னது…

வணக்கம் பதிவு அருமை! அதிலும் நீங்கள் ஆங்கிலம் கற்ற முறைவிகுவாக சிரிக்க வைத்தது.நல்ல எழுத்து நடை.L.G யை பற்றியது முற்றிலும் உண்மை.எல் கணேசனப் பத்தி பேசும் போது சொன்னாரு. "எல்ஜி குறவன் குறத்திகிட்ட இங்கிலிசு
பேசுவாரு. இங்கிலிசுகாரன்கிட்ட தமிழ்ல்ல பேசுவாருன்னு"

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நகைச்சுவையுடன் எழுதியுள்ளீர்கள். நன்றாக உள்ளது. ஆங்கிலம் தெரிந்து கொள்ள பிளிபைனிகளை நாடாதீர்கள்.
நிறைய ஆங்கில நாவல்கள் படியுங்கள். அவைகளில் வரும் வார்த்தை பிரயோகங்களை மனதில் கொள்ளுங்கள்.(நல்ல வார்த்தைகள் மட்டும்) தயங்காமல் பேசுங்கள்.ஆங்கில படங்களை அதே சப் டைட்டிலில் காணுங்கள். இது ஒரு சிறந்த வழி. புது வார்த்தைகளை தெரிந்து கொள்ளுங்கள். பயன்படுத்துங்கள். நாளடைவில் நீங்கள் எங்கே உள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.முயற்சியே முழு முதற் காரணம். வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

super excellent narration of reality in life summa sollakkoodathu manushan pinni eduthitar! vazhthukkal!

philosophy prabhakaran சொன்னது…

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Jayadev Das சொன்னது…

//இங்கிலுசுல பொளந்து கட்டுனா உடனே நம்ம சனம் அவன் மேல ஒரு மருவாத வச்சிரும்.// நானும் அப்படித்தான் இருந்தேன். யாராச்சும் ஆங்கிலத்தில் பேசினாலோ, அல்லது ஓரிரு வார்த்தைகள் நான் பேச நேரிட்டாலோ நெஞ்சு பதை பதிக்கும், மூச்சு வேகம் அதிகமாகும்!! ஓரளவுக்கு ஆங்கிலம் புரிய ஆரம்பிச்சு அதை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் யாராச்சும் ஆகிலத்தில் உரையாடினா தெலுங்கு, ஹிந்தி மாதிரி சாதாரணமாகவே தோணுது. முன்பு போல ஒரு பொருட்டாக எண்ணத் தோணுவதில்லை, முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
//"எல்ஜி குறவன் குறத்திகிட்ட இங்கிலிசு
பேசுவாரு. இங்கிலிசுகாரன்கிட்ட தமிழ்ல்ல பேசுவாருன்னு"//அதென்னமோ தெரியலைங்க, ஒரு தமிழ்காரன் இன்னொரு தமிழ்க் காரன் கிட்ட இங்கிலிபீஸுல தான் பீஸறான் சாரி... பேசறான்! மத்த மொழிக்காரங்க கிட்ட தமிழில் பேசறான், இதை நான் பல பேத்துகிட்ட பாத்திருக்கேன். ஏன்னே புரிய மாட்டேங்குது! //வேலைக்காரன் அப்புறம் மன்னன் படத்துல சூப்பர் ஸ்டாரு..//அவ்வளவு ஏங்க, "மின்சாரக் கண்ணா" ன்னு கொஞ்சும் நீலாம்பரிகிட்ட என்னமா பொலந்து கட்டுவாரே! அதை விட்டுட்டீங்களே! //பக்கத்து சீட்டுல்ல எவனாவது சிரிச்சா உடனே நாமளும் விழுந்து விழுந்து சிரிச்சு வைக்கிறது// அதென்னவோ, இன்னமும் ஆங்கிலப் படங்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் கொல்லென்று சிரிப்பார்கள், நான் ஞே.... என்று விழித்துக் கொண்டிருப்பேன்... இன்னமும்...!

Jayadev Das சொன்னது…

//சவுதி வந்தபின்னர்தான் தெரிஞ்சது நாம பேசுறது இங்கிலிசு இல்லன்னு.// வெள்ளைக்காரங்க வீட்டில பிறந்த குழந்தை ரெண்டே வருஷத்துல அருமையா ஆங்கிலம் பேசும், நாம்மால M.A. படிச்சாக் கூட சிலரால சரியா பேச முடியறதில்லை. மொழி என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பேசுவதைக் கவனித்து அதை நம் மனது நமக்குத் தெரியாமலேயே கப்பியடிப்பதால் வருவது. [அதனால் தான் மதுரை, கோவை, நெல்லை, சென்னை {ஐயோ சாமி...} போன்ற விதம் விதமாக மக்கள் பேசுகின்றனர், யாரும் கற்றுத் தராமலேயே!!]அதனால் வெள்ளைக்காரன் மாதிரி பேச முடியாதது நமது குற்றமல்ல. இருப்பினும், நாளாக நாளாக நாம் பேசும் அரைகுறை ஆங்கிலத்தை அவர்களும், அவர்கள் பேசும் அமரிக்கன் ஆங்கிலத்தை நாமும் புரிந்து கொண்டு கருத்து பரிமாற்றங்களை சிரமமில்லாமல் மேற்கொள்ள முடியும். இன்னொன்று, ஆங்கிலத்தில் பேச Dictionery கள் அத்தனையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. come, go, sit, eat போன்ற அடிப்படை வார்த்தைகளும், கொஞ்சம் எளிய இலக்கணமுமே போதும். கடின வார்த்தைகளை வெள்ளைக் காரனே பேசுவதற்குப் பயன் படுத்துவதில்லை. அப்படி பேசினால், "இவன் எங்கேயிருந்துடா வந்தான்" என்பது போல நம்மைப் பார்ப்பார்கள். இத்தோடு சேர்த்தி நீங்கள் இருக்கும் துறை சம்பந்தப் பட்ட ஆங்கில வார்த்தைகளை அத்துபடியாகத் தெரிந்திருந்தால் போதும். ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் L.G. ஆட்களைத் தவிர்த்து விட்டு நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் பேச வேண்டும், தராகப் பசி விடுவோமோ என்ற ஒருபோதும் கூச்சப் படக் கூடாது, நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றுதான் பார்ப்பார்களே தவிர உங்கள் இலக்கணம் சொல்லாட்சி [usage of right words] போன்றவற்றை ஒரு பொருட்டாகவே பார்க்க மாட்டார்கள். தங்களது பதிவிற்கு நன்றி, நீங்கள் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.

Jayadev Das சொன்னது…

//சவுதி வந்தபின்னர்தான் தெரிஞ்சது நாம பேசுறது இங்கிலிசு இல்லன்னு.// வெள்ளைக்காரங்க வீட்டில பிறந்த குழந்தை ரெண்டே வருஷத்துல அருமையா ஆங்கிலம் பேசும், நாம்மால M.A. படிச்சாக் கூட சிலரால சரியா பேச முடியறதில்லை. மொழி என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பேசுவதைக் கவனித்து அதை நம் மனது நமக்குத் தெரியாமலேயே கப்பியடிப்பதால் வருவது. [அதனால் தான் மதுரை, கோவை, நெல்லை, சென்னை {ஐயோ சாமி...} போன்ற விதம் விதமாக மக்கள் பேசுகின்றனர், யாரும் கற்றுத் தராமலேயே!!]அதனால் வெள்ளைக்காரன் மாதிரி பேச முடியாதது நமது குற்றமல்ல. இருப்பினும், நாளாக நாளாக நாம் பேசும் அரைகுறை ஆங்கிலத்தை அவர்களும், அவர்கள் பேசும் அமரிக்கன் ஆங்கிலத்தை நாமும் புரிந்து கொண்டு கருத்து பரிமாற்றங்களை சிரமமில்லாமல் மேற்கொள்ள முடியும். இன்னொன்று, ஆங்கிலத்தில் பேச Dictionery கள் அத்தனையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. come, go, sit, eat போன்ற அடிப்படை வார்த்தைகளும், கொஞ்சம் எளிய இலக்கணமுமே போதும். கடின வார்த்தைகளை வெள்ளைக் காரனே பேசுவதற்குப் பயன் படுத்துவதில்லை. அப்படி பேசினால், "இவன் எங்கேயிருந்துடா வந்தான்" என்பது போல நம்மைப் பார்ப்பார்கள். இத்தோடு சேர்த்தி நீங்கள் இருக்கும் துறை சம்பந்தப் பட்ட ஆங்கில வார்த்தைகளை அத்துபடியாகத் தெரிந்திருந்தால் போதும். ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் L.G. ஆட்களைத் தவிர்த்து விட்டு நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் பேச வேண்டும், தராகப் பசி விடுவோமோ என்ற ஒருபோதும் கூச்சப் படக் கூடாது, நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றுதான் பார்ப்பார்களே தவிர உங்கள் இலக்கணம் சொல்லாட்சி [usage of right words] போன்றவற்றை ஒரு பொருட்டாகவே பார்க்க மாட்டார்கள். தங்களது பதிவிற்கு நன்றி, நீங்கள் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.

Jayadev Das சொன்னது…

Correction:ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் L.G. மாதிரி ஆட்களைத் தவிர்த்து விட்டு, நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் பேச வேண்டும், தவறாகப் பேசி விடுவோமோ என்று ஒருபோதும் கூச்சப் படக் கூடாது. குழந்தை முதலில் விழுந்து, விழுந்துதான் நடக்கும், அப்புறம் சரியாக நடக்கும். முதல் நிலைக்கே செல்லாமல் இரண்டாம் நிலைக்குச் செல்ல முடியாது!

abdur சொன்னது…

kalakkitinga thala..........

Jayadev Das சொன்னது…

ஹிந்தி கற்றுக்கொள்வதில் தப்பில்லை, கற்றுக் கொள்ளுங்கள். In fact every Indian should learn Hindi! It is our National Language and spoken by more number of people than any other language.

abdul சொன்னது…

ரொம்ப நாளூக்கு பிற்கு மனம் விட்டு சிறீத்தேன்
பகிர்வுக்கு ந்ன்றீ

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க