
சில பேர் என்னிடம் கேட்டதுண்டு "தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும் என்னால் முடிந்தவரை அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் சொல்லுகிறேன்.
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் சிறீ சதானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன. இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர்.மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.
முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.
மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.
இதைத்தான் கந்தகுருகவசத்தில் சதானந்த சுவாமிகள் சொல்லுகிறார்
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான்.
இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம்.
ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு
மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை.
8 கருத்துகள்:
படங்களும்,தகவல்களும் அருமை.
வாழ்த்துக்கள் நண்பரே...
சரியான விளக்கம்
நன்றி
இந்த விளக்கம் அனைத்து கடவுள்களுக்கும் பொருந்தும். சிவன், விஷ்ணு, பிள்ளையார், சாஸ்தா
கந்தபுராணத்தில் ஓர்டத்தில் முதல் மனைவிக்கு செக்ஸ்ல பெருசா இன்ரெட்ஸ் இல்ல அதனால தான் வேற ஒருத்திய கட்டினதா கருத்துப்பட செல்லப்பட்டுள்ளதே. என்னுமொரு இடத்தில முதல் மனைவி அழகில்ல என்னும் தொனிப்பட இருக்கின்றது. ஆய்வாளர்கள் தெய்வானை ஆரியர் வருகைக்கு பின்னரான திணிப்பு என்கின்றார்கள். எதை நம்புறதென்னே தெரியல்ல
உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html
nantraka ullathu, ithai eppudi payan padutuvathu,nanum yoga payirchi seikiren.sulumunai adaya enna seiya vendum
sulumunai adainthavarkal yar?
lic nagaraj,chennai,
9840047520
nagarajvlic@gmail.com
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க