2040 ஆண்டில் ஒரு நாளிதழில் கிடைத்த!!! முக்கியச் செய்திகள் இது. (எப்படி கிடைச்சதுன்னு மட்டும் கேட்காதிங்க)
1."வரும் ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி நியாய விலைக் கடைகளில் இட்டிலி சட்னி சாம்பார் வழங்கப்படும்" என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.
2."அடுத்த ஆண்டு மார்ச்சு 3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்குள் சென்னையின் அனைத்து சாலைகளும் மேம்பாலமாக்கப்படும்" என ஆண்கள் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கி துனை முதல்வர் உதயநிதி பேச்சு.
3."மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என சிம்மக்கல் ஒத்தகடை மேம்பால திறப்பு விழாவில் மத்திய உரத்துறை அமைச்சர் அறிவுநிதி பேட்டி.
4.வடநாடு ஓய்வு முடித்து இன்று உடன்பிறவா சகோதரி கலாவுடன் சென்னை திரும்புகிறார் அ இ மா ம தி மு க (அனைத்திந்திய மானாட மயிலாட திராவிட முன்னேற்ற கழகம்) பொதுச் செயலாளர் திருமதி! குஷ்பு.
5.சத்தியமூர்த்தி பவன் சாக்கடை அடைப்பை சரி செய்ய ஆள் நியமனத்திற்கு அன்னை பிரியங்காவின் ஒப்புதல் பெற தமிழக காங்கிரசார் டெல்லி பயணம்.
6."தனது மகள்கள் இருவரும் இனி மத்திய அமைச்சரானால் முச்சந்தியில் நிறுத்தி மக்கள் என்னை திருக்கைவாலால் அடிக்கலாம்" பா ம க தலைவர் அன்புமணி பேட்டி.
7."இந்தியாவின் இரும்பு பெண்மணி குஷ்பூவால்தான் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியும்" என ம தி மு க பொது செயலாளர் கோ வை(யாபுரி) பேச்சு.
8."காங்கிரஸ் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும்" என தேசிய பிற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜய் பேட்டி.
9."வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் 814 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" இலட்சிய தி மு க தலைவர் விஜய சிலம்பரசன் அறிவிப்பு.
10."அரசியலில் இறங்குவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்" தந்திரன் பட இசைச் சுருள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.
புதன், 2 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
10th, touching.
Nathan
//2040 ஆண்டில் ஒரு நாளிதழில் கிடைத்த!!! முக்கியச் செய்திகள்...//
அந்த நாளிதழை நானும் படித்தேன். கல்வி அமைச்சர் இன்பன் உதயநிதி குறித்து ஒரு செய்தி வந்திருந்ததே, அதை ஏன் விட்டுவிட்டீர்கள்?
செய்தித் தொகுப்பு நன்று.
:))
கலக்கல் !
நடந்தாலும் நடக்கும் !
அவிங்களையெல்லாம் .........
பதிவை போட்ட உடனே கருத்து வழங்கிய உங்கள்
பேராதரவுக்கு நன்றி
/2040 ஆண்டில் ஒரு நாளிதழில் கிடைத்த!!! முக்கியச் செய்திகள்...//
அந்த நாளிதழை நானும் படித்தேன். கல்வி அமைச்சர் இன்பன் உதயநிதி குறித்து ஒரு செய்தி வந்திருந்ததே, அதை ஏன் விட்டுவிட்டீர்கள்?
செய்தித் தொகுப்பு நன்று.
வாங்க அ.நம்பி
அவசரத்துல அந்த செய்தியை மறந்திட்டேன்
ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி.
வாங்க கோவி.கண்ணன் அண்ணா
எனக்கும் உங்களை மாதிரியே
இது நடந்தாலும் நடக்கும்னு தோணுது
கருத்துக்கும் வரவுக்கும் நன்றிங்கண்ணா.
//.சத்தியமூர்த்தி பவன் சாக்கடை அடைப்பை சரி செய்ய ஆள் நியமனத்திற்கு அன்னை பிரியங்காவின் ஒப்புதல் பெற தமிழக காங்கிரசார் டெல்லி பயணம்.
6."தனது மகள்கள் இருவரும் இனி மத்திய அமைச்சரானால் முச்சந்தியில் நிறுத்தி மக்கள் என்னை திருக்கைவாலால் அடிக்கலாம்" பா ம க தலைவர் அன்புமணி பேட்டி.
7."இந்தியாவின் இரும்பு பெண்மணி குஷ்பூவால்தான் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியும்" என ம தி மு க பொது செயலாளர் கோ வை(யாபுரி) பேச்சு.
8."காங்கிரஸ் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும்" என தேசிய பிற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜய் பேட்டி.
9."வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் 814 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" இலட்சிய தி மு க தலைவர் விஜய சிலம்பரசன் அறிவிப்பு.//
அடிபொழி ஆசானே...
//10."அரசியலில் இறங்குவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்" தந்திரன் பட இசைச் சுருள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.//
ஒண்ணாங்கிளாசாணும்....
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
///10."அரசியலில் இறங்குவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்" தந்திரன் பட இசைச் சுருள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.//
தலைவரே.எனக்கு இது ரொம்ப பிடிச்சுது..நல்லாயிருக்கு..வாழ்த்துக்கள்
உங்கள் முதல் வருகைக்கும்
ரசிப்புக்கும்
விடுபட்டுப் போனவை இதோ
மத்திய நிதி அமைச்சர் ஜே கே ரித்தீஷ்
மாநில நிதி அமைச்சர் திரிஷா
Every one will change their mind... But Thalaivar will never change his statements...
Congrats
Top 10!
10th is Top Most!
//10."அரசியலில் இறங்குவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்" தந்திரன் பட இசைச் சுருள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.//i like it
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க